Sunday, September 21, 2008

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடி செப் 22.

பரமக்குடியில் மர்மமாக இறந்த பள்ளி மாணவனின் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து விட்டன. ஆகையால், மாணவனின் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதி எமனேசுவரத்தை சேர்ந்தவர் ராஜா மஸ்தான்(15).இவன் பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 18ம் தேதி பள்ளிக்கு தேர்வு எழுத சென்றவன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் அவனது உடல் நேற்று காலை தண்றாதேவிப்பட்டிணம் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தனர்.பின்பு,மாணவனின் உறவினர்களும் முஸ்லீம் அமைப்புகளும் மாணவன் ராஜா மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளான் என்றும் உண்மை குற்றவாளியை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டம் செய்தனர்.பின்பு அவர்கள் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனர்.உடனே காவல் துறையினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குளிர்சாதனபெட்டி வரவழைக்கப்பெற்று அதில் மாணவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக இறந்த மாணவன் ராஜா மஸ்தான் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதைத் தொடர்ந்து பரமக்குடி மேலப் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் த.மு.மு.க,தவ்ஹீத் ஜமாத்,மனித நீதி பாசறை,தேசிய லீக்,உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இதில் இன்று(22ம் தேதி)மாலை 5 மணிக்குள் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யாமலும் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலும் 23 ம் தேதி காலை 10 மணிக்கு எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து பேரணியாக வந்து தாலுகா ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பங்கேற்க அழைப்பது என்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோர் நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இச்சம்பவத்தால் பரமக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

www.muduvaivision.com


தொகுப்பும் பதிப்பும் : கா. இளம்பரிதி
யாழ் மை 134 மூன்றாம் தளம்
தம்பு செட்டித் தெரு
சென்னை 600 001
பக்கங்கள் : 120
விலை : ரூ 70

முதுகுளத்தூர் கலவரம் குறித்து முக்கிய வரலாற்றுப் பதிவு இது. உதடசைந்தால் உயிர் போய்விடும் என்று உலகமே பயந்த காலத்தில், இந்த நூலின் மூலம் முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியை அன்றைக்கே தைரியமாகச் சொன்னவர் தினகரன்.

தலித்களுக்கு ஆதரவாக இந்த நூலை எழுதியுள்ளதன் மூலம் சாதி கடந்த மனசாட்சியாகத் திகழ்கிறார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். அவர் நடத்திய பத்திரிகையை மூட நேர்ந்தது மட்டுமல்லாமல், சொந்தச் சாதியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். 1958ல் வெளிவந்த இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து, மறுபதிப்பு செய்துள்ளனர் பதிப்பாளர் இளம்பரிதியும், பதிப்பாசிரியர் அ.ஜெகநாதனும்.

நன்றி ஆனந்த விகடன்
18.04.2007