Thursday, December 20, 2007

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் முதல் முறையாக ஒட்டக குர்பானி


முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் முதல் முறையாக ஒட்டக குர்பானி

முதுகுளத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியின் காரணமாக 21.12.2007 வெள்ளிக்கிழமையன்று தியாகத் திருநாளையட்டி கூட்டுக்குர்பானி திட்டத்தின் கீழ் முதல் முறையாக ஒட்டக குர்பானி கொடுக்கப்பட இருக்கிறது.

இது நமதூரில் முதல் முயற்சி என்பதால் பொதுமக்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் வந்து ஒட்டகத்தை பார்த்துச் செல்கின்றனர்.


ஆதாரம் :

நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன் பயணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்போது நாங்கள் ஒரு மாட்டில் ஏழு நபர்களும், ஒரு ஒட்டகத்தில் பத்து நபர்களும் கூட்டாகிக் கொண்டோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ( ரலி )
நூல் : திர்மிதி

தகவல் : யாசின், சாலிஹா ஸ்டோர், பலசரக்கு வியாபாரம், முதுகுளத்தூர்.



Thursday, November 22, 2007

worldtamilnews.com

worldtamilnews.com என்கிற ஒரு இணைய தள வானொலி இருக்கிறது. அதிலே கவிதை கேளுங்கள்
என்று ஒரு நிகழ்ச்சி. அதிலே சில நல்ல கவிதைகளை நானே தயாரித்து வழங்குவேன். சென்ற
வாரத்துக்கு முந்திய வாரம் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆனந்த விகடனில் வந்த கவிதை ஒலி
பரப்பாயிற்று. சென்ற வாரம் டென்மார்க்கைச் சேர்ந்த வேலணையூர் பொன்னண்ணாவின் கவிதை
இடம் பெற்றது. இந்த வாரம் கவிதாயிணி தாமரையின் கவிதை ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சகோ: இம்தியாசின் கவிதையையும் உங்களது இந்தக் கவிதையையும் தெரிவு செய்து வைத்துள்ளேன்.
இந்தியா திரும்பியதும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்வேன். அதுதான் இந்தக் கவிதைகளுக்கு நான்
தரும் பாராட்டு.

அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


On 2/14/07, Abdul Jabbar wrote:

Tuesday, November 20, 2007

Heart surgery free of cost for children

For any kind of heart surgery free of cost ..

Contact :

Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore

Write to us

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA.
Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: adminblr@sssihms.org.in


Hi all,
Please forward this to the people u know , because most of the children's who are having heart problems, there parents couldnt afford for their operation .

Help them if somebody need

Thursday, November 15, 2007

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் ........

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததை சாதித்துள்ளது.

தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் அஷிஷ்கேதான் தலைமையிலான நிருபர்கள் குழு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஷ்வஹிந்த் பரிஷத் முக்கியஸ்தர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் போன்றோரிடம் தங்களை இந்துத்துவாவின் பெருமைகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதப் போவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பை வலுப்படுத்தி, நம்பிக்கையைப் பெற்று, குஜராத் கலவரத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே பேச வைத்து ரகசியமாக பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பையே ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் இதில் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவையாகும்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு 'முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்' என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், 'நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்' என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த 'மவலபியாகூப்' என்பவரை 'தீ வைத்தார்' என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத 'பதக்' என்பவரை 'முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்' என்று சொல்ல வைத்தது.

நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்' என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு.
ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, 'இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்' என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.

ஒன்றா, இரண்டா... சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டது. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.
ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு 'பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!' மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் 'ஜெய்ராம்' என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!

இப்படி பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.

இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.

'அகம் பிரம்மாஸ்மி' அகமே தெய்வம். தத்துவமஸி.. நீயே கடவுள் என்ற உபநிஷத்தின்படி ஒவ்வொரு மனிதனுமே தெய்வம்!

''காக்கை குருவி எங்கள் ஜாதி'' நீள் கடலும், வானும் மலையும் எங்கள் கூட்டம்'' என்ற வேத வாழ்வை விரும்பிய மகாகவி பாரதியாரின் பிரகடனத்தை ஒரு உண்மையான இந்துவின் பிரகடனமாக இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்வோம்..

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

அபுதாபியில் 'சிந்தித்து சிரிக்கலாம் வாங்க..'

அபுதாபியில் 'சிந்தித்து சிரிக்கலாம் வாங்க..'
வியாழக்கிழமை, நவம்பர் 15, 2007


அபுதாபி: அபுதாபியில் உள்ள தமிழ் மகளிர் வட்டம் சார்பில் அதன் 6வது ஆண்டு விழாவையொட்டி குழந்தைகள் கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் சார்பில் 16ம் தேதி அதந் 6வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. அபுதாபி நேஷனல் தியேட்டர் வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் பல்வேறு கலை, நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சன் டிவியின் அசத்தப் போவது யாரு புகழ் மதுரை முத்து, ஈரோடு மகேஷ், கோவை குணா, ரமேஷ் ஆகியோர் பங்கேற்கும் கலக்கல் காமெடி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுதவிர குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்த விழாவுக்கான நுழைவுச் சீட்டுகள் கிடைக்குமிடம்

செட்டிநாடு ஹோட்டல் - 02-6777699.
அஞ்சப்பர் ஹோட்டல் - 02-6721500 மற்றும் முசாபா.

மேலும் விவரங்களுக்கு ராஜசேகர் - 050-411 6274, 050-4927574.

துபாய் மற்றும் ஷார்ஜாவிலும் அழைப்பிதழ்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 14, 2007

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கைசர் ராஹிலா என்ற 2 வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு வந்த மின் அஞ்சலை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

- குழந்தையின் தந்தை சகோதரர் அன்வர் தற்போது மஸ்கட்டில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்து வருகிறார் ( தொலைபேசி : 00968 95172446)

- அவர் வேலை செய்யும் நிறுவனம் 1 லட்சம் வழங்கி இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு, மஸ்கட் உதவியுடன் 112000 திரட்டி இருக்கிறார்கள்.

- இன்னும் ரூ 138,000 நிதி உடனடியாக தேவைப்படுகிறது. இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கெடு விதித்துள்ளார்.

யார் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மாந்தர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவர் ( திருமறை 5:32) என்பது இறைவனின் வாக்கு. எனவே இந்த குழந்தையின் மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற உதவிகளை உடனடியாக வழங்குங்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

ஓமண் : அன்வர் : 00968 95172446 பஷல் : 00968 99008907
ஐக்கிய அரபு அமீரகம் : முஹம்மத் : 00971 50 4567487
சவுதி அரேபியா : இம்தியாஸ் : 0096650 6972461
தமிழ்நாடு : சலாகுதீன் : 00919841354455

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கைசர் ராஹிலா என்ற 2 வயது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு வந்த மின் அஞ்சலை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

- குழந்தையின் தந்தை சகோதரர் அன்வர் தற்போது மஸ்கட்டில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்து வருகிறார் ( தொலைபேசி : 00968 95172446)

- அவர் வேலை செய்யும் நிறுவனம் 1 லட்சம் வழங்கி இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு, மஸ்கட் உதவியுடன் 112000 திரட்டி இருக்கிறார்கள்.

- இன்னும் ரூ 138,000 நிதி உடனடியாக தேவைப்படுகிறது. இன்னும் 2 வாரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கெடு விதித்துள்ளார்.

