Monday, February 23, 2009

முள்வேலி

முள்வேலி

கப்பலோட்டியவனின் கதை அறிவீர்
கப்பலில் ஓடியவன் காதை இது
தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட
தவளைகள்தான் நாங்கள்

சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள்
இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள்
இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள்
இதயமெல்லாம் நினைவுகளையும்

நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து
நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து
நீள நெடுகடல் தாண்டினோம்
பணமெனும் மாயனை ஆசையெனும்

பேழையினுள் சிறை பிடிக்க துடிக்கிறோம்
சேமித்து விட நினைக்கிறோம் அதனை
சேர்த்துவிட துடிக்கின்றோம்
பணம் பத்தும் செய்யும் அல்லவா?

பொழுதுகளோ புலர்ந்திங்கு மறைகின்றது
பொல்லாத விதி இங்கு தொலைகின்றது
எழுதுகோல் என்துன்பம் வரைகின்றது – அதை
ஏற்கின்ற இவ்வேடும் அழுகின்றது

காலமதை சாலச்சிறந்த மருத்துவர் என்பர்
காலமதே காலனாய் எமை மதிக்கின்றதே
ஒன்றுக்கு 13 என்றதால்
ஓடோடி வந்தோம் இங்கு – ஆனால்

முள் ஒன்று தைத்திடினும் இங்கு
மாராது 13முறை வலிக்கிறதே
விளக்கின் ஒலியின் விட்டில்கள் நாங்கள்
வானத்தை எட்டிவிடப் பறக்கும் ஈசல்கள்

எறியும் மெழுகு ஒலித்திடும் - ஆனால்
இருளில்தான் நிற்கும் அதன் பாதம்
ஏற்றிவிடும் ஏணி உடையும்வரை
ஏறுவதில்லை பரண்மேலே

வையகம் சொல்ல மறந்த மறைத்த
வேதனை காவியம் இது
புத்தாடை பட்டாடை கண்டதால்
புதிய நறுமனம் கமழ்ந்ததால்

உண்மை கசந்துவிட்டது அது
ஒளிந்து கொண்டு விட்டது
இலைமறை காய்தான் அது
என்றாவது உலகிற்கு வெளிப்படும்

வெளிநாடுகளில் காசுக்காக வாழ்ந்து
ஓடுகளாய் உடலும் உள்ளமும் தேய்ந்து
உலகம் விடைதரும் தருனம் அதில்
உள்ளுர் வாசிகளாய் ஊர் திரும்ப

உழைப்பின் கூலியாய் பரிசாய்
உன்னிடத்தில் எந்சுவதென்ன?
வியாதி வறுமை வெறுமை – நீ
அருகே இருந்து வளர்க்காததால்

உனக்கே அடங்கா உன் பிள்ளை
ஒன்வேயில் வரும் என் ஆர் ஐ
ஊரில் இருப்போருக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்
ஊராருக்கோ வேஸ்ட் லக்கேஜ்

வையகம் கண்களால் கானும் உண்மை
விழிகளால் காண்பதை நாவால் மொழிவதில்லை
உலகிற்கு உனை அறிமுகம் செய்த
ஆசையாய் ஈன்றெடுத்த உந்தன்

பெற்றோர்கள் மரண படுக்கையில்
புரண்டாலும் மரணமே எய்திடினும்
பிள்ளையாம் உனை கண்டுவிட துடித்தாலும்
விடுப்பும் விமானமும் கிடைத்தால்தான் உண்டு

வருமானம் எய்தும் உந்தன்
உணவு உடை உரைவிடம் எப்படி?
வெளிநாடாய் போனதால்
உன் சொந்தம் அதை அறியாது

தகர வீடுகள் சீட்டுக்கட்டுகளாய்
தரவாரியாய் ஒன்றன் மேல் ஒன்றாய்
அடிக்கி வைக்கப்பட்ட படுக்கைகள்
ஓரத்தில் ஏணிப்படிகள்

ஆறுக்கு மூன்று அறிவீர்களே
அதுதான் உணவும் உறங்கவும்
குளிர் காலத்தில் குளிக்க வெந்நீர் வேண்டுமா
கதிரவன் எழுவதற்கு முன்பு எழ வேண்டும்

தாமதமானால் தண்ணீரே கிட்டாது
பிரகெப்படி வெந்நீர்
30பேருக்கு மாதம் ஒரு சிலிண்டர்
எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம்

