Thursday, September 25, 2008

முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில் ரத்ததான முகாம்

ரத்த தான முகாம்

ராமநாதபுரம், செப். 24: முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடந்தது.

கீழத்தூவல் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு முதல்வர் எஸ். கோவிந்தராஜன் தலைமையும், தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் முன்னிலையும் வகித்தனர். திட்ட அலுவலர் கே. மலர்விழி வரவேற்றார். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் சகாய் ஸ்டீபன்ராஜ், மருத்துவர் ராஜரெத்தினம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். பேராசிரியர் எஸ். மாடசாமி நன்றி கூறினார்.

Wednesday, September 24, 2008

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

www.muduvaivision.com


ராமநாதபுரம், செப். 23: தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.9.08 என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வெளியான செய்திக் குறிப்பு:

இயக்குநர் மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவல் பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வு எழுத முழுநேரம், பகுதி நேரம் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினரைச் சேர்ந்தோர் பட்டப்படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, நவம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கு, சென்னை அண்ணா நகரிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தின் முதல்வருக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 30.9.08.

இதற்கான நுழைவுத் தேர்வு, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், சிதம்பரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள பயிற்சி மையத்தின் இணையதளம் www.civil sercice coaching.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி


ராமநாதபுரம், செப். 23: பரமக்குடியில் மாணவர் இறந்தது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை முஸ்லிம்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.

பரமக்குடியில் செப். 18-ம் தேதி ராஜா மஸ்தான் (15) என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இந்நிலையில், அவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் முஸ்லிம்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

பின்னர், வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முன்னதாக, பேரணியில் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான், பேச்சாளர் பாளை. ரபீக், மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலர் முகம்மது ஜமால், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் ஆரிப்கான், மனித நீதிப் பாசறை மாவட்டச் செயலர் ஜெமீல், உலமாக்கள் சபை மாவட்டத் தலைவர் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பஜ்ருதீன், எமனேசுவரம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், நூருல்அமீன், வழக்கறிஞர் கமால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பேரணிக்கு மாவட்ட எஸ்.பி. கே.ஏ. செந்தில்வேலன் மேற்பார்வையில், டி.எஸ்.பி. பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பரமக்குடியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tuesday, September 23, 2008

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


ராமநாதபுரம்,செப்.24-

பரமக்குடி மாணவன் இறந்த சம்பவத்தில் குற்ற வா ளியை உடனே கைது செய்யக்கோரி ராமநாத புரம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அதி காரிகள் மாணவர்களி டம் சமரச பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர்.

மாணவன் சாவு

பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் ராஜாமஸ்தான் (வயது 15) மர்மமான முறை யில் இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பலியான மாணவன் தொடர்பான வழக் கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி நேற்று ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவ -மாணவிகள் திடீர் ஸ்டிரைக் கில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாண விகள் அனைவரும் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வந் தனர்.

மறியல்

அங்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் அனைவரும் கோஷமிட்ட னர். பின்பு சாலை மறியல் செய் வதென கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இது பற்றி தகவலறிந்ததும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வரு வாய் துறை அதிகாரிகள் கல் லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தரப்பில் குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வேண் டும், எப்.ஐ.ஆர். நகல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது குற்ற வாளிகளை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எப்.ஐ. ஆர், நகல் புகார் மனுதார ரிடமே வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் விளக்கி கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,
ஆர்ப்பாட்டம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


பரமக்குடி,செப்.24-

பரமக்குடி மாணவன் மர்ம சாவு சம்பவத்தையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பரமக்குடி பள்ளி மாணவன் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம் பவத்துக்கு கண்டனம் தெரி வித்தும், சம்பந்தப்பட்ட குற்ற வாளி மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பரமக் குடியில் ஆர்ப்பாட்டம் மற் றும் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று இஸ்லா மிய அமைப்புகள் அறிவித்தி ருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கம், முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து ஊர் வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் தரைப்பாலம், சின்னக்கடை, கீழ பள்ளி வாசல் தெரு, சுண்ணாம்பு காரத் தெரு, பஸ் நிலையம், ஆர்ச், காந்தி சிலை, உழவர் சந்தை, ஐந்துமுனை பகுதி, இளையான்குடி ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழி யாக பரமக்குடி தாலுகா அலு வலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து பர மக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை 2 நாட்களுக் குள் கைது செய்வோம் என்று கூறி இது வரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரை கண்டிக்கிறோம். இறந்த மாணவன் ராஜா மஸ்தான் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

