Saturday, August 16, 2008

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு


சென்னை, ஆக.16-

ஒவ்வொரு ஊர்களுக்கும் உரிய தபால் நிலைய பின்கோடு எண்களை மாற்றி, `பேல்' என்ற புதிய குறியீட்டை பயன்படுத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

பின்கோடு நம்பர்

தபால்களை பட்டுவாடா செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் நாட்டின் பகுதிகளை அஞ்சல்துறை குறியீடுகளாக வைத்துள்ளது. 6 எண்கள் கொண்ட இந்த குறியீடுகள் போஸ்டல் இன்டக்ஸ் நம்பர் (பின்) அதாவது பின்கோடு நம்பர்கள் என்றழைக்கப்படுகின்றன.

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடிதம் எழுதும் போதும், வேலைக்காக விண்ணப்பிக்கும் போதும், மற்றவரிடம் ஒரு விலாசத்தை கொடுக்கும் போதும் `பின்கோடு' எண்களை எழுதுவது என்பது தற்போது அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 1972-ம் ஆண்டு `பின்கோடு' நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

8 பிரிவுகள்

பின்கோடு எண்கள் குறியீட்டின் முதல் எண்ணை வைத்து இந்தியாவை தபால்துறை மொத்தம் 8 பிரிவுகளாக பிரித்துள்ளது.

1) டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகார். 2) உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். 3) ராஜஸ்தான், குஜராத், டாமன், டைï 4) சத்தீஸ்கர், மராட்டியம், மத்தியபிரதேசம், கோவா. 5) ஆந்திரபிரதேசம், கர்நாடகா. 6) கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள். 7)மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், சிக்கிம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். 8) பீகார், ஜார்கண்ட்.

6 எண்கள்

பின்கோடு எண்களில் உள்ள மொத்தம் 6 எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சென்னையில் `600001' என்ற பின்கோடு எண்கள் பூக்கடை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு ஆகிய தபால் நிலையங்களையும், `600002' என்பது, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களையும் குறிப்பதாக உள்ளது.

எளிதாக அறியலாம்

இந்த நிலையில், பின்கோடு நம்பர்களை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு இந்திய அஞ்சல்துறை `போஸ்டல் அட்ரஸ் லொகேட்டர்' (பேல்) என்ற தபால் விலாச குறியீடுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பின்கோடு நம்பர்களை பொறுத்தவரை தபால் நிலையத்தை வைத்தே அந்த பகுதி, பின்கோடு எண்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் `பேல்' குறியீடுகள் அதில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒரு குறியீட்டால் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மாவட்டம் என்பது நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பின்கோடு எண்களை பொறுத்தவரை, மாவட்டம் என்பதற்கு குறியீடுகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தபால் விலாச குறியீடுகளில் (பேல்) கிராமம், டவுண், இடம், கட்டிடம், தெரு, சாலை, பகுதி, நகரம் என அனைத்தும் குறிக்கப்படும். இதனால் குறியீடுகளில் இருக்கும் எண்கள் மூலமாகவே இருக்கும் இடத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

2, 3 மாதங்களில் அமல்

தபால்காரர்கள் கடிதங்களை கொண்டு செல்வதற்கான முகவரியை அறிந்து கொள்ள இந்த புதிய முறை வசதியாகவும், சுலபமானதாகவும் இருக்கும். கடிதங்களை பின்கோடு எண்களை பார்த்து குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து சென்று சேரவேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பதை விட, `பேல்' முறை மிகவும் எளிதானது என்று அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ``இந்த புதிய தபால் விலாச குறியீடுகள் இந்திய அஞ்சல்துறையில் அறிவுசார் சொத்துரிமை. இதை இந்திய அஞ்சல்துறையின் அனுமதியின்றி மற்ற நாடுகளின் தபால்துறை பயன்படுத்த முடியாது. தபால் துறை மிகப்பெரிய மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்த தபால் துறை சாப்ட்வேர்கள், ஒன்றிணைக்கப்பட்ட தபால் நிலையங்கள், ஜி.பி.எஸ். வசதி கொண்ட மெயில் வேன்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. இன்னும் 2, 3 மாதங்களில் தபால் விலாச குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432360&disdate=8/16/2008

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி



மதுரை, ஆக. 15: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சித் தொடர்பு மையம் சார்பில் "கலாசாரமும் பாரம்பரியமும்' எனும் தலைப்பில் குறும்பட போட்டி நடைபெற உள்ளது.

