Thursday, February 12, 2009

மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: கீழக்கரையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட

மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: கீழக்கரையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட
40 பேர் கைது


கீழக்கரை,பிப்.13-

கீழக்கரையில் மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயான சுற்றுச்சுவர்

கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் நகராட் சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றியுள்ள இடங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் நகரசபைக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அந்த இடம் நகராட்சிக்கு சொந்த மானது என்று தீர்ப்பு வழங் கப்பட்டது.

இந்த நிலையில் நகராட் சியின் நடவடிக்கையின் பேரில் மயான பகுதியில் நகர் அபிவிருத்தி பணிகளை மேற் கொள்ளவும், சுற்றுச்சுவர் கட் டவும் அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் நகர சபை சார்பில் அந்த பகுதி யில் மயான சுற்றுச்சுவர் கட் டும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

எதிர்ப்பு

இதற்கு எதிர்தரப்பினர் சுற்றுச்சுவர் கட்ட ஆட்சே பனை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 21-வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அப்பகுதியில் திரண்டு சுற்றுச்சுவர் கட்ட விடாமல் தடுத்தனர். மேலும் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவரை இடித்து சேதப்படுத் தினர்.

இதுதொடர்பாக கட்டிட பணிகளை மேற்கொண்டி ருந்த கொத்தனார் கோபியர் மடத்தை சேர்ந்த மனோகரன் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் எதிர்தரப்பினர் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் முருகன் கோவில் எதிர்புறம் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கைது

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சேக்தாவூது அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கு வழக்கு பதிவு செய்து இந்த இரு புகார்களின் அடிப் படையில் கவுன்சிலர் மணி கண்டன் மற்றும் 14 ஆண்கள், 26 பெண்களை கைது செய் தார்.

இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.