Saturday, January 24, 2009

WALK IN INTERVIEW AT NATIONAL ELEVATORS (UAE)

WALK IN INTERVIEW AT NATIONAL ELEVATORS (UAE)

HVAC Engineer:
Graduate of Engineer & 2 years of experience in Chiller

HVAC Foreman:
Diploma holder or 4 years of experience in Chiller

HVAC Technicians:
ITI holder or 3 years of experience in the same field


Walk-in date: Sunday, 25 Jan, 2009
Time: 04:00 pm to 06:00 pm
Address: Corporate Office:
National Elevators & Central A/C FZE (National Est. Group)
Technology Park, RAK Free Trade Zone, Jazeera
Ras Al Khaimah, U.A.E.
Contact No.: 07-2446230 / 050-8314282
E-mail: hr@nationalestb.com
Website: www.NationalEstb.com

Thursday, January 22, 2009

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம்
துணை வேந்தர் கற்பககுமாரவேல் தகவல்


மதுரை,ஜன.23-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம் தொடங்கப்படும் என்று துணை வேந்தர் கற்பக குமாரவேல் கூறினார்.

ரூ.30 கோடி நிதி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கற்பக குமாரவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழக மானியக்குழுவினரால் 2007-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆற்றல்சார் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இந்த குழுவினரால் 9 பல்கலைக்கழகங்கள் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பல்கலைக்கழக மானியக்குழு 5 ஆண்டுகளுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் ஆண்டு ஒதுக்கீடாக ரூ.10 கோடியும், கூடுதலாக ரூ.5 கோடியும் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் மூல்சந்த் சர்மா தலைமையில் ஒரு வல்லுனர் குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 23(இன்று), 24, 25 ஆகிய நாட்களில் பார்வையிட இருக்கிறது. இந்த குழுவில் இந்தியாவில் பல மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்று உள்ளனர்.

பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கிய நிதியின் கீழ் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளது. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நவீன வசதிகள் பொருந்திய கணினி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

11/2 கோடியில் கருவிப்பணி மையம்

அடுத்த ஆண்டுகளுக்கு சுமார் ரூ. 3 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள கருவிகள் வாங்குவதற்கும் சுமார் 11/2 கோடி ரூபாய் மதிப்பில் கருவிப்பணி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும். ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில் ஒரு தகவல் மையம் உருவாக்கும் திட்டமும் உள்ளது. பல்கலைக்கழக ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ரூ.56 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயன்படும் சூழல்களை பல்கலைக்கழக வளாகத்தில் உருவாக்குவதற்காக ரூ.2 கோடி செல்விடப்பட உள்ளது. பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் படிக்கும்போதே ஊதியம் பெறுதல் திட்டம் ரூ.25 லட்சம் செலவில் நடைமுறை படுத்தப்பட்டு, இதன் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் ழுழுவதும் ரூ.1 கோடி செலவில் மின்னணு மயமாக்கப்பட உள்ளது.

ரூ.5 கோடியில் உள்கட்டமைப்பு

பல்கலைக்கழக துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கட்டிடங்களை புதுப்பித்தல், குடிதண்ணீர் வசதியை பெருக்குதல், மின்இணைப்புகளை புதுப்பித்தல், மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி- உபகரணங்களை செய்து கொடுத்தல், தேவையான அளவுக்கு கணினி, மடிக்கணினிகளை வழங்குதல், வாகனங்களை நிறுத்தும் இடங்களை உருவாக்குதல் போன்ற வசதிகள் செய்யப்பட உள்ளன.

இந்திய அறிவியல் கழக அறக்கட்டளையின் 75-வது விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இயற்கை அறிவியல், இயற்பியல் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும், இந்த விருதுக்காக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்படும்,

கல்வி ஒலிபரப்பு சேவை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் இணைந்து கல்வி ஒலிபரப்பு சேவையை தொடங்க உள்ளது. இந்த எப்.எம். வனொலி நிலையம் நமது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படும். இந்த வானொலி நிலையம் அமைப்பதற்கு தேவையான கருவிகள் ஏற்கனவே மதுரையில் உள்ள வானொலி நிலையத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஒலிபரப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிடைக்கும். நாள்தோறும் 6மணி நேரத்திற்கு குறையாமல் இந்த சேவை ஒலிபரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, January 15, 2009

