Saturday, August 15, 2009

கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி

கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி

சுவனப்பாதை மாதஇதழின் மூலம் நடத்தப்படுகின்ற உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்ற அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி

கடைசி தேதி நீட்டிப்பு:
கட்டுரைகளை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ரமளான் பிறை 25, ஹிஜ்ரி1430 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிசு விபரங்கள்:

சவூதி ரியால் 700 மதிப்புள்ள முதல் பரிசு
சவூதி ரியால் 500 மதிப்புள்ள இரண்டாம் பரிசு
சவூதி ரியால் 300 மதிப்புள்ள மூன்றாம் பரிசு
மற்றும்
பத்திற்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள் மற்றும் கட்டுரை தலைப்புகள் பற்றி கூடுதல் விவரங்களை அறிய பார்வையிடுக:
www.suvanam.com
www.islamkalvi.com
www.satyamargam.com

அல்லது தொடர்பு கொள்க
00966 506096740
00966 567421270

ஆசிரியர்
சுவனப்பாதை மாதஇதழ்
ஜித்தா - சவூதி அரேபியா

குறிப்பு: இச்செய்தி கிடைக்கப்பெறாத மற்ற சகோதரர்-சகோதரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010

ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010


www.mudukulathur.com


சென்னை, சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு மையம் செய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010 க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூ.30,000 வழங்கப்பெறும்.

இவ்வாண்டு அரபுத்தமிழ் – தோற்றம் – வளர்ச்சி – தேக்கம் ( அரபுத்தமிழ் இலக்கிய வரலாறு ) எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில், கணினி அச்சில் இடம் விட்டு, 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ டெம்மி புத்தக அளவு, 200 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒரு புறம் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும். தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2010 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000 வழங்கப்படும்.
தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையைப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும். மேலதிக விபரங்களுக்கு செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை,இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம், எண் 6, மாடல் ஸ்கூல் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006. தொலைபேசி : 2829 7335