Thursday, July 24, 2008

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு


முதுகுளத்தூர், ஜுலை.25-

மேலச்செல்வனூர் பகு தியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விட்டால் ஆகஸ்டு 15-ந் தேதி வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்து வோம் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ள னர்.

சாலை வசதி

கடலாடி ïனியன் மேலச் செல்வனூர் ஊராட்சி தலை வர் கோபால கிருஷ்ணன் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலாடி ஊராட்சி ஒன்றி யம் மேலச்செல்வனூர் ஊராட்சி யில் ஆலங்குளம், எம்.எஸ். புதுக்குடியிருப்பு, தேரங்குளம், கடையக்குளம், கண்டங்கனி, பாப்பாகுளம், பல்லனேந்தல், எஸ்.பாடுவனேந்தல் உள்பட 9 கிராமங்கள் உள்ளன.

மேலச்செல்வனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வரு கின்றனர். ஆலங்குளம், எம். எஸ்.புதுக்குடியிருப்பு சாலை மிக மோசமாக உள்ளது. இத னால் மாணவ-மாணவிக ளும், பொது மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கறுப்பு கொடி

இதுகுறித்து அமைச்சரிட மும், கலெக்டரிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே சாலையை புதுப்பித்து பஸ் இயக்க வேண்டும். பொது மக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி இந்த ஊராட்சியை சேர்ந்த அனைத்து வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றி போராட் டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

முதுகுளத்தூர் பகுதியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதால் மயில் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும், மயில்கள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் இடங்களின் அருகே நடமாடி வருகின்றன.

வயல்வெளி, கண்மாய், குளம் இவற்றில் உலாவும் மயில்கள் தோகையை விரித்து ஆடுவதால் அதன் அழகை இப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் அரக்க குணம் கொண்ட சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவது வேதனைக்குரியது. இதனை வனத்துறையினர் கண்டு கொள்வது இல்லை.


பறவைகள், விலங்கினங்களைக் காக்க தேசிய அளவில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பினர் இதுபோன்ற செயலகளை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0725-peacocks-also-join-in-rare-bird-list.html

முதுகுளத்தூர் அருகே கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் அருகே கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் அருகே பறவைகள் சரணாலயப் பகுதியாக விளங்கி வரும் சித்திரங்குடி உலக நாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதில் கிராம தலைவர் ராஜகோபால், ஊராட்சி தலைவர் கருப்பு துரை, கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர், முதுகுளத்தூர் தாசில்தார் ராமு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது.

தாசில்தார்க்கு பதவி உயர்வு

தாசில்தார்க்கு பதவி உயர்வு

முதுகுளத்தூர் நலிந்தோர் திட்ட தாசில்தார் சுதர்சன் புதுக்கோட்டை மாவட்ட இலவச கலர் டிவி வழங்கும் திட்ட துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பதவி உயர்வு பெற்றுள்ள சுதர்சனுக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது.

முதுகுளத்தூரில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூரில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூர் போலீஸ் நண்பர்கள் குழு, அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ரத்ததானமுகாமை நடத்தின. 25 பேர் ரத்ததானம் செய்தனர்.

எஸ்.ஐ. லோகநாதன், டாக்டர் பாலச்சந்திரன், போலீஸ் நண்பர்கள் குழு நிர்வாகி கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் இக்பால், வின்செண்ட் ரோவர், லயன்ஸ் சங்க செயலாளர் சூசைதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் சிராஜுல் உம்மத் இல்லத் திருமணம்



அஸ்ஸலாமு அலைக்கும்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம்
சிராஜுல் உம்மத்
அல்ஹாஜ் மௌலவி எஸ். பஷீர் சேட் ஆலிம் மன்பஈ

அவர்களது சகோதரர் குல்பர்கா டெக்கான் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக இயக்குநர்
ஜனாப் எஸ். அஷ்ரப் அலி
அவர்களது புதல்வி

ஏ. உம்மு ஹபிபா மணமகளுக்கும்

குல்பர்கா எம்.ஏ. ஏ. முஹம்மது அஷ்ரப் அலி பைஜி அவர்கள் மகன்
எம். முஹம்மது சிபஹத்துல்லாஹ்
மணமகனுக்கும்

இன்ஷா அல்லாஹ் திருமணம்

ஹிஜிரி 1429 ஷஃபான் மாதம் பிறை 11 ( 13 ஆகஸ்ட் 2008 ) புதன்கிழமை காலை
11 மணிக்கு
ஈசநத்தம் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.

இம்மணவிழாவில் ஜமா அத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்