மேலும் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றவாளியை கைது செய்யும் வரை இறந்த மாண வனின் உடலை வாங்க மாட் டோம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் பரமக்குடி தாசில்தார் அண்ணாமலையி டம் மனு கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தில் உலமாக் கள் சபை சார்பில் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் சார்பில் தசுருதீன், த.மு.மு.க. சார்பில் சலிமுல்லாகான், பாளை ரபீக், மனித நீதி பாசறை சார்பில் ஜமீல், மாவட்ட ஐக் கிய ஜமாத் சார்பில் முகமது ஜமால், தவ் ஹீது ஜமாத் சார் பில் ஆரிப், தேசிய லீக் சார் பில் நூருல் ஆலிம், ராமநாத புரம் நகரசபை உறுப்பினர் ராஜாஉசேன், எமனேசுவரம் ஜமாத் சார்பில் ஆலம், பரமக் குடி நகரசபை கவுன்சிலர் அப்துல் மாலிக், நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் துரைசாமி ஆகியோர் பரமக்குடியில் முகாமிட்டு இருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலை மையில் 13 இன்ஸ்பெக்டர் கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

விடுமுÛ
ஆர்ப்பாட்டத்தையொட்டி பரமக்குடி நகரில் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. மேலும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கீழ முஸ்லிம் நர்சரி பள்ளி, மேல முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, எமனேசுவரம் ஜவ்வாது புல வர் மெட்ரிக் பள்ளி உள்பட இஸ்லாமிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது.

Sunday, September 21, 2008

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடி செப் 22.

பரமக்குடியில் மர்மமாக இறந்த பள்ளி மாணவனின் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து விட்டன. ஆகையால், மாணவனின் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதி எமனேசுவரத்தை சேர்ந்தவர் ராஜா மஸ்தான்(15).இவன் பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 18ம் தேதி பள்ளிக்கு தேர்வு எழுத சென்றவன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் அவனது உடல் நேற்று காலை தண்றாதேவிப்பட்டிணம் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தனர்.பின்பு,மாணவனின் உறவினர்களும் முஸ்லீம் அமைப்புகளும் மாணவன் ராஜா மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளான் என்றும் உண்மை குற்றவாளியை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டம் செய்தனர்.பின்பு அவர்கள் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனர்.உடனே காவல் துறையினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குளிர்சாதனபெட்டி வரவழைக்கப்பெற்று அதில் மாணவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக இறந்த மாணவன் ராஜா மஸ்தான் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதைத் தொடர்ந்து பரமக்குடி மேலப் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் த.மு.மு.க,தவ்ஹீத் ஜமாத்,மனித நீதி பாசறை,தேசிய லீக்,உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இதில் இன்று(22ம் தேதி)மாலை 5 மணிக்குள் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யாமலும் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலும் 23 ம் தேதி காலை 10 மணிக்கு எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து பேரணியாக வந்து தாலுகா ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பங்கேற்க அழைப்பது என்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோர் நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இச்சம்பவத்தால் பரமக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

www.muduvaivision.com


தொகுப்பும் பதிப்பும் : கா. இளம்பரிதி
யாழ் மை 134 மூன்றாம் தளம்
தம்பு செட்டித் தெரு
சென்னை 600 001
பக்கங்கள் : 120
விலை : ரூ 70

முதுகுளத்தூர் கலவரம் குறித்து முக்கிய வரலாற்றுப் பதிவு இது. உதடசைந்தால் உயிர் போய்விடும் என்று உலகமே பயந்த காலத்தில், இந்த நூலின் மூலம் முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியை அன்றைக்கே தைரியமாகச் சொன்னவர் தினகரன்.

