Monday, August 11, 2008

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


முதுகுளத்தூர்,ஆக.11-

முதுகுளத்தூரில் நண்ப னின் செல்போனை திருடி விட்டதாக கூறிய தால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த கார்மேகம் என் பவரது மகன் முத்துப்பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் விநாயகம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறை யில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் விநாயகம் முதுகுளத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அவரும், அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி மற்றும் பாலா என்ற பாலகிருஷ்ணன், மங்கள விஜயன் ஆகியோர் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு ஒரு ஆட் டோவில் சென்றனர்.

தகராறு

அங்கு விநாயகம் மட்டும் தனது மாமியார் வீட்டில் இறங்கி கொண்டு தனது நண் பர்களை கடையில் சாப்பிட கூறி அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினாராம். இதைத் தொடர்ந்து சாப்பிட சென்ற இடத்தில் நண்பர்க ளிடையே தகராறு ஏற்பட் டது. அப்போது விநாயகத் தின் செல்போனை முத்துப் பாண்டி திருடி விட்டதாக மங்கள விஜயன் புகார் கூறி னாராம். இதனால் அவர்க ளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மங் கள விஜயன் அருகில் கிடந்த கார் லீவரை எடுத்து முத்துப் பாண்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து பால கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துப்பாண்டியை குத்த முயன்றாராம்.

கைது

உடனே சுதாரித்துக் கொண்ட முத்துப்பாண்டி யன் படுகாயத்துடன் தப்பி ஓடி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மங்கள விஜயன், பாலகிருஷ் ணன் ஆகியோரை கைது செய்தனர். சிகிச்சைக்காக முத்துப்பாண்டியை முதுகு ளத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.