Tuesday, February 10, 2009

ஏர்வாடியில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

ஏர்வாடியில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

www.muduvaivision.com


கீழக்கரை, பிப். 9: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ் குமார் தலைமை வகித்தார். ஏர்வாடி ஊராட்சிமன்றத் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ. 6.5லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையத்தை தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் திறந்து வைத்தார்.

ஏர்வாடி தர்ஹா நிர்வாக சபையின் தலைவர் அமீர்ஹம்சா, கடலாடி வட்டாட்சியர் சந்திரன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் முனியாண்டி, கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் புருஷோத்தமன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி தர்ஹா புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலிருந்து வரும் யாத்ரிகர்களின் வசதிக்காக போதுமான இடவசதி இன்றி இருந்த பஸ் நிலையம் தர்ஹாவின் தென்பகுதியில் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது.

இங்கு ரூ. 6.5லட்சம் செலவில் பயணிகள் இருக்கையுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.