யார் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மாந்தர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவர் ( திருமறை 5:32) என்பது இறைவனின் வாக்கு. எனவே இந்த குழந்தையின் மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற உதவிகளை உடனடியாக வழங்குங்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

ஓமண் : அன்வர் : 00968 95172446 பஷல் : 00968 99008907
ஐக்கிய அரபு அமீரகம் : முஹம்மத் : 00971 50 4567487
சவுதி அரேபியா : இம்தியாஸ் : 0096650 6972461
தமிழ்நாடு : சலாகுதீன் : 00919841354455

சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் வரவேற்பு

இந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது.

ரியாதின் லெ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற இவ்வரவேற்பினை இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தின் பன்னிரு உறுப்பினர்களும் அகமகிழ்வுடன் ஏற்றுச் சிறப்பித்தனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்; பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர். இக்குழுமத்தின் தலைவராக இருந்து புதுவை மாநில அரசின் கல்வி-இளைஞர்நலத்துறை அமைச்சர் M.O.F.H ஷாஜஹான் வழிநடத்தினார்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இந்திய விஜயம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக அமைந்து இரு நாடுகளிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாயின. அவற்றுள் பண்பாட்டுப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இளைஞர் பிரதிநிதிகளின் வருடாந்திர வருகைப்பரிமாற்றமும் ஒன்று. அதன்படி ஜூலை 2007ல் இந்தியாவுக்கு சவூதி இளைஞர் குழுமம் வருகைஅளித்திருந்தது. இப்போது இந்திய இளைஞர்களின் முறை.

விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு M.O.H ஃபரூக் மரைக்காயர் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தின், கலாச்சார அறிதல்களின் தேவையையும், இருநாட்டு இளைஞர்களும் அடையவேண்டிய ஆழிய புரிந்துணர்வையும் வலியுறுத்திப் பேசினார். ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினரின் சுய அறிமுகங்களுக்குப்பின் தலைவர் திரு. அ.சஜ்ஜாவுத்தீன் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி நவின்றார். --

இக்குழுமத்தின் சவூதி அரசாங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுலைமான் முஹம்மத் அல் ஸுவெஹைரி இந்தியர்களின் விருந்தோம்பலை; இரக்க மனப்பான்மையை சிலாகித்தார். இந்திய இளைஞர் பிரதிநிதி குழுமத்தில் ஒருவராக வந்திருந்த புதுவை தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் திரு ஆதவன் அவர்கள் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இந்த வரவேற்பளிக்கும் ஆவலை புகழ்ந்து பேசினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு.ஜஃபர் சாதிக் இவ்விழாவின் ஒருங்கிணைப்பில் திறனாற்றிட, இணைச்செயலர் திரு. விஜய்சுந்தரம் விழாவைத் தொகுத்தளித்துச் சிறப்பித்தார். இதே விழாவில் இந்திய பன்னாட்டு பள்ளியில் கடந்த வருடத்தில் மேல் நிலை வகுப்பில் 93.8 மதிப்பெண்கள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி சீனி ஹுசைனா சாஹுல் ஹமீது அவர்களை பாராட்டும் வண்ணமாக வருகை தந்திருந்த அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று வாழ்த்தினர்.

முன்னதாக, திரு.சஜ்ஜாவுத்தீன் அவர்களால் இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தலைவர் அமைச்சர் திரு. M.O.H.F. ஷாஜஹானுக்கு பூங்கொத்து அளிக்கப்பட்டது.

sundaramvijay@hotmail.com

Tuesday, November 13, 2007

அசன் தந்த இசைவு ...............

அசன் தந்த இசைவு


நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக அபிராமம் அருகில் உள்ள கீழக்குளம் என்ற கிராமத்தில் பணியாற்றியுள்ளேன். ( 1962 முதல் 1963 வரை ).இச்சிற்றூர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.இந்த ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர் அசன் முஹம்மது எம்.ஏ.பி.எல். அவர் அன்று என் மேல் கொண்ட அன்பை இன்றும் மாறாத வகையில் வைத்துள்ள மாமனிதர். ஊழலற்ற அரசியல்வாதி. ஊரார்க்கு உழைப்பதற்காகவே பிறவி எடுத்த பெருமகன். அன்பு, பாசம், அடக்கம், உயர்வு அனைத்தும் நிறைந்த இச்சால்புடையார் இன்றும் என்னை என் இல்லம் வந்து பார்த்துப் பாராட்டி அன்பு செலுத்திச் செல்வது வழக்கம். இவரின் உயர்ந்த ஒழுகலாறுகளால் இவருக்கு நம் நாட்டு அரசியலில் பதவி கிடைக்கா விட்டாலும் இவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பாக வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் எச். அசன் முஹம்மது எம்.ஏ. அவர்கள்.

ஒருநாள் வழக்கம் போல் இன் இல்லத்திற்கு வந்த அசன் முஹம்மது அவர்களிடம் என் துருக்கிப் பயணம் பற்றிக் கூரி, உங்கள் மகன் பணியாற்றும் இரகுமான் நிறுவனத்தின் கிளைகள் துருக்கியில் ஏதாவது இருக்குமா ? என்று கேட்டேன்.

நீங்கள் உலகமெல்லாம் தமிழ் வளர்ப்பதைக் கண்டு மகிழ்பவர்களில் தலையானவன் நான் எனபதை அறிவீர்கள். சாதாராண ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி இன்று பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்று உயர்ந்த முன்னேற்றம் கண்டுள்ள உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அபுதாபியிலுள்ள என் மகனுக்கு எழுதுகிறேன் என்றார்.

வருமுன் காக்க இரு மடல்கள்

சில நாள்கள் கழித்து அவரின் மகனிடமிருந்து எனக்கு மடல் வந்தது. அம்மடலில் கண்ட செய்தியாவது :

அசன் புதல்வர் விடுத்த நிசமனத்தின் நீட்டோலை

இறையருள் முன்னிற்க

பேரன்புள்ள ஐயா பெருங்கவிக்கோ அவர்களின் சமூகத்திற்கு அசன் முஹம்மது வரையும் மடல். நலம் தங்களின் நலனுக்கும் தங்களின் குடும்பத்தினரின் நலத்திற்கும் எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக இருக்கிறேன்.

தாங்கள் துருக்கி நாட்டிற்குச் செல்வது குறித்து என்னுடைய அத்தா அவர்கள் தெரியப்படுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள். அத்துடன் ஒரு தமிழ்க் கவிதையை கெளரவித்துப் பட்டங்கள் வழங்கும்பொழுது, அது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாக இருக்கும். குறிப்பாக தாங்கள் பெறும் பெருமை எங்கள் குடும்பத்தில் உள்ள ஓர் அங்கத்தினருக்கு கிடைக்கும் பெருமை என்று நினைத்து மகிழ்கிறேன். தங்களுடைய பயணங்கள் இனிது நடந்து முடிய என்னுடைய வாழ்த்துக்கள்.

தங்களின் துருக்கிப் பயணம், துருக்கி நாட்டில் குறைவாக இருப்பதாகக் கருதினாலும், வேறு உதவிகள் அங்கு உங்களுக்குத் தேவைப்பட்டால் துருக்கியில் இருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

மற்றவை தங்களின் அன்பு மடல் கண்டு

தங்களின் அன்புள்ள

ஹஸன் அஹமத்

( துருக்கியில் பெருங்கவிக்கோ பயண நூலிலிருந்து ) 1992

நவம்பர் 14 ..............