பாரம்பரியக் கலைகள், கலாசாரங்கள், நிர்வாக முறைகள், பழங்குடிகளின் நாகரிகங்கள், தொழில் நுட்பங்கள், விழாக்கள், வரலாறு மற்றும் தொல் சமூக நிகழ்வுகள் தொடர்பாக குறும்படங்கள் அமைந்திருப்பது அவசியம்.

உலக மொழிகளில் தயாரிக்கப்பட்டிருப்பினும் துணைத் தலைப்புகள் அல்லது உரையாடல்களின் எழுத்து வடிவம் ஆங்கிலத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறும்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இயக்குநரின் சுய சிந்தனையில் உருவாகியிருத்தல் அவசியம். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பில் உறுதுணையாய் இருந்த நிறுவனங்கள் இப்போட்டியில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களாவர். விசிடி, டிவிடி அல்லது விஎச்எஸ் வடிவத்தில் குறும்படங்களை அனுப்பலாம். படத்தின் மூலப் பிரதியை அனுப்புதல் கூடாது. விண்ணப்பங்கள் மற்றும் விளக்க அறிக்கையை ஜ்ஜ்ஜ்.க்ட்ஹய்.ர்ழ்ஞ்/க்ச்ச் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வியாளர்கள், இதழாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 15.

மேலும் விவரங்களுக்கு தானம் அறக்கட்டளை, வளர்ச்சித் தொடர்பு மையம், 7-இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை-625 016 (தொலைபேசி எண் 0452- 4353983) எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816000945&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்


புதுதில்லி, ஆக. 15: சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திடீரென தனது சிறுவயது கால ஞாபகம் வரவே தான் வாழ்ந்த கிராமத்தின் நினைவில் ஆழ்ந்தார். இரவு நேரத்தில் பள்ளிப்பாடங்களை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததாகவும் தெரிவித்தார்.

சிறுவயதில் தான் பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தது எனது பட்டிக்காட்டு கிராமம். 10 வயதாகும் வரை நான் பட்ட சிரமங்கள் ஏராளம். எனது கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, குடிநீர் வசதி இல்லை, டாக்டர் இல்லை, சாலைகள் இல்லை, தொலைபேசி வசதி இல்லை. இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் கிடைக்கும் அரைகுறை வெளிச்சத்தில் எனது பாடங்களை படிப்பேன். ஆனால் நாடு விடுதலை பெற்றபிறகு கிராமப்புறங்களில் கணிசமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் பல இடங்களில், நான் சிறு வயதில் பட்டது போன்ற சிரமங்களை, எத்தனையோ பேர் அனுபவிக்கின்றனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டது. பாரத் நிர்மாண் போன்ற நல்ல பல திட்டங்களை மேற்கொண்டது.

கிராமங்களை புனரமைக்கும் நோக்கில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

கிராமப்புற இந்தியாவின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதே இந்த அரசின் லட்சியம். இதை கட்டாயம் நிறைவேற்றிக் காட்டுவோம். கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்.

இந்த அரசின் முயற்சிகளால் புதுமைமிக்க வளமான இந்தியா உருவாகப் போவது உறுதி என்றார் மன்மோகன் சிங்.

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்




* கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம்

* 6000 புதிய உயர்தர மாதிரி பள்ளிகள் அமைப்பு

* ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி

* பின்தங்கிய மாவட்டங்களில் 30 புதிய பல்கலைக்கழகங்கள், 8 புதிய இந்திய தொழில்நுட்பப் பயிலகங்கள், 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 10 புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகங்கள், 5 புதிய இந்திய அறிவியல் கழகங்கள், இரண்டு திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைப் பள்ளிகள், 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள் மற்றும் 1000 புதிய பாலிடெக்னிக்குகள் அமைக்கப்படுகின்றன.

* வேளாண்துறைக்கு அளிக்கப்பட்ட கடனுதவி கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 81 ஆயிரம் கோடியிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

நிலவுக்கு இந்த ஆண்டில் இந்தியாவின் விண்வெளி ஓடம் "சந்திராயன்'

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உறுதிமிக்க நடவடிக்கைகள்.

* அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வளர்ந்த நாடுகளுடன் பேச்சு

* தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், குடிமக்கள் அமைப்புகள், சமூக, மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.

* ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த தொடர்ந்து அயராது முயற்சி

* தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் இந்தியா, பாகிஸ்தான் மக்களின் விரோதிகள்.