பட்டம் விடும் திருவிழா: குஜராத்தில் 500 பறவைகள் காயம்

பட்டம் விடும் திருவிழா: குஜராத்தில் 500 பறவைகள் காயம்


அகமதாபாத், ஜன.16-

மகர சங்கராந்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் முழுவதும் பட்டம் விடும் விழா நடந்தது. அப்போது, பட்டத்தின் நூலில் சிக்கி நூற்றுக்கும் மேலான பறவைகள் காயமடைந்தன. மேலும் வெளிநாட்டிலிருந்து இடப்பெயர்ந்த வல்லூறு, ஆந்தை மற்றும் உள்நாட்டு புறாக்கள், கழுகுகள் போன்ற ஏராளமான பறவைகள் பட்டத்தின் நூலால் அறுக்கப்பட்டு செத்தும் போயின.

இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஹர்மீஷ் மேத்தா கூறுகையில், `பறவைகள் காயமடைந்ததாக 155 போன் அழைப்புகள் எங்களுக்கு வந்தன. நாங்களும் காயமடைந்த 120 பறவைகளை கைப்பற்றி அவற்றுக்கு சிகிச்சை அளித்தோம். குஜராத்தில், இந்த ஆண்டு பட்டம் விடும் திருவிழா காரணமாக 500-க்கும் மேற்பட்ட பறவைகள் காயமடைந்துள்ளன' என்று கவலை தெரிவித்தார்.

Wednesday, January 14, 2009

பணம் இரட்டிப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்

பணம் இரட்டிப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்

சென்னை, ஜன. 13: பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்த கும்பலால் பாதிக்கப்பட்டோர் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம்.

திருச்சி ரெங்கா நகரைச் சேர்ந்தவர் அனுராதா (28). இவரது கணவர் ரவிச்சந்திரன் (29). இத்தம்பதியுடன் திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா (33) மற்றும் மதுரவாயல் முஸ்தபா (33) உள்ளிட்டோர் சேர்ந்து தமிழகத்தில் பலரிடம் பணத்தைப் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இவர்கள் மீது மயிலாப்பூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸôர் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆதாரங்களுடன் "காவல்துறை கண்காணிப்பாளர், சிட்கோ எலக்ட்கானிக்ஸ் வளாகம், பிளாக்-3, அறை எண்- 18, முதல் மாடி, சிபிசிஐடி அலுவலகம், கிண்டி' என்ற முகவரிக்கு புகார் மனு அளிக்கலாம். தொலை பேசி எண்- 22502500.

Tuesday, January 13, 2009

கலைஞர் அவர்கட்கு வாழ்த்து

இடைத்தேர்தல் வெற்றி களிப்பு;
இனிய பொங்கல் அன்பளிப்பு
உடைத்துக் கொண்டு போனவர்கள் எங்கே?
உட்கார்ந்து விட்டனர் அங்கே
"கை கொடுப்பது கை மட்டுமே" என்று
கவிநயமாய் நன்றி கூறிய கலைஞரே..!
கைமாறு கருதாமல் தோழமை உணர்வோடு
களப்பணியாற்றி வெற்றி கனி பறிக்க
உறுதுணையாய் என்றுமே கூட்டணியில்
உங்களோடு தோள் கொடுக்கும்
சிறுபான்மையின மக்களை மறக்க வேண்டா;
"சிதறாமல் வாக்களிப்பவர்கள்" மறுக்க வேண்டா.!
மதமாற்று தடைச்சட்டம் நீக்கியதால்
மதம் கொண்ட யானைகளை அடக்கினீர்;
மதுவை ஒழித்திடச் சட்டம் தருக;
மண்ணுலகம் நிலைக்கும் வரை புகழ் பெறுக..!!

_"kavianban" KALAM
shaickkalam@yahoo.com

Monday, January 12, 2009

ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்


ராமநாதபுரம், ஜன. 11: இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை.

கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.

பத்ரே பதவிக்கு ஒரு பட்டமும், உள்ளூர் பிஷப் பட்டியலில் இடம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான வயது 34 ஆகவும், உயரம் 160 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 77 செ.மீ இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசிநாள் 24.1.09.