நவம்பர் 14 குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். அதே நவம்பர் 14 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப் பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த
அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது
ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:
பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்! சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes-- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM)- இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.
வகை - II (Type - II):: Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்
மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய் (gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில் (pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக (glycogen- கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது (பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாகம்' போடுவது மாதிரி!). அடுத்த உணவு கிட்டாத போதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogenஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லாதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?

தொடர்ச்சிக்கு.... இங்கே. Part2 , Part3, Part4
கடந்த ஆண்டு எழுதிய இந்த கட்டுரை இணையத்தில் உள்ளன பார்வையிடவும்.


M.Hussainghani [ஹூஸைன்கனி] hussainghani@gmail.com

http://chittarkottai.com/kaayaa_pazhamaa/index.html

Monday, November 12, 2007

கீழக்கரை அஞ்சலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் துணைத்தலைவர்

உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்

உயிர் காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவ மனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி. உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ளதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.


mujib@nahil.com.sa

Sunday, November 11, 2007

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் இன்று வெளியான ஒரு கவிதை...


----- Forwarded Message ----
From: Malar Saba
To: ezuththukkoodam@googlegroups.com
Sent: Saturday, November 10, 2007 5:08:54 AM
Subject: [Ezuththukkoodam] மணிக்கணக்கு Vs Moneyகணக்கு



அன்புடையீர்!

வனக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த "சொல்வேந்தர் குழு" நிகழ்ச்சி ஒன்றில் "இல்லத்தரசிகளுக்கு விடுமுறை ஏன் கொடுப்பதில்லை?" என்ற தலைப்பில் ஒரு மணித்துளி என்னைப் பேச அழைத்த போது..விடுமுறை வேண்டுமென்பதற்காகவே நான் வேலைக்குப் போகாமல் இல்லத்தரசியாக இருப்பதாகக் கூறினேன்...

அன்று எழுதிய கவிதை இது..

கடந்த எழுத்துக்கூடச் சந்திப்பின் போது ஒரு தருணத்தில் திருமதி. ஜெயந்தி பாலமுகுந்தன் அவர்கள் பெண்கள் வேலைக்குப் போனதும் நிறைய மாறிவிட்டது என்று கூறினார்கள்...அப்போது இக்கவிதை நினைவுக்கு வந்தது..எழுத்துக்கூடத்தில் பதிவிட எண்ணினேன்..

அயல்நாட்டில், குறிப்பாக இங்கே வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இதுதான்..விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்...(இந்தியாவில் நிலைமை சற்றுத் தேவலாம் என்பது என் கருத்து)

பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பதல்ல கருத்து...அவர்கள் சந்திக்கும் இழப்புகளே கவிதையின் வழக்கு...

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

என் தலையைக்
கோத நேரமில்லாத நிலை..
பிள்ளை தலைவாரிப்பூச்சூட்டிப்
பாடசாலைக்கு அனுப்புவதென்பது
கனவாகிப் போனது..

வாய்க்கு ருசியாகச்
சமையல் செய்து
வருடங்கள் ஆகிவிட்டது..
லக்கி கஃபே தோசை
முனைக்கடை ஷவர்மா
பழகிப் போய்விட்டது..

அனலாய்க் காயும் காய்ச்சல்
பிள்ளைக்கு என்றாலும்
தனியாய்த் தவிக்க விட்டுவிட்டுக்
கடமைக்காய் மருந்து கொடுத்துக்
கடமைக்காக விரையத்
தாய்மனம் தயாராகிவிட்டது...

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து
அலுத்து விட்டது
விசேட வகுப்புகளில்
மாலையிலும் வீடு
மாணவர்களால் நிறைந்திருக்க..
தயங்கித் தயங்கி ஐயங்களோடு
காத்திருந்து காத்திருந்து
என் பிள்ளை தூங்கியே போய்விட்டது...

பள்ளியில்கூட
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
மும்மாதம் ஒருமுறை..
இங்கு கணவன் மனைவி சந்திப்பு
பெற்றோர் பிள்ளைகள் சந்திப்பு..
வருடத்தில் எப்போதோ சிலமுறை..

கணவன் கூட மணிக்கணக்காய்ப் பேசி
மாதங்கள் பல ஆகிவிட்டது..
பிள்ளைகளைக் கொஞ்சிப் பேசி
வாரங்கள் பல ஆகிவிட்டது
வார இறுதிகளிலும்
விருந்து கடைகள் ...
நடனம் பாட்டு என்று
பிள்ளைகளின் வகுப்புகள்...
போதும் போதும் என்றாகிவிட்டது..

கவிதை எழுத,ரசிக்க,
கைவேலை தையல் செய்ய
இன்னிசை ரசிக்க
சுஜாதா பாலகுமாரன்
வரிகளில் லயிக்க.......
நேரமின்றிப் போனது

தேவைகளின் அழைப்பில்
சேவைகள் செயலிழந்து போனது

மாத இறுதியில்
கைகளில் கிடைக்கும்
பணத்தின் கனத்தில
மனதின் கனம்
கொஞ்சம் மயங்கிவிட்டது

ரியால்களை ரூபாயாக
மாற்றி மகிழும்
Money கணக்கில்
மணிக்கணக்குகள்
தொலைந்த கதை
மறந்தே போய்விட்டது...

அன்புடன்,
மலர்.

Friday, November 9, 2007

முதுகுளத்தூர் இஸ்லாமியப் பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் இஸ்லாமியப் பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா


ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 18.03.2007 ஞாயிறு மாலை பயிற்சி மைய வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி எஸ் பஷீர் சேட் ஆலிம் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர் எம் அஹமது பைசல் முன்னிலை வகித்தார். திடல் பள்ளி இமாம் மெளலவி அமானுல்லா இறைவசனங்களை ஓதினார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் H.A. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நல்கினார்.

தீனியாத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ் அப்துல் காதர் சிறப்புரை வழங்கினார். பள்ளித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான ஹாஜி எம் அன்வர் பரிசு வழங்கி வாழ்த்துரை நல்கினார்.

விடியல் வெள்ளி மாத இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று பாராட்டுப் பெற்ற மாணாக்கர்களுக்கு முதுவைக் கவிஞர் மெளலவி உமர் ஜஹ்பர் பரிசு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திடல் ஜமாஅத் தலைவர் M.A. முஹம்மது மசூது, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் என் காஜா நிஜாமுதீன் குரைசி, ஆசிரியர்கள் ஏ அஸ்கர் அலி, எம். முஸ்தபா கமால், ஏ ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறு சிறு தலைப்புகளில் எம். பெனாசிர், கே. அஜிபா நஸ்ரின், •பாத்திமா, ஏ அஹமது, ஏ. நுஸ்ரத் ஹசினா, எம். ராபியா பீவி, பி. பாவா பக்ருதீன் ஆகிய மாணவ, மாணவியர் உரை வழங்கினர்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர் ஏ அஹமது இம்தாதுல்லாஹ் சேட் நன்றி கூறினார்.

இதுபோன்ற கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு அமீரகத்தில் வாழ்ந்து வரும் முதுகுளத்தூர் ஜமாஅத்தார்கள் உதவிகளைச் செய்து வருகின்றனர்.


NEWS PUBLISHED IN

http://www.chittarkottai.com/muduvai/information_310307.htm

Quranin Kural Tamil Monthly
MAY 2007

கவிதை.....மனைவி..... ஒய். முபாரக் ரஸ்வி குவைத்

Sunday, November 4, 2007

An interesting article by Dr.Gopalkrisnan, Chairman, Tata Sons on JOB HOPPING.

An interesting article by Dr.Gopalkrisnan, Chairman, Tata Sons on JOB HOPPING.

