Monday, August 4, 2008

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு
பரமக்குடி,ஆக.4_

பரமக்குடி, ரேமா கல்வி மையத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் புதியத படிப்பான மழலையர் நல கல்வியியல் பட்டயப் பயிற்சி அறிமுக விழா நடைபெற்றது.

இப் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை ரேமா கல்வி மைய முதல்வர் வில்சன் மாணவிகளுக்கு வழங்கி பயிற்சி பற்றி அறிமுகம் செய்து கூறியதாவது

ப்ரீ.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு மாண்டிச்சோரி முறை கே.ஜி முறை மற்றும் நர்சரி முறையில் விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் சிந்தனை ஆற்றலை தூண்டுவது ஆங்கிலத்தில் பேசும் திறமை வளர்ப்பது எப்படி என இப் பயிற்சியில் கற்றுத்தரப்படும்.

மேலும் பயிற்சியில் சேர்ந்த மாணவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கற்பிக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கும் என்றும் கூறினார்.

இப் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ப்ரீ.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

முதுவை முகவரிகள்

முதுவை மெடிக்கல்ஸ்
இங்கிலீஸ் மருந்து வியாபாரம்
8/258 மெயின் பஜார்
தேரிருவேலி முக்கு ரோடு
முதுகுளத்தூர் 623 704
தொலைபேசி : 04576 - 222177