சிலிண்டர் தீரும் வரையில்
வாரம் இருநாள் கரண்ட் கட்
கோடை காலத்தில் பலமுறை பவர் கட்
மழை பெய்ததில்லை பெரும்பாலும்

பெய்துவிட்டால் தகர வீடுகள்
எல்லாம் மிதவை வீடுகளாய் ஆகிவிடும்
சம்பளம் கிடைக்கும் வருடத்தில்
சில தடவைகள் மட்டும்

ஓனர் டைம் நல்லா இருந்தால்
ஓவர் டைம் கூட கிடைக்கும்
அரபு மொழியை தாய் மொழியாய்
கொண்ட அனைவருக்கும் இவன் அடிமைதான்

அவன் பணியையும் இவன் சுமக்க நேரும்
இவையெல்லாம் பொய்யல்ல நிஜம்
ஆதிகாலை எழுந்து குளித்து
உணவிருந்தால் அதை அருந்தி

வேலையிடம் சென்று உழைத்து
விடுதி திரும்ப சொந்த பணிகள்
எல்லாம் சுமைகளாய் காத்திருக்கும்
அடுத்த வேளை உணவு வேண்டும்

அடுக்களையை தயார் செய்து
சமைத்து பசி ஆற்றி உடை துவைக்க
10 12 ஆகிவிடும் நாழிகை
ஏனிபடியில் ஏறி படுக்கையை

நாடும் பொழுது பக்குவமாய் வந்து
நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும்
மாதம் முதல் தேதி என்றால்
தொலைபேசிக்கு முதலிடம் அங்கு

பேசினால் காசு கரைகிறது
பேசாவிட்டால் இதயம் கரைகிறது
சோதனையின் சொந்தக்காரர்கள் நாங்கள்
வேதனையின் மொத்த குத்தகைக்காரர்கள்

மூன்று ஆண்டுகள் கழிந்தால்
மூன்று மாத விடுமுறை
அவை விடுமுறை அல்ல
ஆயுள் கைதிகளின் பரோல்கள்

பிரயான தேதி நெருங்கிவிட்டால்
பித்தான நெஞ்சம் தொலைப்பது
மிச்சம் மீதி இருந்த கண் தூக்கத்தை
மலை ஏறுபவன் இதயம் இலேசாகும்

விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்
சம்பாதித்து விட்டு வருபவன் இங்கே
செய்தே தீர வேண்டிய பணிகள்

உற்றார் சுற்றார் அனைவரையும்
கொடுத்து திருப்தி படுத்த வேண்டும்
பணமாக பொருளாக உணவாக உடையாக
மனித மனம் அல்லவா

என்றைக்கு திருப்தியிரும் அது
ஒருபோதும் அடைவதில்லை
எழுதி தொடர்ந்தால் மலை முகடுகளும் தாழ்வுரும்
நீ வாகன ஓட்டியாய் இருந்திருந்தால்

விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டால்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்
நீதான் குற்றவாளி என்று

திருடன் உன்னிடத்தில் வந்து தாக்க
தற்காப்புக்கு நீ அவனை தாக்கினாலும்
சட்டம் வெளிநாட்டவனாம் உன்னைத்தான்
குற்றம் சுமத்தி சிறைப்படுத்தும்

உதாரணங்கள்தாம் இவை எல்லாம்
தொடரும் ரணங்கள் எண்ணற்றவை
இவை நமக்கு நாமே
இட்டுவிட்ட முல்வேழியாகும்

காலங்களும் சோகங்களும்
தொடர்கதையாகும் நமக்கு
கால சக்கரம் விடைபகரட்டும்
நாளை சமூகமாவது நல்வழி வாழட்டும்

முதுவை சல்மான்
ரியாத்

Saturday, February 21, 2009

முதுகுளத்தூரில் சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு இலவச கணினி பயிற்சி

முதுகுளத்தூரில் சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு இலவச கணினி பயிற்சி

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
சார்பில் முதுகுளத்தூரில் இந்த வருடத்திற்கான(2009) இலவச கணிப்பொறி
பயிற்சி முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் வரும்
25-பிப்ரவரி-2009 புதன் கிழமை M.S.Office and Tally க்கு15 நபர்களும், C
and C++ படிக்க 10 நபர்களும் பயிற்சி ஆரம்பமாக உள்ளது. படிக்க
விருப்பமுள்ள தகுதி உள்ளவர்கள் முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர்
கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிக்கவும்.
தகுதி:
1) குறைந்தது 10 வது பாஸ் அல்லது பெயில்
2) வருட வருமாணம் ஒரு லட்சம்
3) முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர் மட்டும்

