Monday, September 1, 2008

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா இணைந்து சுதந்திர தின விழா,தேசிய விழிப்புணர்வு விழா, மத நல்லிணக்க விழா, இளைஞர் எழுச்சி விழாஆகியவற்றை கொண்டாடும் நோக்கமாக ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.நகர் பிரமுகர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர் தேவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் சி.பி.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன்,கடலாடி ஒன்றிய குழு தலைவர் த.ராஜசேகர்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.கே.முனியசாமிபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்க செயலாளர் கவிஞர் செ.செந்தில்,தேசிய வலிமை மாத இதழ் ஆலோசகர் கோச்சடை முத்துராமலிங்கம்,நேதாஜி தேசிய இயக்க செயலாளர் பொறியாளர் சு.க.கமல் ஆனந்த்,சுதந்திர போராட்ட தியாகி முனியசாமி,முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்,காங்கிரஸ் பிரமுகர் ரு.முத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம் பெருமாள்,கடலாடி வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராமலிங்கம்,த.சக்திவேல்,சி.பி.எம்.தாலுகா செயலாளர் வி.மயில்வாகணன்,முன்னால் இளாஞர் நற்பணி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மன்ற செயலாளர் முகாரா என்ற ராமர் தொடக்கம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2007_2008ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அரியநாச்சி,10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சசிரேகா மற்றும் பேச்சுப்போட்டி,கவிதை,கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,காமராஜர் நர்சரி பள்ளி,சரஸ்வதி வித்யாலயா மாணவ_மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏழை எளிய மாணவ_மாணவிகளுக்கு மன்றத்தின் சார்பாக ஈலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவின்போது சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் ஆண்களா? பெண்களா என்ற தலைப்பில் சிந்தறை பட்டிமன்றம் நடைபெற்றது.ஆண்களே என்ற தலைப்பில் ஜாஹிர்உசேன்,கார்த்திகேயனும், பெண்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன்,காஜாமுகைதீன் ஆகியோர் வாதாடியதில் நடுவர் லட்சுமணன் ஆண்களே சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.

பல மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திராளாக கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் மன்ற நிராவாக குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றியுரை நிகழ்த்தினார்.

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.

முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.