Food for thought definitely for those looking for a change or those who change jobs very frequently. Why are so many people leaving one job for another? Is it passe now to work with just one company for a sufficiently long period?

Whenever I ask this question to people who leave a company, the answers I get are: "Oh, I am getting a 200% hike in salary"; "Well, I am jumping three levels in my designation"; "Well, they are going to send me abroad in six months". Then, I look around at all the people who are considered successful today and who have reached the top - be it a media agency, an advertising agency or a company. I find that most of these people are the ones who have stuck to the company, ground their heels and worked their way to the top . And, as I look around for people who changed their jobs constantly, I find they have stagnated at some level, in obscurity!
In this absolutely ruthless, dynamic and competitive environment, there are still no short-cuts to success or to making money. The only thing that continues to pay, as earlier, is loyalty and hard work. Yes, it pays! Sometimes, immediately, sometimes after a lot of time. But, it does pay. Does this mean that one should stick to an organization and wait for that golden moment? Of course not. After a long stint, there always comes a time for moving in most organizations, but it is important to move for the right reasons, rather than superficial ones , like money, designation or an overseas trip.

Remember, no company recruits for charity. More often than not, when you are offered an unseemly hike in salary or designation that is disproportionate to what that company offers it current employees, there is always an unseen bait attached.
The result? You will, in the long-term, have reached exactly the same levels or maybe lower levels than what you would have in your current company.
A lot of people leave an organization because they are "unhappy". What is this so-called-unhappiness? I have been working for donkey's years and there has never been a day when I am not unhappy about something in my work environment - boss, rude colleague, fussy clients etc.

Unhappiness in a workplace, to a large extent, is transient. If you look hard enough, there is always something to be unhappy about. But, more importantly, do I come to work to be "happy" in the truest sense? If I think hard, the answer is "No". Happiness is something you find with family, friends, may be a close circle of colleagues who have become friends.

What you come to work for is to earn, build a reputation, satisfy your ambitions, be appreciated for your work ethics, face challenges and get the job done.
So, the next time you are tempted to move, ask yourself why are you moving and what are you moving into? Some questions are:

Am I ready and capable of handling the new responsibility? If yes, what could be the possible reasons my current company has not offered me the same responsibility?
Who are the people who currently handle this responsibility in the current and new company? Am I as good as the best among them?

As the new job offer has a different profile, why have I not given the current company the option to offer me this profile?

Why is the new company offering me the job? Do they want me for my skills, or is there an ulterior motive?

An honest answer to these will eventually decide where you go in your career - to the top of the pile in the long term (at the cost of short-term blips) or to become another average employee who gets lost with time in the wilderness?

" DESERVE BEFORE YOU DESIRE " - Dr. Gopalkrishnan, Chairman TATA Sons

கிழக்கின் திருமகள் --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

கிழக்கின் திருமகள் --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
================= ============================

"கிழக்கின் திருமகளே வருக" அப்படித்தான் பேநஸீர் ஸுல்ஃபிக்கார் அலி புட்டோ ஆசிஃப் அலி சர்தாரியின்
பாகிஸ்தான் மீள்வருகையை அந்த நாட்டுப்பத்திரிகைகள் தலைப்பிட்டு வரவேற்றன. இது அவர் எழுதிவெளியிட்டுள்ள சுய சரிதை நூலின் தலைப்புமாகும் (Daughter of the East).

ஆனால், அவரது எதிர்ப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டு ஐநூறுக்கும் மேற்பட்டோரை
காயப் படுத்திய இரத்தம் தோய்ந்த 'வரவேற்பை' அவருக்கு வழங்கி இருக்கிறார்கள். இதற்கு முன்பும் அவர் நாடு
திரும்பியது ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் தான் - தந்தை பூட்டொவை ஜெனரல் ஸியாவுல் ஹக்கின்
தூக்குக் கயிறுக்கு பரிதாபமாகப் பலிகொடுத்த - பறிகொடுத்த ச்சூழ்நிலையில்.

ஆனால், இம்முறை சுயமாகப் பிரகடனம் செய்து கொண்ட அஞ்ஞாத வாசம் துபையிலும் - லண்டனிலும்.
1996 ம் ஆண்டு இன்னொரு பரம அரசியல் எதிரி நவாஸ் ஷரீஃபிடம் தேர்தலில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் அவரது மென்னியைப் பிடித்து நெறீக்க அதன் மூச்சுத்
திணறலிலிருந்து விடுபட - ஓடி ஒளிய மேற்கொள்ளப்பட்ட 'வனவாசம்' அது. அதிலிருந்து மீண்டு, மீண்டும்
தாயகம் திரும்பியுள்ளார். ஜனவரியில் நடக்கவிரூப்பதாகச் சொல்லப் படும் பொதுத் தேர்தலில் பங்கேற்று
மூன்றாவது முறையாகப் பிரதமராவார் என்பது சிலரது கணிப்பு. பலரது எதிர்பார்ப்பு.

ராணுவ உடை தன் உடலில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைதான், தான் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க
முடியும் என்பது பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷ்ரஃபின் நம்பிக்கை. ஆனால் மக்கள் மத்தியில்
அதற்கு வரவேற்பு இல்லை. ஒன்றில் தளபதி அல்லது அதிபர். இரண்டும் சேர்த்து வேண்டாம் என்பது மக்கள்
நினைப்பு. அதிலும் 'இஸ்லாமிய தீவிரவாதத்தை' அடக்குகிறேன் பேர்வழி என்று அவர் அமேரிக்காவின்
'கோலுக்குஆடும் குரங்காக நர்த்தனமாடுவது மக்களிடம் ஏகப்பட்ட வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது.
என்வே முஷரஃப் செய்வது புலிச்சவாரி. என்றும் சாவாரி செய்து கொண்டிருக்க முடியாது. அதற்காக கீழே
இறங்க முயன்றால் புலி நிச்சயம் அடித்துக் கொல்லும்.

எனவே, ராணுவ உடையைக் களைந்து விட்டு அதிபராக ஆட்சி அதிகாரத்தில் தொடர முஷரஃபுக்க்குத்
தேவைப்பட்டது ஒரு ஜனநாயக முலாம் பூசப்பட்ட முகம். இருக்கும் பிரதமர் சவுக்கத் அஸீஸ் போதாது
அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை.

மக்கள் ஆதரவுள்ள் இரண்டு அரசியல் எதிரிகளில் நவாஸ் ஷரீஃபை விட பேநஸீர் தன் பொக்குக்கு
இசைவாக நடந்து கொள்வார் என்ற நினைப்பில், அதிப்பர் மிஷரஃப், சமீபத்தில் நாடு திரும்பிய முன்னாள்
பிரதமர் நவாஸ் ஷரீஃபை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, அடுத்த விமானத்திலேயே நாடு
கடத்தி விட்டார். அதே சமயம் பேந்ஸீர் மீதிருந்த ஐந்து ஊழல் வழக்குகளில் அவருக்கு பொது மன்னிப்பு
வழங்கி, அதற்கோர் சிறப்பு அரசாணை பிறப்பித்து, பேநஸீ தடையின்றி நாடு திரும்ப வழி வகை செய்துள்ளார்

ஆனால் பொது மன்னிப்பு வழங்கும் அதிபரின் அரசாணை உச்ச நீதி மன்றத்தில் சட்டச்சவாலுக்கு உள்ளாகி
இருக்கிறது. பிரதமர் சவுக்கத் அஸீஸும் பேநஸீருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பேநஸீர்
மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார். இது நான்
அடிக்கிற மாதிரி நடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்கிற வகை நாடகமா என்று தெரியவில்லை.

