Thursday, October 23, 2008

முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு

முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு



முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு


எதிர்வரும் ( 25 அக்டோபர் ) சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில்


பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற நமது மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா


மடிக்கணினி ( லேப்டாப் ) இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு வழங்குதல்


'பச்சை இரத்தம்' ( இந்திய விடுதலைப்போரில் பங்கேற்ற இந்திய முஸ்லிம்கள் பற்றியது ) நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.


இந்நூல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.


இவர் ஏற்கனவே என்ன படிக்கலாம் ? , ராமர் பாலமா - ஆதாம் பாலமா ? என்பன போன்ற நூல்களை எழுதியுள்ளார்.


இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஜில்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி,முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபாபுரம் பள்ளிவாசல் தலைவர் செய்யது இப்ராஹிம், கல்விக்குழுத்தலைவர் திவான் முஹம்மது, மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால்நாசர், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ். லியாக்கத் அலி, வரிசை முஹம்மது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என். காதர்ஷா, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ, டாக்டர் குலாம், டாக்டர் ஷேக் முகைதீன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர்.


லெப்டினட் பேராசிரியர் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்துகிறார். பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.


நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிக் பயிற்சி மைய முதல்வர் ஏ. சுல்தான் அலாவுதீன் சேட் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


மேலதிக விபரங்களுக்கு 94 880 23 199 அல்லது muduvaihidayath@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, October 7, 2008

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் ( State Bank Of India ) திங்கட்கிழமை ( 06 அக்டோபர் 2008 ) அன்று காலை முதல் பி.எஸ்.என்.எல். டவர் இணைப்பு தொடர்பு கிடைக்காததால் வங்கிப் பணிகள் முடங்கி விட்டன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடிக்க முடியாமலும், செலுத்த முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக கிளை மேலாளர் எஸ். முத்துராமன் அவர்கள் கூறுகையில் பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைக்காததால் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை எனத் தெரிவித்தார். தொலைத்தொடர்பு ஊழியர்கள் இணைப்பு கிடைக்க பெரிதும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு பெரிதும் வருந்துவதாகக் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் முதுகுளத்தூர் மட்டுமன்றி முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வந்து காலை முதல் காத்திருக்கின்றனர். கடும் வெயில் மற்றும் மின்வெட்டு இவற்றுக்கிடையே தாங்கள் போட்ட பணத்தை எடுக்க தலைவிதி எனக் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் முதியோர் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழாவண்ணம் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.