Thursday, March 19, 2009

மெட்ரிக்குலேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1042 பேர் தேர்வு எழுதினர்

மெட்ரிக்குலேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1042 பேர் தேர்வு எழுதினர்


ராமநாதபுரம்,மார்ச்.19-

மெட்ரிக்குலேஷன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் நேற்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 42 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினர்.

மெட்ரிக். தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த2-ந் தேதி முதல் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 87 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 763 மாணவ-மாணவி கள் தேர்வு எழுதிவருகின்றனர்.

தமிழகத்தில் மெட்ரிக்கு லேஷன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. அடுத்தமாதம் ஏப்ரல் 8-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் முதல் நாளான நேற்று தமிழ்முதல் தாள் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் மெட்ரி குலேசன் தேர்வை 29 பள்ளி களை சேர்ந்த 496 மாணவர்களும், 460 மாணவி களுமாக மொத்தம் 956 பேர் தேர்வு எழுதினர். பரமக்குடி கல்வி மாவட் டத்தில் மெட்ரிக் குலேஷன் தேர்வை 7 பள்ளிகளை சேர்ந்த 41 ஆண்களும், 45 மாணவிகளுமாக 86 பேர் தேர்வு எழுதினர்.

59 தேர்வு மையங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயி ரத்து 545 மாணவர்களும், 4 ஆயிரத்து 887 மாணவிகளும் மொத்தம் 9 ஆயிரத்து 432 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதேபோல் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 63பள்ளி களில் 3 ஆயிரத்து 977 மாணவர்களும், 3 ஆயிரத்து 927 மாணவிகளுமாக மொத் தம் 7 ஆயி ரத்து 904 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற் காக ராமநாதபுரம் கல்வி மாட்டத்தில் 33 மையங் களும்,பரமக்குடி கல்வி மாவட் டத்தில் 26 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.