அதிபர் முஷ்ரஃப் ஒரு மாநாட்டுக்காக கொழும்பு சென்று விட்டு நாடு திரும்பும் வேளை அவரது விமானம்
பாகிஸ்தானில் தரை இறங்க அனுமதிக்கக் கூடாது என்று அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷ்ரீஃப்
உத்தரவிட்டார். அந்தரத்தில் தொங்கிய முஷ்ரஃபுக்காக ராணுவம் கிளர்ந்தெழுந்து நவாசிடமிருந்து பிரதமர்
பத்வியைப் பறித்து முஷரஃபிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. அதன் பிறகு அவரே முடிசூடா
மன்னராக - தள்பதியாக - அதிபராக இன்று வரை நீடிக்க்கிறார்.

நவாஸ் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப் பட்டது. பிறகு சவூதி அரச குடும்பத்தின் தலையீட்டால் நவாஸ் நாட்டை விட்டு வெளியேறி சவூதியில் வசிப்பார் - பாகிஸ்தான் திரும்ப
மாட்டார் என்கிற வகையில் ஒரு சமரசத் தீர்ப்பாகி மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலையாகி நாட்டைவிட்டும்
வெளியேறினார் என்பது குழம்பிய குட்டையான பாகிஸ்தான் அரசியலின் உட்-கதை உப-கதைகளில் ஒன்று.

பாகிஸ்தானில் மக்கள் ஆதரவுள்ள தலைவர்கள் என்று கருதப்படும் பேநஸீரும் நவாஸ் ஷரீஃபும் அதிபர்
முஷ்ரஃபைப் பொறுத்த வரை அவரது அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காய்கள் மட்டுமே.
எதை பலி கொடுப்பார் எதை பாதுகாப்பார் என்பது கூட அவருக்கே தெரியுமோ என்னவோ !!!

முஷரஃபை பொது எதிரியாகக் கருதி பேநஸீரும் நவாசும் ஒன்று சேர்வார்களென்று எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் ஜெத்தா - துபை - லண்டன் ஆகிய நகரங்களில் சந்தித்து அந்தரங்கமாக பலமுறை
பேசவும் செய்தாகள். ஆனால் இப்போது ஒன்று சேர்ந்திருப்பது பேநஸீரும் முஷரஃபும் ! அரசியலில் நிரந்தர
நண்பர்களும் கிடையாது, நிரந்தரப் பகைவர்களும் கிடையாதூ. சுயநலம் ஒன்றே நிரந்தரம் என்கிற பழஞ்சொல்
மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

1953 ஜூன் மாதம் 21ம் தேதி பாஅகிஸ்தானின் ஒரு மிகப் பெரிய நிலப் பிரபுத்வ ஜமீன் குடும்பத்தில் பிறந்த
பேநஸீர் இங்கிலாந்தில் ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் அமெரிக்காவில் ஹாவர்ட் பல்கலை கழகங்களுக்கு வர்த்தகப்
படிப்புக்காக அனுப்பட்டார். அப்போது அரசியல் சாயமோ அல்ல்து சாயலோ அவர் மீது படர்ந்திருக்கவில்லை.

ஆனால் 1977ல் பதவி பறிக்கப் பட்டு 1979ல் அவர் தந்தை தூக்கிலிடப்பட்ட அந்தக் கொடிய சம்பவம் முப்பது
வயதைக் கூட எட்டியீராத அந்த இளம் பெண்ணின் வழ்க்கையையே தலை கீழாகத் திருப்பிப் போட்டுவிட்டது
அரசியல் அவரது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வகை வெஞ்சினத்துடன் வந்து ஒட்டிக்கொண்டது.

படிப்பை ல்லாம் கை விட்டு விட்டு தன் தந்தையைக் கொன்ற ஸியாவுல் ஹக்கை மூர்ர்க்கமாக எதிர்க்கும்நோக்கத்துடன் 1986ல் நாடு திரும்பினார். பெருச்சாளியை நசுக்கிய பருந்துக்கு சுண்டெலியை
நசுக்குவதொன்றும் பெரீய காரியமல்ல. ஆனால் பேநஸீருக்கு இருந்த மக்கள் ஆதரவும் அனுதாபமும்
ஹக்கை யோசிக்கவும் - நிதானிக்கவும் வைத்தன.

எதிபார்த்தது போலவே இரண்டே ஆண்டுகளில் பேநஸீர் பாகிஸ்தானின் பிரதமராக அரியணை ஏறினார்.
அப்போது முப்பத்தைந்து வயதே ஆகியிருந்த பேநஸீர் உலகிலேயே இளம், அதிலும் முதல் முஸ்லீம்
பிரத்மர் என்கிறபேற்றையும் பெற்றார்.

ராணுவத்துடன் சுமுகப் போக்கு இல்லை - மோதல் போக்கே நீடித்தது. எனினும் மக்கள் ஆதரவால் 1993ல்
மீண்டும் பிரதமரானார். ஆனால் சோகங்கள் அவரைச் சூழ்ந்தன. அவரது மூத்த ச்கோதரன் முர்த்துஸா
காவல் துறையோடு நடந்த ஒரு மோதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இளைய ச்கோதரன்
ஷா நவாஸ் ஃபிரன்சில் வைத்து ஏற்கனவேயே மர்மமான சூழ்நிலையில் இறந்து போயிருந்தார்.

முர்த்துஸாவின் கொலையில் அதிபர் ஃபாரூக் லெகரியின் கரும் கைகளுக்கு பெருத்த பங்குண்டு என்று
பேநஸீர் குற்றம் சுமத்தினார். அதற்கு லெகரியிடமிருந்து வந்த பதில் பேநஸீரின் பத்வி நீக்கம். தொடர்ந்து
நடந்த தேர்த்லில் நவாஸ் ஷரீஃப் பதவிக்கு வந்தார். பேநஸீர் மீதும் அவர் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி
மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். வழக்கு - விசாரணை - தண்டனை என்கிற சம்பிரதாயங்கள் தொடர
கணவர் மாட்டிக் கொள்ள பேநஸீர் 1999ல் நாட்டை விட்டும் வெளியேறி விட்டார்.

எட்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கணவர் சர்தாரியும் மக்களும் துபையிலேயே தங்கிவிட, இளைய
ச்கோதரி சனம், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சகிதம் 'கிழக்கின் திருமகள்' தாயகம் திரும்பி இருக்கிறார்.

நவாஸ் ஷரீஃபும், தான் ஒரு முறை பலவந்தமாக திருப்பி அனுப்பப் பட்டும் மீண்டும் வரப்போவதாக
அறிவித்திருக்கிறார். ஜனவரியில் பொதுத் தேர்தல் வரலாம் ன்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பேநஸீருக்கு
மக்கள் ஆதரவு இருக்கிறது. நவாசுக்கு மக்கள் மத்தியில் நிறைந்த அனுதாபம் இருக்கிறது. ஆனால்
முஷ்ரஃபின் ஆதரவும், அனுசரணையும் பேநஸீர் பக்கம் இருக்கின்றன. ஆனால் முஷ்ரஃபுக்கு மக்கள் செல்வாக்கு
அதிகம் இருப்பதாகச் சொல்ல முடியாது. அதிலும் மார்க்க அறிஞர்கள் மத்தியில் நிறையவே கெட்ட
பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானின் மார்க்க அறிஞர்கள் என்பது ஒரு மிகப் பெரிய
அரசியல் சக்தி - உறுமாமல் இருக்கும் எரிமலை.