விண்ணப்பங்களை தலைமை ஆள் சேர்ப்புமையம், செயிண்ட் ஜார்ஜ்கோட்டை, சென்னை-600009 அல்லது ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், கருடா லைசன்ஸ், திருச்சிராப்பள்ளி -620 001 என்ற முகவரிக்கு, புகைப்படம் ஒட்டிய உரிய விண்ணப்பப் படிவத்தில் அனுப்ப வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள், இவ்வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Thursday, January 8, 2009

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் மன்றங்களின் செயல்பாடு குறித்து அதிகாரி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் மன்றங்களின் செயல்பாடு குறித்து அதிகாரி ஆய்வு


தொண்டி,ஜன.9-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்மன்றங்களின் செயல்பாடு குறித்து மத்திய திட்ட கமிஷன் அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்த மத்திய அரசின் திட்ட கமிஷன் முதுநிலை ஆய்வு அதிகாரி ஆர்.பி.சிங் இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின்கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை பகுதிக்கு சென்ற அவர் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து இளைஞர் மன்ற தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதன்பிறகு ராமநாதபுரத்தில் நடந்த நேருயுவகேந்திரா இளைஞர் மன்ற தலைவர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு கிராமப்புற இளைஞர்மன்றங்களையும் , இளைஞர்களையும் வலுப்படுத்துவது, நேருயுவகேந்திராவின் பணிகள், திட்டங்கள், இளைஞர் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது இளைஞர்மன்றங்களின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளையும் இளைஞர் மன்றங்களுக்கான நிதிஉதவியையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திராவின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பேட்டி

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 500 மாவட்டங்களில் நேருயுவகேந்திரா செயல்பட்டு வருகிறது. முற்றிலுமாக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டுவரும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் மீதமுள்ள மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்மன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் பிரமிக்ககூடிய வகையில் உள்ளது. இளைஞர்கள் இந்த மாவட்டத்தில் கலை மற்றும் விளையாட்டில் சிறந்துவிளங்குகிறார்கள். நேருயுவகேந்திராமூலம் இளைஞர்களுக்கு கணிணி,தையல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், மோட்டார் மெக்கானிசம், தலைமைத்துவம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. வரும்காலத்தில் கிராமப்புற இளைஞர்மன்றங்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் நிதிஉதவிகள் வழங்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், முகமது சதக் பாலிடெக்னிக் திட்ட அலுவலர் யோசுவா,வாசன் கம்ப்ïட்டர் இயக்குனர் எஸ்.நாராயணன்,நேரு இளைஞர்மன்ற இயக்குனர் மணிமாறன்,தேசிய சேவை தொண்டர்கள் பரமசிவம்,புவனா,நித்யா, சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

www.muduvaivision.com

Monday, January 5, 2009

முதுகுளத்தூரில் உரிமையியல் நீதிமன்றம் துவங்க அரசு உத்தரவு'

முதுகுளத்தூரில் உரிமையியல் நீதிமன்றம் துவங்க அரசு உத்தரவு'

www.muduvaivision.com

முதுகுளத்தூர், ஜன. 4: முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் துவங்க அரசு உத்தரவிட்டிருப்பதாக வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் ஆர்.அரிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் நீதிமன்றம் குற்றவியல் மற்றும் உரிமையியல் இணைந்த விசாரணை நீதிமன்றமாக ஆரம்பம் முதல் இயங்கி வந்தது. ஆனால், முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் அதிகமாக உள்ளன. சுமார் 650-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை முடியாமல் உள்ளன.

எனவே, முதுகுளத்தூரில் தனியாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இயங்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வந்தோம். அரசு இதை ஏற்று மாவட்ட உரிமையியில் நீதிமன்றம் துவங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசுக்கு முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளோம். ஏற்கெனவே உள்ள நீதிமன்றம் வளாகப் பகுதியில்தான் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட உள்ளது என்றார்.

பேட்டியின்போது சங்கத் தலைவர் கு.காசிலிங்கம், பொருளாளர் ஆர்.முனியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

Sunday, January 4, 2009

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

www.muduvaivision.com


முதுகுளத்தூர், ஜன. 3: முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்குரிய கூட்டம், முன்னாள் தலைவர் கு.திருக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்: தலைவர் -கு.காசிலிங்கம், செயலர் -எஸ்.அரிகிருஷ்ணன், பொருளாளர்-முனியசாமி.