தலித்களுக்கு ஆதரவாக இந்த நூலை எழுதியுள்ளதன் மூலம் சாதி கடந்த மனசாட்சியாகத் திகழ்கிறார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். அவர் நடத்திய பத்திரிகையை மூட நேர்ந்தது மட்டுமல்லாமல், சொந்தச் சாதியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். 1958ல் வெளிவந்த இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து, மறுபதிப்பு செய்துள்ளனர் பதிப்பாளர் இளம்பரிதியும், பதிப்பாசிரியர் அ.ஜெகநாதனும்.

நன்றி ஆனந்த விகடன்
18.04.2007

Thursday, September 18, 2008

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்


www.muduvaivision.com

Thursday, September 11, 2008

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?
கலெக்டர் கிர்லோஷ்குமார் விளக்கம்


ராமநாதபுரம்,செப்.12-

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறு வது எப்படி? என்று கலெக்டர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித் துள்ளார்.

திருமண உதவி தொகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் ஒரு அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் நோக்கமே ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கல்வி நிலையை உயர்த்துதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பொற மணப்பெண் 10ம் வகுப்பு படித்திருக்க வேண் டும்.

18 முதல் 30 வயதுக்குள்ளும், பெற்றோரது ஆண்டு வருமா னம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகா மலும் இருக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் உதவி தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங் களை திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பும், அல் லது திருமணத்துக்கு முதல் நாள் வரையும் விண்ணப்பங் களை அளிக்கலாம்.

சான்றுகள்

விண்ணப்பத்தின் போது மணமகன், மணமகள் இரு வருக்கும் முதல் திருமணம் என்பதற்கான சான்று, மண மகளின் கல்வி தகுதி, மாற்று சான்றிதழ், சாதி, இருப்பிட, வருமான சான்றுகள், மண மகனின் வயது அல்லது கல்வி சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இவற்றுடன் பெற்றோர் மற் றும் மணமக்கள் புகைப் படம் ஆகியவற்றை சேர்த்து அந் தந்த வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் திருமணத் துக்கு முன்பு சமர்ப்பிக்க வேண் டும்.

குடும்ப தலைவர் இல்லை யெனில் விண்ணப்பத்துடன் கணவனின் இறப்பு சான்று அல்லது கணவனால் கைவி டப்பட்டதற்கான சான்று அளிக்கும் பட்சத்தில் தாயார் பெயரில் காசோலை, வரை வோலை வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் வெளி நாட்டில் வேலைபார்த்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப் படும். எனவே தகுதியுள்ள ஏழை பெண்கள் உரிய நேரத் தில் அனைத்து சான்றிதழ்க ளுடன் விண்ணப்பித்து பய னடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Wednesday, September 10, 2008

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு
கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்


ராமநாதபுரம்,செப்.10-

ராமநாதபுரம் மாவட்டத் தில் ரம்ஜான் பண்டிகை யையொட்டி 207 பள்ளி வாசல்களுக்கு 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறிய தாவது:- ராமநாதபுரம் மாவட் டத்தில் ரம்ஜான் பண்டி கையையொட்டி பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக சலுகை விலையில் பச்சரிசி ஒதுக்கீது செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட 207 பள்ளிவாசல்களுக்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 950 கிலோ பச்சரிசி வழங்கப்பட் டுள்ளது.

ராமநாதபுரம் தாலுகாவில் 85 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 650 கிலோவும், கடலாடி தாலுகா வில் 3 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 850 கிலோவும், திருவாடானை தாலுகாவில் உள்ள 34 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட் டுள்ளது.

பரமக்குடி

இதேபோல பரமக்குடி தாலுகாவில் 22 பள்ளிவாசல் களுக்கு 61 ஆயிரத்து 350 கிலோவும், முதுகுளத்தூர் தாலுகாவில் 18 பள்ளி வாசல் களுக்கு 1 லட்சத்து 42 ஆயி ரத்து 800 கிலோவும், கமுதி தாலுகாவில் 13 பள்ளி வாசல் களுக்கு 24 ஆயிரத்து 150 கிலோவும், ராமேசுவரம் தாலுகாவில் 5 பள்ளி வாசல் களுக்கு 8 ஆயிரத்து 550 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tuesday, September 9, 2008

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

கமுதி, செப். 8: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு, கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ். சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிவலிங்கம் வரவேற்றார்.

