Tuesday, September 23, 2008

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


ராமநாதபுரம்,செப்.24-

பரமக்குடி மாணவன் இறந்த சம்பவத்தில் குற்ற வா ளியை உடனே கைது செய்யக்கோரி ராமநாத புரம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அதி காரிகள் மாணவர்களி டம் சமரச பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர்.

மாணவன் சாவு

பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் ராஜாமஸ்தான் (வயது 15) மர்மமான முறை யில் இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பலியான மாணவன் தொடர்பான வழக் கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி நேற்று ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவ -மாணவிகள் திடீர் ஸ்டிரைக் கில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாண விகள் அனைவரும் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வந் தனர்.

மறியல்

அங்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் அனைவரும் கோஷமிட்ட னர். பின்பு சாலை மறியல் செய் வதென கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இது பற்றி தகவலறிந்ததும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வரு வாய் துறை அதிகாரிகள் கல் லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தரப்பில் குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வேண் டும், எப்.ஐ.ஆர். நகல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது குற்ற வாளிகளை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எப்.ஐ. ஆர், நகல் புகார் மனுதார ரிடமே வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் விளக்கி கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,
ஆர்ப்பாட்டம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


பரமக்குடி,செப்.24-

பரமக்குடி மாணவன் மர்ம சாவு சம்பவத்தையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பரமக்குடி பள்ளி மாணவன் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம் பவத்துக்கு கண்டனம் தெரி வித்தும், சம்பந்தப்பட்ட குற்ற வாளி மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பரமக் குடியில் ஆர்ப்பாட்டம் மற் றும் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று இஸ்லா மிய அமைப்புகள் அறிவித்தி ருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கம், முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து ஊர் வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் தரைப்பாலம், சின்னக்கடை, கீழ பள்ளி வாசல் தெரு, சுண்ணாம்பு காரத் தெரு, பஸ் நிலையம், ஆர்ச், காந்தி சிலை, உழவர் சந்தை, ஐந்துமுனை பகுதி, இளையான்குடி ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழி யாக பரமக்குடி தாலுகா அலு வலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து பர மக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை 2 நாட்களுக் குள் கைது செய்வோம் என்று கூறி இது வரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரை கண்டிக்கிறோம். இறந்த மாணவன் ராஜா மஸ்தான் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

மேலும் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றவாளியை கைது செய்யும் வரை இறந்த மாண வனின் உடலை வாங்க மாட் டோம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் பரமக்குடி தாசில்தார் அண்ணாமலையி டம் மனு கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தில் உலமாக் கள் சபை சார்பில் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் சார்பில் தசுருதீன், த.மு.மு.க. சார்பில் சலிமுல்லாகான், பாளை ரபீக், மனித நீதி பாசறை சார்பில் ஜமீல், மாவட்ட ஐக் கிய ஜமாத் சார்பில் முகமது ஜமால், தவ் ஹீது ஜமாத் சார் பில் ஆரிப், தேசிய லீக் சார் பில் நூருல் ஆலிம், ராமநாத புரம் நகரசபை உறுப்பினர் ராஜாஉசேன், எமனேசுவரம் ஜமாத் சார்பில் ஆலம், பரமக் குடி நகரசபை கவுன்சிலர் அப்துல் மாலிக், நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் துரைசாமி ஆகியோர் பரமக்குடியில் முகாமிட்டு இருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலை மையில் 13 இன்ஸ்பெக்டர் கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

விடுமுÛ
ஆர்ப்பாட்டத்தையொட்டி பரமக்குடி நகரில் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. மேலும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கீழ முஸ்லிம் நர்சரி பள்ளி, மேல முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, எமனேசுவரம் ஜவ்வாது புல வர் மெட்ரிக் பள்ளி உள்பட இஸ்லாமிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது.