Monday, June 30, 2008

அபுதாபி கஸ்ஸாலி ( பாட்சா ) அத்தம்மா வஃபாத்து

அபுதாபி கஸ்ஸாலி ( பாட்சா ) அத்தம்மா வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்துவரும் கஸ்ஸாலி ( பாட்சா ) யின் அத்தம்மா அசன்பாத்து ( கருவாட்டுக்காரம்மா ) வயது 95 இன்று 30/06/2008 திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகிவிட்டார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

இத்தகவலை கஸ்ஸாலி 050 542 3546 தெரிவித்தார்.

அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்

Thursday, June 26, 2008

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28_ம் தேதி குறை தீர்ப்பு முகாம்

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28_ம் தேதி குறை தீர்ப்பு முகாம்

மதுரையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28_ம் தேதி பாஸ்போர்ட் குறை தீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரையிலான காலத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து, எந்த விதத் தகவலும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தமது குறைகளைத் தெரிவிக்கலாம். பாஸ்போர்ட் குறை தீர்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள வரவேற்பு அரங்கில் துவங்கும் என்று மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.