Sunday, July 26, 2009

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை,ஜூலை.26

மதுரை கோ.புதூரில், அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தற்போது அட்மிஷன் நடைபெற்று வருகிறது. வரும் 29 ம் தேதி அன்று நேரிடிசேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 29 ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இந்நிலையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்) மற்றும் கட்டணம் விலை185, 195, 205 உடன் நேரில் வந்து முதல்வரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை விண்ணப்பிக் காதவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


10 ம் வகுப்பு தேர்ச்சிக்கு ; தானியங்கி ஊர்தி, கம்மியர் இயந்திர பராமரிப்பு, தகவல் தொழல்நுட்பம், கம்மியர் (கருவிகள்) , கம்மியர் ஆட்டோ எலக்ட்ரிக்கல் ,எலக்ட்ரானிக்ஸ். 8_ம் வகுப்பு தேர்ச்சி; உலோகத்தகடு வேலையாள், தச்சர், அச்சவார்ப்பவர், 12 _ம் வகுப்பு தேர்ச்சி; சுருக்கெழுத்து (ஆங்கிலம் டி.டி.பி.ஓ. மாணவர்களின் கல்வித் தகுதி, இன சுழற்சி மற்றும் அரசின் சேர்க்கை விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் உடனுக்குடன் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் இப்பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அணுர வேண்டிய முகவரி,




துணை இயக்குநர்/ முதல்வர்,
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
கோ.புதூர் மதுரை 625007.

தொலைபேசி எண் 0452 _2566183 என்ற எண்ணுடனும் தொடர் கொள்ளாலம் என முதல்வர் அறிவித்து உள்ளார்.