Saturday, April 4, 2009

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

மதுரை: "பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர், பிறந்த தேதிக்கான ஆவணமாக பள்ளி மாற்றுச் சான்றிதழைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் இதுவரை பிறந்த தேதியைக் காட்டும் ஆவணமாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் ரிகார்ட் ஷீட்களை கொடுத்தனர். பாஸ்போர்ட் விதிகளின்படி இவற்றை பிறந்த தேதிக்கான ஆவணமாக கருத முடியாது. 1) உள்ளாட்சி நிர்வாகங்கள் கொடுத்த பிறந்த தேதி சான்றிதழ்கள் (26.1.1989ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த சான்றிதழ் கட்டாயம்).2) மாநில/மத்திய பள்ளி தேர்வு வாரியங்கள் வழங்கும் மதிப் பெண் சான்றிதழ்.3) இச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் நோட்டரி பப்ளிக் பொறுப்பேற்று வழங்கும் சான்றிதழை இணைக்க வேண்டும். நோட்டரி சான்றிதழ் இல்லாத அபிடவிட்டுகள் ஏற்கப்பட மாட்டாது என்றார்