முஷரஃப் பல அரசியல் சவால்களைச் சந்தித்திருக்கிறார் - சமாளித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக
பல கொலை முயற்சிகளிலிருந்து நூலிழையில் தப்பிப் பிழைக்குமளவுக்கு அதிர்ஷ்டம் அவருக்குக் துணை
நின்றிருக்கிறது. எப்போதும் துணை நிற்குமா என்பது 64,000 டாலர் கேள்வி.

ஒரு நாட்டின் தலைவிதி அந்தந்த நாட்டின் தலலவர்களைப் பொறுத்து அமையும் என்பார்கள்.பாகிஸ்தானின்
தலை விதி எப்படி அமையப் போகிறதோ ? ஆண்டவன் தான் அந்த நாட்டையும் அதன்
மக்களையும் அதன் தலைவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்

மா.பொ.சி. குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை போட்டி

மா.பொ.சி. குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை போட்டி

சென்னை, நவ. 3: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் தமிழ்த் தொண்டு குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மாணவர்களின் இலக்கிய ஈடுபாட்டையும், ஆய்வு நோக்கையும் ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதமாக 40 ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் பரிசாக 5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும், பரிசு பெற்ற மாணவர் படிக்கும் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

தமிழகத்தின் 16 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரை 50 பக்கங்களிலிருந்து 60 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கோள் நூல்பட்டியலை இறுதியில் குறிப்பிடப்பட வேண்டும். மேடைப்பேச்சு, இதழியல், நூலாக்கம், இயக்கப்பணி ஆகிய துறைகளில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய ம.பொ.சி. குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதி மொழி, கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப் பேராசிரியரின் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரை வந்து சேரக் கடைசி நாள்: 2007 டிசம்பர் 31. கட்டுரைகள் அனுப்பவும், மேலும் தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முனைவர் பா. வளன் அரசு, தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002, தொலைபேசி: 0462-2579967.

Saturday, November 3, 2007

முதுகுளத்தூரில் போக்குவரத்து துவங்கியது

முதுகுளத்தூரில் போக்குவரத்து துவங்கியது


முதுகுளத்தூர், நவ. 2: முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தணிந்து, போக்குவரத்து துவங்கியது. மக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.

முதுகுளத்தூர் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அக.29-ந் தேதி இரவு நிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து நவ.1-ந் தேதி வரையிலும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியூர்கள் சென்று, வர முடியாமல் அவதிப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பையடுத்து, நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் ஓடின.

முதுகுளத்தூரில் இருந்தும், முதுகுளத்தூர் வழியாகவும் ஓடும் 41 பஸ்களில் 39 பஸ்கள் ஓடுகின்றன என்று வட்டாட்சியர் ரெங்கன் கூறினார்.


www.mudukulathur.com

ஒரு பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும்

ஒரு பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் (வீடியோ) - மவ்லவி அலி அக்பர் உமரி

http://www.islamiyadawa.com

இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும்

இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும்

இந்தியாவின் பொருளாதாரம் உச்சகட்டத்தை எட்டி விட்டது. பங்குச்சந்தைக் குறியீட்டு எண் 20,000 தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டிப் படைத்த டாலர் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 ஆக மாறி விட்டது.உலகின் மிகப் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாறி விட்டார். இந்தியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வளர்ச்சியா, வீக்கமா என்று என்னுள் மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இது வளர்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். நமது கட்டுரையின் நோக்கம் இதை ஆராய்வது அல்ல. வளைகுடாவில் இருக்கும் லடசக்கணக்கான இந்தியர்களுக்கும், இந்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதே ஆகும்.

பொதுவாக வளைகுடா பிரதேசங்களில் இருக்கும் இந்தியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களே. அதிலும் தமிழர்கள் 350,450 திர்ஹமிற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். . சுருக்கமாகச் சொன்னால் 80 சதவீதம் பேர் 8000 ரூபாய்க்குள் வேலை செய்பவர்களே. காலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்து இந்த பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக டாலரின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் நிலை திண்டாட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2002 ல் 750 திர்ஹம் இருந்தால் 10,000 ரூபாய் அனுப்பி விடலாம். (2002 மே 1000 ரூபாய் = 74.30)ஆனால் இப்போது 970 திர்ஹம் தேவைப்படுகிறது. 2007 மே கிட்டத்தட்ட 15 முதல் 20 சதம் வரை இழப்பு ஏற்படுகிறது.ஆனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்னதான் உயர்ந்தாலும் விலைவாசி குறைவதாய் இல்லை. அதற்கு அரசும் ஏதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. பாலின் விலையும், அரிசி, பருப்பின் விலையும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைவதே இல்லை.

5000 அனுப்பியவர்கள் இப்போது 4000 மட்டுமே அனுப்ப முடிகிறது. 5000 த்தில் துபாய் செல்ல வாங்கிய கடன், அதற்கு வட்டி, வட்டி போட்ட குட்டி என அனைத்தையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டவர்கள் இப்போது 4.000 எனும் போது மேலும் முழி பிதுங்கி நிற்கின்றனர்.

வளைகுடாவில் சம்பள உயர்வு என்பது பெரும்பாலான நிறுவனங்களில் கானல் நீர்தான். அபி அப்பா குறிப்பிட்ட அந்த இரு பெரிய கிளினிங் கம்பெனிகளில் ஆண்டாண்டுகாலமாக 350, 450 திர்ஹம் தான் சம்பளம். சம்பள உயர்வே கிடையாது.ஆனால் இந்தியாவில் எவையெல்ல்லாம் அத்தியாவசியத் தேவையோ அவையெல்லாம் விலை உயர்கின்றன. ஆடம்பரத் தேவை உள்ளவைகளின் விலை குறைகின்றன்.

இதனுடைய வெளிப்பாடு தான் சமீபகாலங்களில் துபாயில் நடக்கும் போராட்டங்கள் போன வாரம் 4000 பேர் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப்பட இருந்தனர். ஆனாலும் அதில் 100 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன். 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் - அபுதாபி சாலையில் மறியல் செய்யப்பட்ட போது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த அரசும் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு நாடுகள். எது நடந்தாலும் நாட்டாமை புஷ் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பவர்கள். டாலர் வீழ்ச்சியடைந்து வரும் போது அவர்களுடைய நாணய மதிப்பை அதிகரிப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு அதற்கு உரிமையில்லை.

1. டாலருக்கு நிகரான தமது நாணய மதிப்பை வளைகுடா நாடுகள் உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப் போவதில்லை.
2. வளைகுடா நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் ( இந்தியர்கள் வேலை செய்யும் பல நிறுவன நிர்வாகிகள் இந்திய பண முதலைகள் என்பது வேதனை) தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தப் போவதும் இல்லை.
3. இந்தியர்கள் வளைகுடாவை விட்டு 'போதும்பா சாமி' என்று திரும்பப் போவதும் இல்லை.
4. வழக்கம் போல இந்தியாவில் விலைவாசி குறையப் போவதுமில்லை.
5. இந்திய வெளியுறவுத் துறையோ, தூதரங்களோ தொழிலாளர்கள் நன்மைக்காக எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடப் போவதில்லை.