>
> தகவல் :
>
> A.Kader Mohideen
> CSC Computer Education
> Mudukulathur
> kader.cworld@gmail.com
>

Thursday, February 19, 2009

ராமநாதபுரம் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது போகலூர்,முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வட்டாரத்திலும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

மேலும் தற்போது கமுதி வட்டாரத்திலும் செயல்பட உள்ளது.கிராமப்புறங்களில் வறுமையை குறைத்து வாழ்வாதார வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் வளமையை பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் வருகின்ற 21.02.09 அன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் முதுகுளத்தூர் டி.ஈ.எல்.சி. பள்ளியில்,படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை வழங்க பல முன்னனி நிறுவனங்களான சிசிசி லிமி டெட் சென்னை,எஸ்.பி.அப்பெரல்ஸ் லிமிடெட் கோவை,டி.வி.எஸ். சென்னை,இந்தியா பிஸ்டன்ஸ் லிமிடெட் சென்னை,சமுதாய கல்லூரி சிவகங்கை,ஐஐடி சென்னை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் வட்டாரங்களான போகலூர்,முதுகுளத்தூர்,பரமக்குடி மற்றும் கமுதி ஆகிய பகுதிகளிலுள்ள ஐடிஐ மற்றும் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதுகுளத்தூர் சி.எஸ்.சி. நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

முதுகுளத்தூர் சி.எஸ்.சி. நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ் நாடு அரசின் தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் முதுகுளத்தூரில் இலவச கணிப்பொறி பயிற்சி நமது ஜமாஅத்தையும், நமது ஊரையும் சேர்ந்த பிளஸ்2 முடித்த 75 முஸ்லிம் மாணவ, மாணவியர்களுக்கு முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் பயிற்சி வழங்கி தமிழ் நாடு அரசின் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று 18-02-2009 புதன் மாலை 5.30 மணியளவில் முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி.எஸ்.அஹமது பசீர் ஆலிம் தலைமையில், முதுவை கவிஞர் ஹாஜி.உமர் ஜஃபர் ஆலிம் அவர்கள் கிராஅத் ஒத துவங்கியது.

ஹாஜி.எஸ்.அஹமது பசீர் ஆலிம் அவர்கள் தலைமையுரையில் நமது பெண்கள் உயர்கல்வியில் எவ்வளவு உயர்ந்த படிப்பாக இருந்தாலும் அவசியம் படிக்க வேண்டும் ஆனால் நமது கலாச்சாரம், நாம் முஸ்லிம் என்ற தனி தன்மையை எந்த இடத்திலும் நாம் விட்டு விட கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

முதுவை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் துரைபாண்டி, இஸ்லாம் பெண்கள் கல்விக்கு தரும் முக்கியத்தையும், திருமணம் முடித்த பின்னரும் உயர்கல்வியில் ஆர்வமுடன் கம்ப்யூட்டர் கல்வி பயின்றதை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்கள்.

முதுவை கவிஞர் ஹாஜி.உமர் ஜஃபர் ஆலிம் அவர்கள் கம்ப்யூட்டர் பரவலாக எல்லா இடத்திலும் கட்டாய பயன்பாட்டில் உள்ளது அதற்கு அரசு உதவியுடன் நமது பகுதியில் தரமான கம்ப்யூட்டர் கல்வியை ஹூமாயூன் வழங்கிய போதிலும், இத்துடன் முற்றுபுள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து திறமையை கம்ப்யூட்டர் பயன்பாட்டில் வளர்த்து கொள்ள வலியுறுத்தி பேசினார்கள்.

தேசிய நல்லாசிரியர் டாக்டர் ஹாஜி எஸ்.அப்துல் காதர் அவர்கள் அணைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாரட்டி பேசியதவது.
" நமது சமுதாயத்தில் பெண்கள் 1972 வரை 8ஆம் வகுப்புக்கு மேல் படிப்பது குறைவு, நமது பள்ளியில் 10ஆம் வகுப்பு வந்த பின் 10ஆம் வகுப்பு வரையிலும், அதை தரம் உயர்த்தி 12ஆம் வகுப்பு ஆக்கிய பின் நமது சமுதாய பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி பெறவும், இது போன்ற அரசு உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி பெறவும் தகுதி பெற்ற நீங்கள், உங்கள் குழந்தைகளை அதிக அளவில் உயர் கல்வி பெற செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சான்றிதழ் பெற்ற தாங்கள் வசதி பட்டால், கம்ப்யூட்டர் வாங்கி பயன்படுத்தி குழந்தைகளின் அறிவாற்றலை உயர்வடைய செய்ய வேண்டும்" என்றார்கள்.

முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவன நிர்வாகி ஏ.காதர் முகையதீன் நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

Wednesday, February 18, 2009

இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் பொது தமிழ் கையேடு நூல் வெளியீடு

இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் பொது தமிழ் கையேடு நூல் வெளியீடு
இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் பங்கேற்பு

இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி ஆடிட்டோரியத்தில் 19.02.2009 வியாழக்கிழமை “பொத்தமிழ் கையேடு” எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.

இந்நூலை டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியரும், ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருமான முனைவர் பேராசிரியர் ஆபிதீன் மற்றும் பேராசிரியர் இப்ராஹிம் ஆகியோர் தொகுத்தளித்துள்ளனர்.

இது பேராசிரியர் ஆபிதீனின் ஐந்தாவது நூலாகும். இந்நூல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், பல்கலைக்கழக மானியக் குழு ( யுஜிஸி ) உள்ளிட்ட தேர்வுகளுக்குப் பயனளிக்கும் வண்ணம் ஏ4 அளவில் 420 பக்கங்களைக் கொண்டது.

இந்நூலை இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் வெளியிட நூலின் முதல் பிரதியை சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட் காலத் தலைவர் எஸ். தஸ்தகீர் சாஹிப் பெற இருக்கிறார். இத்தகவலை பேராசிரியர் எஸ். ஆபிதீன் தெரிவித்தார்.

விழாவில் கல்லூரி நிர்வாகிகள், முதல்வர் முனைவர் செய்யது ஹுசேன், பேராசிரியர்கள், மாணாக்கர்கள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோரது முயற்சிக்கு வாழ்த்துக்க்களைத் தெரிவிப்போம்.

Assalamu Alaikkum

For your kind information , on 19th February , 2009 Thursday , I publish my fifth book entitled , “ POTHUTHAMIL KHAIYEADU” (Two authours Abideen and IBRAHIM ) in Ilayangudi Dr.Zakir Husain College Auditorium . The book gives the Knowledge for the TNPSC , UPSC , UGC ( tamil subject ) examinations and question patterns of previous years TNPSC examinations. The book has about 420 pages in A4 Size.

The book is going to be released by Alhaj S.M. HITHAYATHULLAH General Secretary of ISLAMIYA TAMIL ILAKKIYAKALAGAM Besides ALHAJ S. THASTHAHIR , Life time President of Islamiya Hr.Sec School , Sitharkottai, is going to be received the first copy of the book.

please pass the news to ours.

abideen222270@yahoo.com
99658 9270

Saturday, February 14, 2009

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


ராமநாதபுரம்,பிப்.14-

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர், வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்ற தேர்தலை வருகிற மேமாதம் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்யல்பட்டு வருகிறது. இந்த தேர்தலையொட்டி இந்தியாவில் உள்ள பாராளுமன்ற தொகுதிகள் மறுசீராய்வு செய்யப்பட்டு தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு மாற்றிஅமைக்கப் பட்டுள் ளன.

இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் கடலாடி, அருப்புக் கோட்டை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

இதில் தற்போது கடலாடி சட்டமன்ற தொகுதிநீக்கப்பட்டு முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர அருப்புக்கோட்டை தொகுதி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியுடனும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி சிவகங்கை பாராளுமன்ற தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக தற்போது திருச்சுழி சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதுவரை சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருவாடானைசட்ட மன்றதொகுதி தற்போது ராமநாதபுரம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்

இதன் படி தற்போது தொகுதி மறுசீராய்வுக்கு பின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம்,பரமக்குடி,திருச்சுழி,முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.இந்த தொகுதிகளுடன் ராமநாதபுரம்பாராளு மன்றதொகுதி வருகிற தேர்தலை சந்திக்கிறது. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின்ஆண், பெண் வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

பரமக்குடி(தனி) - ஆண் 92,692, பெண் 94,880 மொத்த வாக்காளர்கள் 1,87,572. திருவாடானை- ஆண் 96,330,பெண் 99,770 மொத்தம் 1,96,100. ராமநாதபுரம் -ஆண் 98,454,பெண்1,01,023 மொத்தம் 1,99,477. முதுகுளத்தூர் -ஆண்1,18,312,பெண் 1,18,995 மொத்தம் 2,37,307. அறந்தாங்கி- ஆண் 74,279,பெண் 76,964 மொத்தம் 1,51,243. திருச்சுழி-ஆண் 77,947,பெண்80,843 மொத்தம் 1,58,790.

இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 5,58,014 ஆண்களும் 5,72,475 பெண்களுமாக மொத்தம் 11 லட்சத்து 30 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

பாராளுமன்ற தேர்தலை யொட்டிராமநாத புரம் பாராளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாகஅமைக் கப்பட உள்ள வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

பரமக்குடி(தனி)- ஆண் 22,பெண் 22,பொது 189 மொத்தம்-233.திருவாடானை- ஆண் 42,பெண் 42,பொது 169 மொத்தம்- 253. ராமநாதபுரம் ஆண்53,பெண் 53, பொது 142 -மொத்தம் 248. முதுகுளத்தூர்- ஆண்37,பெண் 37,பொது 237 மொத்தம்- 311. அறந்தாங்கி ஆண் 22,பெண் 22,பொது 168 மொத்தம் 212. திருச்சுழி- ஆண் 23,பெண் 23,பொது 177 மொத்தம்- 223. இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஆண்,பெண் வாக்குச்சாவடிகள் தலா 199,பொது ஆயிரத்து 82-ம் ஆக மொத்தம் ஆயிரத்து 480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

Thursday, February 12, 2009

மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: கீழக்கரையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட

மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு: கீழக்கரையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட
40 பேர் கைது


கீழக்கரை,பிப்.13-

கீழக்கரையில் மயான சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயான சுற்றுச்சுவர்

கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் நகராட் சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றியுள்ள இடங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் நகரசபைக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அந்த இடம் நகராட்சிக்கு சொந்த மானது என்று தீர்ப்பு வழங் கப்பட்டது.

இந்த நிலையில் நகராட் சியின் நடவடிக்கையின் பேரில் மயான பகுதியில் நகர் அபிவிருத்தி பணிகளை மேற் கொள்ளவும், சுற்றுச்சுவர் கட் டவும் அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் நகர சபை சார்பில் அந்த பகுதி யில் மயான சுற்றுச்சுவர் கட் டும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

எதிர்ப்பு

இதற்கு எதிர்தரப்பினர் சுற்றுச்சுவர் கட்ட ஆட்சே பனை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 21-வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அப்பகுதியில் திரண்டு சுற்றுச்சுவர் கட்ட விடாமல் தடுத்தனர். மேலும் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவரை இடித்து சேதப்படுத் தினர்.

இதுதொடர்பாக கட்டிட பணிகளை மேற்கொண்டி ருந்த கொத்தனார் கோபியர் மடத்தை சேர்ந்த மனோகரன் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் எதிர்தரப்பினர் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் முருகன் கோவில் எதிர்புறம் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

கைது

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சேக்தாவூது அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கு வழக்கு பதிவு செய்து இந்த இரு புகார்களின் அடிப் படையில் கவுன்சிலர் மணி கண்டன் மற்றும் 14 ஆண்கள், 26 பெண்களை கைது செய் தார்.

இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tuesday, February 10, 2009

ஏர்வாடியில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

ஏர்வாடியில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

www.muduvaivision.com


கீழக்கரை, பிப். 9: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ் குமார் தலைமை வகித்தார். ஏர்வாடி ஊராட்சிமன்றத் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ. 6.5லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தை தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் திறந்து வைத்தார்.

ஏர்வாடி தர்ஹா நிர்வாக சபையின் தலைவர் அமீர்ஹம்சா, கடலாடி வட்டாட்சியர் சந்திரன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் முனியாண்டி, கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் புருஷோத்தமன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி தர்ஹா புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலிருந்து வரும் யாத்ரிகர்களின் வசதிக்காக போதுமான இடவசதி இன்றி இருந்த பஸ் நிலையம் தர்ஹாவின் தென்பகுதியில் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது.

இங்கு ரூ. 6.5லட்சம் செலவில் பயணிகள் இருக்கையுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

Sunday, February 8, 2009

முதுகுள‌த்தூரில் ப‌ள்ளி மாணாக்க‌ர்க‌ளுக்கு தீனிய்யாத் தேர்வு

முதுகுள‌த்தூரில் ப‌ள்ளி மாணாக்க‌ர்க‌ளுக்கு தீனிய்யாத் தேர்வு

முதுகுள‌த்தூரில் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் ப‌யின்று வ‌ரும் மாணவ‌, மாண‌விய‌ருக்கான‌ தீனிய்யாத் தேர்வு 08.02.2009 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து.

