Monday, January 12, 2009

ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

ராணுவத்தில் மதபோதகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்


ராமநாதபுரம், ஜன. 11: இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை.

கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழியில் இளங்கலை பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

மௌலவி பதவிக்கும் பட்டமும், அத்துடன் அராபிக் மொழியில் மௌலவி ஆலிம் அல்லது உருதுமொழியில் அடிப் ஆலிம் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரபிக் அல்லது உருதுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மௌலவி ஆலிம், அடிப் ஆலிம் ஆகியன தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.

பத்ரே பதவிக்கு ஒரு பட்டமும், உள்ளூர் பிஷப் பட்டியலில் இடம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கான வயது 34 ஆகவும், உயரம் 160 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 77 செ.மீ இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசிநாள் 24.1.09.

விண்ணப்பங்களை தலைமை ஆள் சேர்ப்புமையம், செயிண்ட் ஜார்ஜ்கோட்டை, சென்னை-600009 அல்லது ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம், கருடா லைசன்ஸ், திருச்சிராப்பள்ளி -620 001 என்ற முகவரிக்கு, புகைப்படம் ஒட்டிய உரிய விண்ணப்பப் படிவத்தில் அனுப்ப வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள், இவ்வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.