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு?.எல்லாம் நம் தலையெழுத்து என்று கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக் கொண்டே வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.
__._,_.___
mujib@nahil.com.sa

Wednesday, October 31, 2007

முதுகுளத்தூர்-பரமகுடியில் ஜாதிக் கலவரம் வெடித்தது- ஆங்காங்கே மோதலில் பலர் காயம், பெரும் பதற்றம்

முதுகுளத்தூர்-பரமகுடியில் ஜாதிக் கலவரம் வெடித்தது- ஆங்காங்கே மோதலில் பலர் காயம், பெரும் பதற்றம்
புதன்கிழமை, அக்டோபர் 31, 2007


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரு ஜாதியினரிடையே மோதல் மூண்டது. கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் பலர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் தென் மாவட்டங்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பதட்டமான பகுதிகளில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

ஆனால் அதையும் மீறி பரமக்குடி, முதுகுளத்தூர், சத்திரக்குடி ஆகிய ஊர்களில் ஜாதிக் கலவரங்கள் ஏற்பட்டன.

தேவர் ஜெயந்தியைக் கொண்டாடியவர்களுக்கும், இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கல்வீச்சு, அடிதடி உள்ளிட்ட கலவரங்கள் ஆங்காங்கு நடந்தன.

இந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து இந்த ஊர்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/10/31/tn-communities-clash-passengers-injured.html

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது!

தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது!



தமிழக வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்படுகிறது!

பாராளுமன்ற இணைக்குழு பாராட்டு!!
-இப்பி பக்கீர்-

நாடு முழுவதும் வக்ஃப் வாரியங் களின் நிலைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய நாடாளுமன்ற இணைக்குழு (Joint Parliamentary Committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள வக்ஃபுகளின் நிலைகளை ஆராய்ந்து, பொதுமக்களின், சமூக ஆர்வலர்களின் கருத்துகளையும் கேட்டு இறுதியாக அவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழகத்திற்கு வந்த இந்த நாடாளுமன்றக் குழு அக்டோபர் 24 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். வக்ஃபு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்களும் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை கவனமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை அரசுத் துறைகளும் அரசு சார்ந்த நிறுவனங்கள், தனி நபர்களும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பலர் கவலை யோடு தெரிவித்தனர். வக்ஃபு வாரியத்தின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு சொத்துக்கள் உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சென்னையில் மாணவ, மாணவியர் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு வக்ஃபு வாரிய பிரச்சனைகளை எடுத்துக் கூறியது முத்தாய்ப்பாக இருந்தது.

கூட்டத்தில் பேசிய ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களில் பலர் தமிழக வக்ஃபு வாரிய தலைவர் செ. ஹைதர் அலியின் வேகமான செயல்பாட் டையும், வக்ஃபு வாரியம் தற்போது ஆற்றி வரும் ஆக்கிரமிப்பு மீட்புப் பணிகள், கல்வி விருது வழங்கும் திட்டம். உலமாக்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி திட்டம் ஆகியவற்றை சிலாகித்து பேசினார்கள்.

இறுதியாக பேசிய நாடாளுமன்ற இணைக்குழுவின் தலைவர் எஸ்.எம். லால்ஜன் பாஷா எம்.பி., அவர்கள் நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 6 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இச்சொத்துகளின் மொத்த மதிப்பு 10 லட்சம் கோடி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் மட்டுமின்றி முஸ்லிம்களே பல சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்கவும் வக்ஃபு சட்டங்களை வலுப்படுத்தவும், வக்ஃபு வாரியத்தை மேம்படுத்துவதற்காகத்தான் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு வக்ஃபு சட்டப்படி வக்ஃபு சொத்துக்களை 3 வருட குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என்று தெரிவித்த அவர் இறுதியாக டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றார்.

இக்கூட்டத்தின் போது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஜே.எம். ஹாரூன், பேரா. காதர் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் 26.10.2007 அன்று பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் திரிபாதி, உள்துறை செயலாளர் மாலதி ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர், காஞ்சி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள், தமிழக காவல் துறை இயக்குநர், மாநகர காவல்துறை ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டத்திலும் பாராளுமன்ற இணைக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியங்களில் மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் செயல் படுவதாக நாடாளுமன்ற இணைக்குழு கூறியது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநில வக்ஃபு வாரியங்களை செயல்பட வலியுறுத்துவோம் என்றும் நாடாளுமன்ற இணைக்குழு தெரிவித்தது.

நன்றி: http://www.tmmkonline.org/tml/others/108930.htm

Tuesday, August 28, 2007

முதுகுளத்தூரில் ரயில் மற்றும் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி

முதுகுளத்தூரில் ரயில் மற்றும் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி

முதுகுளத்தூரில் ரயில் மற்றும் விமான பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல ரயிலில் முன்பதிவு செய்யும் வசதியை பானு கம்ப்யூட்டர் பிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனியர் சிட்டிசன் தள்ளுபடி மற்றுக் தட்கல் முறையிலும் பயணச்சீட்டு முன்பதிவு செய்தும் தரப்படுகிறது. இதற்கு அரசு அங்கீகாரமும் பெற்றுள்ளது.

மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்ல விமான பயணச்சீட்டும் முன்பதிவு செய்து தரப்படுகிறது.

தொடர்புக்கு :

பானு கம்ப்யூட்டர் பிரஸ்
எண் 104 மெயின் பஜார்
முதுகுளத்தூர்
மற்றும்
ஜன்னத் ஜெராக்ஸ் மற்றும் டிராவல்ஸ்
242 மெயின் பஜார்
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
முதுகுளத்தூர்
தொலைபேசி : 04576 222 527
அலைபேசி : 944 328 6667 / 98 656 68298

தகவல் உதவி : தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர்

குறிப்பு : இதுபோல் நம்மவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, August 26, 2007

முதுகுளத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

முதுகுளத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

உங்கள் இல்லத்தில் உள்ள நிலத்தடி உப்பு ( சவர் ) நீரை மல்டி ஸ்டேஜ் ரிவர்ஸ் ஓஸ்மோஸிஸ் சிஸ்டம் ( Multi Stage Reverse Osmosis system ) மிஷின் மூலம் சுவைமிக்க மினரல் குடிநீர் ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

மினரல் குடிநீர் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 0.10 பைசாவுக்கும் குறைவான செலவே ஆகிறது.

இதன் சிறப்பம்சங்கள்
கிட்னியில் கல் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது
இருதய சம்பந்தமான நோய்கிருமிகளை அழிக்கிறது
நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கிறது
வைரஸ் வியாதி வராமல் தடுக்கிறது
மேலும் தண்ணீரில் உள்ள கிருமிகள், நோய் பரப்பும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

உங்கள் இல்லத்தில் மிகக் குறைந்த செலவில் மின்செலவில் ( 24 வோல்ட் ) அடுப்பறையில் பொருத்தும் அளவு அடக்கமான தண்ணீர் சுத்திகரிக்கும் மிஷின்

மேலும் விபரங்களுக்கு

பானு கம்ப்யூட்டர் பிரள்
104 மெயின் பஜார்
பள்ளிவாசல் பள்ளி அருகில்
முதுகுளத்தூர்
தொலைபேசி : 04576 222 527 / 9443286667

Saturday, August 25, 2007

ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்



ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்

ஷார்ஜா பலுதியா கேம்பில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் 24 ஆகஸ்ட் 2007 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுக்கைக்குப் பின்னர் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முஹம்மதலி, முஹம்மது பாரூக், இப்னு சிக்கந்தர், முஹம்மது ஹிதாயத்துல்லா, அஹமது இம்தாதுல்லா, அமீன், முஹம்மது ரிஸ்வி, முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் நோன்புப் பெருநாளையடுத்து வரும் விடுமுறை தினம் அன்று துபாய் மம்சார் பூங்காவில் அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை 31 ஆகஸ்ட் 2007 அன்று அபுதாபியில் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜமாஅத்தார்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நீடூர் நெய்வாசல் ஜாமி ஆ மிஸ்பாஹ¤ல் ஹ¤தா அரபிக் கல்லூரி 61 வது ஆண்டு மவ்லலி ஆலிம் மிஸ்பாஹி மற்றும் மவ்லவி ஆலிம் பாஜில் பாகவி மிஸ்பாஹி பட்டமளிப்பு விழா 26.08.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இவ்விழாவில் நமதூரைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான், தொண்டி முஹம்மத் முஸ்தபா ஆலிம், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

அரபிக்கல்லூரி தலைவர் வழக்கறிஞர் அலஹாஜ் ஏ.எம். சயீத் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்துகிறார்.

