Friday, August 8, 2008

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

ராமநாதபுரம், ஆக.8: மாவட்ட அளவிலான யோகாசனப்போட்டி ஆக.16ம் தேதியன்று ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்க பயிற்சியாளர் காசிநாததுரை கூறியதாவது: மாவட்ட அளவிலான யோகாசன போட்டி வரும் 16ம் தேதி துவங்குகிறது. மாவட்ட யோகாசன சங்கமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் இப்போட்டி ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம். 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

போட்டி விபரம் அறிய 9865506506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உப்பு தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா

உப்பு தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா

கடலாடி, ஆக.8: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் உப்பு தொழிற் சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா நடந்தது. கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு உப்பு நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குநருமான விஜயகுமார், முதுநிலை மேலாளர் சுந்தரராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசியதாவது:

உப்பு நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாலிநோக்கம் ஓடைக்குளம் சாலையை உப்பு நிறுவனம் சார்பில் பராமரிக்கப்படும். டிஎம் கோட்டை, கரிசல்குளம், செவல்பட்டி, புச்சாபுரம் சாலைகளை சீரமைக்க ரூ.4.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடஞ்சேரி, தத்தங்குடி சாலையை சீரமைக்க சுனாமி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உப்பு நிறுவன ஊழியர்கள் அனைவரும் அரசு தொழிலாளர் நலவாரியத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசுகையில், ÔÔவாலிநோக்கம் உப்பு தொழிற்சாலையில் 700 டன் உற்பத்தி நடந்தது. உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தாமல் கிடக்கிறது. அதனை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 75 டன் உற் பத்தி கூடுதலாக கிடைக்கும்,ÕÕஎன்றார்.