2007-2008-ம் ஆண்டில், கமுதி வட்டார அளவில் பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் சாதனை புரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான எம். ஜெரினா பேகம் (கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி), சுந்தரவடிவேல் (நீராவி தேவாங்கர் மேனிலைப் பள்ளி), அனிதா (கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், வட்டார நிர்வாகிகள் எஸ். நாகேந்திரன், ஏ.கே. சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், ஞானசங்கர், பொன்ராஜ், வள்ளியம்மாள், இளமுருகன், மாரிப்பாண்டி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வட்டாரச் செயலர் எஸ். முத்து நன்றி கூறினார்.

Sunday, September 7, 2008

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்


சென்னை, செப்.7-

சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான அமைப்பு

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் `பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்ïஸ்' (எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சுவாமி பூமானந்தாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கிளை தொடக்கம்

மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது, தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரம் இமேஜ் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நாடுகள் பயப்படும் அளவுக்கு இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்கநெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்கநெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.

டெல்லியில் மாநாடு

இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

ரூ.64 லட்சம் கோடி

சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் ஆகும். அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டாலே வட்டியே பல கோடி வரும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் செலுத்த தேவையில்லை. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும்.

இவ்வாறு சுவாமி பூமானந்தா கூறினார்.

ஊழலை ஒழிக்க முடியும்

மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறியதாவது:-

ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்றால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியல் ஊழல்தான்.

தேர்தல் நடைமுறையை திருத்தி அமைக்காவிட்டால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. வருமான வரிவிலக்கு பெறுவதற்காக லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.

இந்தியர்கள் பட்டியல்

சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான்.

இவ்வாறு விட்டல் கூறினார்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கூறும்போது, "டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி சுமார் 81/2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரெயில் நிலையங்களையும், ரெயில் வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி இந்த அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Monday, September 1, 2008

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா இணைந்து சுதந்திர தின விழா,தேசிய விழிப்புணர்வு விழா, மத நல்லிணக்க விழா, இளைஞர் எழுச்சி விழாஆகியவற்றை கொண்டாடும் நோக்கமாக ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.நகர் பிரமுகர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர் தேவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் சி.பி.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன்,கடலாடி ஒன்றிய குழு தலைவர் த.ராஜசேகர்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.கே.முனியசாமிபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்க செயலாளர் கவிஞர் செ.செந்தில்,தேசிய வலிமை மாத இதழ் ஆலோசகர் கோச்சடை முத்துராமலிங்கம்,நேதாஜி தேசிய இயக்க செயலாளர் பொறியாளர் சு.க.கமல் ஆனந்த்,சுதந்திர போராட்ட தியாகி முனியசாமி,முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்,காங்கிரஸ் பிரமுகர் ரு.முத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம் பெருமாள்,கடலாடி வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராமலிங்கம்,த.சக்திவேல்,சி.பி.எம்.தாலுகா செயலாளர் வி.மயில்வாகணன்,முன்னால் இளாஞர் நற்பணி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மன்ற செயலாளர் முகாரா என்ற ராமர் தொடக்கம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2007_2008ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அரியநாச்சி,10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சசிரேகா மற்றும் பேச்சுப்போட்டி,கவிதை,கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,காமராஜர் நர்சரி பள்ளி,சரஸ்வதி வித்யாலயா மாணவ_மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏழை எளிய மாணவ_மாணவிகளுக்கு மன்றத்தின் சார்பாக ஈலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவின்போது சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் ஆண்களா? பெண்களா என்ற தலைப்பில் சிந்தறை பட்டிமன்றம் நடைபெற்றது.ஆண்களே என்ற தலைப்பில் ஜாஹிர்உசேன்,கார்த்திகேயனும், பெண்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன்,காஜாமுகைதீன் ஆகியோர் வாதாடியதில் நடுவர் லட்சுமணன் ஆண்களே சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.

பல மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திராளாக கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் மன்ற நிராவாக குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றியுரை நிகழ்த்தினார்.

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.

முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.