இவ்விழாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிமும் பங்கேற்க சென்றுள்ளார்.

Tuesday, August 21, 2007

212 முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்

212 முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள்

முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா ( பகுதி )


முடிமன்னார்கோட்டை
நீராவி
நீ. கரிசல்குளம்
மேலராமநதி
கீழராமநதி
க. நெடுங்குளம்
ஆனையூர்
பாக்குவெட்டி
செங்கப்படை
முதல் நாடு
முஷ்டக்குறிச்சி
சீமானேந்தல்
புதுக்கோட்டை
பேரையூர்
கள்ளிக்குளம்
ஊ. கரிசல்குளம்
க. வேப்பங்குளம்
பம்மனேந்தல்
மாவிலங்கை
அரியமங்களம்
கோவிலாங்குளம்
கொம்பூதி
வில்லானேந்தல்
மு. புதுக்குளம்
இடிவிலகி
பொந்தம்புளி
காடமங்களம்
சடையனேந்தல்
சாம்பக்குளம்
கமுதி
மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்
கமுதி ( பேரூராட்சி )

நன்றி : தினகரன் ஆகஸ்ட் 14, 2007
இந்திய எல்லை மறுவரையறை ஆணையத்தின் அறிவிக்கை எண் : SRO G-32/2007 நாள் ஆகஸ்ட் 13, 2007

Monday, August 20, 2007

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு

தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பதவியின் பெயர் ( காலி இடங்கள் )

டெபுடி கலெக்டர் ( 30 )
டி.எஸ்.பி. ( 32 )
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )
மாவட்ட பதிவாளர் ( 2 )
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )

சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500

வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு

Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in


கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007

Sunday, August 19, 2007

தேர்தல் கமிஷனுக்கு நன்றி

தேர்தல் கமிஷனுக்கு நன்றி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இறுதியில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்படவில்லை என்ற தகவல் அறிந்து தொகுதி மக்கள் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.

இதற்காக தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இதற்காக முயற்சித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

www.mudukulathur.com


புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல்

வியாழன், 16 ஆகஸ்ட் 2007( 10:05 IST )
Webdunia


தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் : பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்.


http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0708/16/1070816002_1.htm

Thursday, August 16, 2007

அப்துல்கலாம் வாசித்த கவிதை

அப்துல்கலாம் வாசித்த கவிதை


காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:



இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!

Posted by வாசகன் at 3:07 PM 2 comments

Source : www.satrumun.com

கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின

Friday, July 27, 2007
கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின


www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற அறிவிப்பே வரவேற்கிறது. அவரைப் பற்றிய குறிப்புகளையெல்லாம் 'முன்னாள்' என்ற அடைமொழி சேர்க்க வலைத்தளம் மூடப்பட்டுள்ளதாக குடியரசுதலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த தளத்தில் அவரது பேச்சுக்கள், புத்தகங்கள், கவிதைகள் மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் போன்றவை இருந்தன. சிறுவர்களுக்கான பகுதியும் பார்வை குறையுற்றவர்களுக்கு ஒலி ஊடக தளமும் இருந்தது. நாளும் 250,000 பேர் வருகைதந்த இந்த தளம் மிகவும் படிக்கப் பட்டு வந்தது.

இனி அவருக்கான தனி தளமாக abdulkalam.com இருக்கும். இது அவர் கு்.தலைவராக பதவியேற்கும் முன் அவரது 69வது பிறந்தநாளன்று இன்ஃபோசிஸ் நிறுவனரால் துவக்கி வைக்கப் பட்டது. இதனை Aeronautical Development Agency யின் துணை திட்ட இயக்குனராக பணிபுரியும் பொன்ராஜ் நிர்வகித்து வருகிறார்.

India eNews - Kalam's writings disappear from presidential website

Posted by மணியன் at 2:02 PM 2 comments


Source : www.satrumun.blogspot.com

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்


சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.

பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.

தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, August 15, 2007

PROFILE OF RAMANATHAPURAM MP



Fourteenth Lok Sabha

Members Bioprofile

Bhavani Rajenthiran,Smt. M.S. K.

Constituency : Ramanthapuram(Tamil Nadu )
Party Name : Dravida Munnetra Kazhagam(DMK)


Father's Name : Late Shri M.C.A. Rathinasamy Thevar
Mother's Name : Smt. Rathinavellammal
Date of Birth : 10/12/1954
Place of Birth : Thirumangalam (Madurai)
Marital Status : Widow
Date of Marriage : 14 Sep 1980
Spouse's Name : Late Shri M.S.K. Rajenthiran
No. of Sons : 1
No.of Daughters : 1
Educational Qualifications :
M.A. (English) and M.A. (Public Administration); M. Litt.(English)
Educated at Madurai Kamaraj University

profession : Businessman


Permanent Address

32, North Car Street,
Ramanathapuram-623 501 (Tamil Nadu)
(04567)220455,224899

Present Address

167, South Avenue,
New Delhi - 110 011
Tels. (011) 23795287, 9868180415 (M)

Position Held

1996-2001 Member, District Panchayat, Ramanathapuram

2001-2004 Chairperson, Municipal Corporation, Ramanathapuram

2004 Elected to 14th Lok Sabha

Member, Committee on Personnel, Public Grievances, Law & Justice







Special Interests : Public Service
Favourite Pastime and Recreation : Reading
Sports and Clubs : Badminton; President, "Indira Ganthi Magalir Manram" , Ramanathapuram


Other Information :

Member, (i) Telephone Committee, 1999-2000; (ii) Parents Teachers Association, Ramanathanpuram; (iii) Development Committee of the Govt. Hospitals, Ramanathapuram; (iv) Committee on Anti Dowry; (v) Committee on Police Friends; (vi) Committee on Labour Welfare; (vii) Committee on Rural Health; (viii) Committee on District Backward Classes; (ix) Committee on Preventation of Crime against women; (x) Doing Research (Ph.D.) at Azhagappa University, Karaikudi, Tamil Nadu

Source : http://www.india.gov.in/outerwin.htm?id=http://loksabha.nic.in/

PROFILE OF MUDUKULATHUR MLA


Member Profile

Thiru MURUGAVEL. K
DMK
203 - Mudukulathur
Ramanathapuram District


Date of Birth : 19-May-1964
Place : Mudukulathur
Education : B.A.,
Marital Status: Married
Occupation : Business
Chennai Address

A 8 D, MLA's Quraters, Omanthurar Government Estate, Chennai -600 002.

Telephone Numbers
(Chennai) 044 - 25361206

Mofussil Address

185/1, East Car Street, 3rd Street, Mudukalathur-623704.

Telephone Numbers
(Mofussil)

04576 - 222555


Source : http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=253