Saturday, February 14, 2009

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு


ராமநாதபுரம்,பிப்.14-

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர், வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்ற தேர்தலை வருகிற மேமாதம் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்யல்பட்டு வருகிறது. இந்த தேர்தலையொட்டி இந்தியாவில் உள்ள பாராளுமன்ற தொகுதிகள் மறுசீராய்வு செய்யப்பட்டு தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு மாற்றிஅமைக்கப் பட்டுள் ளன.

இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் கடலாடி, அருப்புக் கோட்டை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

இதில் தற்போது கடலாடி சட்டமன்ற தொகுதிநீக்கப்பட்டு முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர அருப்புக்கோட்டை தொகுதி விருதுநகர் பாராளுமன்ற தொகுதியுடனும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி சிவகங்கை பாராளுமன்ற தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக தற்போது திருச்சுழி சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதுவரை சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருவாடானைசட்ட மன்றதொகுதி தற்போது ராமநாதபுரம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்

இதன் படி தற்போது தொகுதி மறுசீராய்வுக்கு பின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம்,பரமக்குடி,திருச்சுழி,முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.இந்த தொகுதிகளுடன் ராமநாதபுரம்பாராளு மன்றதொகுதி வருகிற தேர்தலை சந்திக்கிறது. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின்ஆண், பெண் வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

பரமக்குடி(தனி) - ஆண் 92,692, பெண் 94,880 மொத்த வாக்காளர்கள் 1,87,572. திருவாடானை- ஆண் 96,330,பெண் 99,770 மொத்தம் 1,96,100. ராமநாதபுரம் -ஆண் 98,454,பெண்1,01,023 மொத்தம் 1,99,477. முதுகுளத்தூர் -ஆண்1,18,312,பெண் 1,18,995 மொத்தம் 2,37,307. அறந்தாங்கி- ஆண் 74,279,பெண் 76,964 மொத்தம் 1,51,243. திருச்சுழி-ஆண் 77,947,பெண்80,843 மொத்தம் 1,58,790.

இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 5,58,014 ஆண்களும் 5,72,475 பெண்களுமாக மொத்தம் 11 லட்சத்து 30 ஆயிரத்து 489 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

பாராளுமன்ற தேர்தலை யொட்டிராமநாத புரம் பாராளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாகஅமைக் கப்பட உள்ள வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

பரமக்குடி(தனி)- ஆண் 22,பெண் 22,பொது 189 மொத்தம்-233.திருவாடானை- ஆண் 42,பெண் 42,பொது 169 மொத்தம்- 253. ராமநாதபுரம் ஆண்53,பெண் 53, பொது 142 -மொத்தம் 248. முதுகுளத்தூர்- ஆண்37,பெண் 37,பொது 237 மொத்தம்- 311. அறந்தாங்கி ஆண் 22,பெண் 22,பொது 168 மொத்தம் 212. திருச்சுழி- ஆண் 23,பெண் 23,பொது 177 மொத்தம்- 223. இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஆண்,பெண் வாக்குச்சாவடிகள் தலா 199,பொது ஆயிரத்து 82-ம் ஆக மொத்தம் ஆயிரத்து 480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.