இத்தேர்வுக‌ளுக்கு முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாமும், டியூச‌ன் சென்ட‌ரின் தாய‌க‌ப் பிர‌திநிதியுமான‌ ம‌வ்ல‌வி அல்ஹாஜ் எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம் ம‌ன்பஈ த‌லைமைக் க‌ண்காணிப்பாள‌ராக‌ இருந்து ந‌ட‌த்தினார்.

திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌ஈ தேர்வுக‌ள் சிற‌ப்புற‌ ந‌டைபெற‌ உறுதுணையாய் இருந்தார்.

அத‌னைத் தொட‌ர்ந்து இவ்வாண்டு ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் ப‌ணிரெண்டாம் வ‌குப்பு பொதுத் தேர்வு எழுதும் மாண‌வ‌, மாண‌விக‌ளுக்காக‌ சிற‌ப்பு துஆ செய்ய‌ப்ப‌ட்ட‌து. நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ ஒருங்கிணைப்பாள‌ர் ஆசிரிய‌ர் ஏ. முஹம்ம‌து சுல்தான் அலாவுதீன் செய்திருந்தார்.

இப்பணிகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்து துஆ செய்யப்பட்டது.

Thursday, February 5, 2009

முதுகுளத்தூரில் மு.க.அழகிரி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்

முதுகுளத்தூரில் மு.க.அழகிரி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்


www.muduvaivision.com


திமுக தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரி 58வது பிறந்த நாளையட்டி முதுகுளத்தூரில் நாளை (பிப்.7ல்) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியின் 58வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதுகுளத்தூரில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மொழிப் போர் தியாகிகள் மற்றும் நலிவுற்ற கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தங்கம்தென்னரசு, பெரியகருப்பன், நடிகர் முகவை குமார், ஒன்றியச்செயலா ளர் முனியசாமி, நகர் செயலாளர் திவான்முகமது பங்கேற்கின்றனர். நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாசிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

Tuesday, February 3, 2009

4 ஆண்டுகளாக காணாமல் போனவர் ஒரிசா சிறையில் இருப்பதாக தகவல் மீட்டு தருமாறு கலெக்டரிடம் தாய் மனு

4 ஆண்டுகளாக காணாமல் போனவர் ஒரிசா சிறையில் இருப்பதாக தகவல் மீட்டு தருமாறு கலெக்டரிடம் தாய் மனு


ராமநாதபுரம்,பிப்.3-

பரமக்குடி அருகே 4 ஆண்டு களாக காணாமல் போனவர் ஒரிசா மாநில சிறையில் இருப்ப தாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தனது மகனை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் தாய் மனு கொடுத்தார்.

மனு

பரமக்குடி அருகே உள்ள மேலச் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறு முகம். இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகன் பாஸ்கரன். இவர் கடந்த 13.9.2005 முதல் காணாமல் போய்விட்டார். இதுதொடர்பாக மல் லிகா பரமக்குடி போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 4 வருடங்களாகியும் பாஸ்கரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி பாஸ் கரனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பாஸ்கரன் ஒரிசா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள் ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள தனது மகனை மீட்டு தரக்கோரி மல்லிகா நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத் தார்.

Sunday, February 1, 2009

முதுகுளத்தூர் அருகே இருதலைமணி பாம்பை பிடித்து வனச்சரக ஊழியர்கள் காட்டில் விட்டனர்

முதுகுளத்தூர் அருகே இருதலைமணி பாம்பை பிடித்து வனச்சரக ஊழியர்கள் காட்டில் விட்டனர்

முதுகுளத்தூர் அருகே வயல்வெளியில் இருதலைமணி பாம்பை வனச்சரக ஊழியர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்ஞீர் மற்றும் அஞ்சதாம்பல் கிராமத்திற்கும் இடையே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில் கூலி வேலை செய்யும் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.அப்போது அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இருதலைமணி பாம்பு ஒன்று உயிருடன் கிடந்துள்ளது.

இது குறித்து வனச்சரக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வன அதிகாரி ஜெய்லாவுதீன்,வனச்சரக அலுவலர் பண்டாரம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து இருதலைமணி பாம்பை பிடித்தனர்.பாம்பை பிடிக்க உதவிய எட்டிசேரி லிங்கத்திற்கு ரூ.200 பரிசாக வழங்கினர்.

பிடிபட்ட பாம்பை வனச்சரக ஊழியர்கள் பிடித்து மேலச்செல்வனூர் வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.