Sunday, February 1, 2009

முதுகுளத்தூர் அருகே இருதலைமணி பாம்பை பிடித்து வனச்சரக ஊழியர்கள் காட்டில் விட்டனர்

முதுகுளத்தூர் அருகே இருதலைமணி பாம்பை பிடித்து வனச்சரக ஊழியர்கள் காட்டில் விட்டனர்

முதுகுளத்தூர் அருகே வயல்வெளியில் இருதலைமணி பாம்பை வனச்சரக ஊழியர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்ஞீர் மற்றும் அஞ்சதாம்பல் கிராமத்திற்கும் இடையே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில் கூலி வேலை செய்யும் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.அப்போது அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இருதலைமணி பாம்பு ஒன்று உயிருடன் கிடந்துள்ளது.

இது குறித்து வனச்சரக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வன அதிகாரி ஜெய்லாவுதீன்,வனச்சரக அலுவலர் பண்டாரம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து இருதலைமணி பாம்பை பிடித்தனர்.பாம்பை பிடிக்க உதவிய எட்டிசேரி லிங்கத்திற்கு ரூ.200 பரிசாக வழங்கினர்.

பிடிபட்ட பாம்பை வனச்சரக ஊழியர்கள் பிடித்து மேலச்செல்வனூர் வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.