Wednesday, November 14, 2007

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கைசர் ராஹிலா என்ற 2 வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு வந்த மின் அஞ்சலை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

- குழந்தையின் தந்தை சகோதரர் அன்வர் தற்போது மஸ்கட்டில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்து வருகிறார் ( தொலைபேசி : 00968 95172446)

- அவர் வேலை செய்யும் நிறுவனம் 1 லட்சம் வழங்கி இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு, மஸ்கட் உதவியுடன் 112000 திரட்டி இருக்கிறார்கள்.

- இன்னும் ரூ 138,000 நிதி உடனடியாக தேவைப்படுகிறது. இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கெடு விதித்துள்ளார்.

யார் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மாந்தர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவர் ( திருமறை 5:32) என்பது இறைவனின் வாக்கு. எனவே இந்த குழந்தையின் மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற உதவிகளை உடனடியாக வழங்குங்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

ஓமண் : அன்வர் : 00968 95172446 பஷல் : 00968 99008907
ஐக்கிய அரபு அமீரகம் : முஹம்மத் : 00971 50 4567487
சவுதி அரேபியா : இம்தியாஸ் : 0096650 6972461
தமிழ்நாடு : சலாகுதீன் : 00919841354455

சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் வரவேற்பு

இந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது.

ரியாதின் லெ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற இவ்வரவேற்பினை இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தின் பன்னிரு உறுப்பினர்களும் அகமகிழ்வுடன் ஏற்றுச் சிறப்பித்தனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்; பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர். இக்குழுமத்தின் தலைவராக இருந்து புதுவை மாநில அரசின் கல்வி-இளைஞர்நலத்துறை அமைச்சர் M.O.F.H ஷாஜஹான் வழிநடத்தினார்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இந்திய விஜயம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக அமைந்து இரு நாடுகளிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாயின. அவற்றுள் பண்பாட்டுப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இளைஞர் பிரதிநிதிகளின் வருடாந்திர வருகைப்பரிமாற்றமும் ஒன்று. அதன்படி ஜூலை 2007ல் இந்தியாவுக்கு சவூதி இளைஞர் குழுமம் வருகைஅளித்திருந்தது. இப்போது இந்திய இளைஞர்களின் முறை.

விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு M.O.H ஃபரூக் மரைக்காயர் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தின், கலாச்சார அறிதல்களின் தேவையையும், இருநாட்டு இளைஞர்களும் அடையவேண்டிய ஆழிய புரிந்துணர்வையும் வலியுறுத்திப் பேசினார். ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினரின் சுய அறிமுகங்களுக்குப்பின் தலைவர் திரு. அ.சஜ்ஜாவுத்தீன் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி நவின்றார். --

இக்குழுமத்தின் சவூதி அரசாங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுலைமான் முஹம்மத் அல் ஸுவெஹைரி இந்தியர்களின் விருந்தோம்பலை; இரக்க மனப்பான்மையை சிலாகித்தார். இந்திய இளைஞர் பிரதிநிதி குழுமத்தில் ஒருவராக வந்திருந்த புதுவை தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் திரு ஆதவன் அவர்கள் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இந்த வரவேற்பளிக்கும் ஆவலை புகழ்ந்து பேசினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு.ஜஃபர் சாதிக் இவ்விழாவின் ஒருங்கிணைப்பில் திறனாற்றிட, இணைச்செயலர் திரு. விஜய்சுந்தரம் விழாவைத் தொகுத்தளித்துச் சிறப்பித்தார். இதே விழாவில் இந்திய பன்னாட்டு பள்ளியில் கடந்த வருடத்தில் மேல் நிலை வகுப்பில் 93.8 மதிப்பெண்கள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி சீனி ஹுசைனா சாஹுல் ஹமீது அவர்களை பாராட்டும் வண்ணமாக வருகை தந்திருந்த அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று வாழ்த்தினர்.

முன்னதாக, திரு.சஜ்ஜாவுத்தீன் அவர்களால் இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தலைவர் அமைச்சர் திரு. M.O.H.F. ஷாஜஹானுக்கு பூங்கொத்து அளிக்கப்பட்டது.

sundaramvijay@hotmail.com