Sunday, August 10, 2008

முதுகுளத்தூர் மவ்லவி அப்துல் காதர் ஆலிம் இல்லத் திருமணம்! பேராசிரியர் கே.எம்.கே. தலைமையில் நடக்கிறது !!




துபாய் அமீன் சகோதரர் திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

www.mudukulathur.com


மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிமின் புதல்வரும்,துபாய் அமீன் சகோதரரும், முதுகுளத்தூர் திடல் மன்சூர் அஹமது சேட் ( முதுவை ரோஸ் லேடிஸ் கார்னர் ஹபிபுல்லாஹ் சகோதரர் ) மைத்துனருமான

ஏ. ரஸீன் அஹமது பி.இ. ( பொறியாளர், Bemaco - கத்தார் ) மணமகனுக்கும்

ஸ்ரீ வில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன் அவர்களின் மகளுக்கும் திருமணம் இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏ.எம். முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில் 20.08.2008 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ. அவர்கள் தலைமை தாங்க இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி, டாக்டர் ஏ. அமீர்ஜஹான், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ. முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஈ, முஸ்லிம் லீக் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துஆ செய்ய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், 41 அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு, மதுரை 625 001
தொலைபேசி : 0452 - 2337990 / 98 421 58 543

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

சாலை வசதி செய்துதராத தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு; இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டம் ஏனாதி ஊராட்சியை சேர்ந்தது பொந்தம்புளி கிராமம் இங்கு 100 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த கிராம மக்களின் பிரதானதொழில் விவசாயம் ஆகும். இதனால் ஊர் மக்கள் கிராமத்திலேயே உள்ளனர். ஆனால் இவர்களால் எங்குமே வெளியில் செல்ல முடிவதிலை. காரணம் சாலை வசதி இல்லாததே இக்கிராம மக்களும் அனைத்து அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் சாலை வசதி கோரி மனு கொடுத்தும் பயனில்லை. ஒரு ஊரே எந்தவித வசதியும் இன்றி தீவு போல் காட்சியளிக்கின்றது. அரசும், அதிகாரிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15_ந் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.

மேலும் தங்கள்ளது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர்.