Friday, August 15, 2008

முதுகுளத்தூரில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பஸ் நிலை யத்தில் முருகவேல் எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார். இதில் நல்லாசிரியர் அப்துல் காதர், பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி, அரசு மேல்நி லைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி ஆகிய வற்றை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண் டனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமு தேசியக் கொடி ஏற்றி னார். இதில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ïனியன் அலுவலகத்தில் ïனியன் தலைவர் ஈஸ்வரி கருப்பையா தேசியக்கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர்கள் ஆதி மூலம், சுப்பிரமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர். இதே போல பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதி காரி முனியாண்டி முன்னி லையில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் கொடி ஏற்றினார். இதில் துணை தலைவர் ஷாஜ கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு


சென்னை, ஆக. 14: ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 267.62 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வந்த இத்திட்டத்தில், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளையும் சேர்த்து அவர்கள் செலுத்தும் பிரிமீயம் தொகையில் 50 சதத்தை மானியமாக வழங்கிட 2006-07-ல் ரூ.8 கோடியும், 2007-08-ல் ரூ.15 கோடியும், 2008-09-ல் ரூ.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 2005-ல் 1 லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006-ல் 3 லட்சமாகவும், 2007-ல் 5.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை ரூ. 267.62 கோடி என இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 150.53 கோடியும், சிவகங்கை விவசாயிகளுக்கு ரூ. 57.73 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 27.96 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டு தொகையில் 50 சதம் மாநில அரசும், 50 சதம் மத்திய அரசும் ஏற்கின்றன. இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பெற முயற்சிப்பதற்கு, செவிசாய்க்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

""சுதந்திரம் காத்திடுவோம்''

""சுதந்திரம் காத்திடுவோம்''

வீ. சுந்தரமகாலிங்கம்



இப்போது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு,

அப்துல் கலாம் கண்ட கனவு

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில்

இந்தியா வல்லரசு ஆகணுமாம்!

நல்லரசாகவும் நிலவ வேண்டும்!

கொஞ்சம் எனக்குச் சந்தேகம்

அதற்குள் இந்திய தேசம்

மக்கள் தொகையில் முதன்மையாகலாம்!

(இ)லஞ்சம் பெறுவதிலோ உலகில்

கஞ்சத்தனமே இல்லாமல் அஞ்சாம்

இடமாகலாம்! நினைப்பது ஒன்றும்

நடப்பது வேரொன்றும் என்பதாம்

இதுதானோ! வேலை தேடுவோர் பட்டியலில்

இரண்டு கோடியாம்! வறுமைக்

கோட்டின்கீழ் முப்பது கோடியாம். இன்று!

நாட்டில் எங்கும் தீவிரவாதிகளின்

நடமாட்டம்! குண்டுகள் வெடித்துக்

கொண்டாட்டம் கண்டும், மக்கள்,

பயந்து கொண்டும் வாழ்கிறார்!

பயனுள்ள செயல்கள் எல்லாம் தயங்காமல் செயல்பட வேண்டும்

இந்தியா எதிலும் முந்திச் செல்ல

அணுசக்தி, ஒப்பந்தம் நிறைவேற்றிட

அணுகியதில், பாராளுமன்றம் நம்பிக்கை

வோட்டில் பெற்றதாம் வெற்றி!

கோடி கோடியாய்ப் பெற்றனராம் வோட்டுப் போட!

மூடிமூடி வைத்தாலும் மறைக்க முடியுமா?

விலைவாசியோ வானளவு உயர்ந்திட

மலைப்பாக இருக்கிறார் மக்கள்!

நிலையாக விலைவாசி நின்றிட

அலையாக ஆட்சியர் இயங்கிட

கலையாத ஆட்சி நிறுவிட

விலைபோகாமல் தேர்தலில் வென்றிட

தலையாய சேவைகள் செய்திடுவீர்!

உலைபோல உழைத்திடுவோம்! செதுக்கிய

சிலையான சுதந்திரத்தைக் காத்திடுவோம்!

சுதந்திரமே உன்னால்...!

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

http://thamizheamude.blogspot.com/

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று அறிவித்துள்ளவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. வேல்ச்சாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்செல்வனூர் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.), முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்தினரும் அறிவித்துள்ளனர்.

சுதந்திரதின நாளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்பவர்கள் தேசத் துரோகிகள். இவர்களை குண்டர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ராமநாதபுரம், ஆக. 14: ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு இல்லாத அனைத்துப் புதிய குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை பெற்றுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட், செப்டம்பர் 2008 ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் 2 லிட்டர் மண்ணெண்ணையுடன் கூடுதலாக ஒரு லிட்டர் சேர்த்து 3 லிட்டர் வீதம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்



ராமநாதபுரம், ஆக. 14: அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம், ரா.சந்திரசேகரன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அணுக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அவசியத்தையும், அவசரத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்தக் காரியத்தை செய்து கொடுப்பதற்காக உங்களிடம் லஞ்சம் கேட்பார்கள். இதற்கு நீங்கள் லஞ்சம் தரவேண்டியதில்லை. எனவே அவர்களைப் பற்றிய புகார்களை நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் ராமநாதபுரம் பாரதிநகர் ஓம்சக்தி கோயில் அருகில் கதவு எண் 2/1873 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்களுடைய வேலையை முடிக்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தாலும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

முக்கியமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ சொத்து வாங்கி இருந்தாலும் தெரிவிக்கலாம். சொத்து விபரம் (நிலம், வீடு, வீட்டுமனை, வங்கி சேமிப்பு, வாகனங்கள், டெபாசிட், லாக்கர், பாலிசிகள், தங்கம், வெள்ளி முதலிய ஆபரணங்கள், ரொக்கம் முதலியன) பற்றியும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து தபால் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண் 04567-230026 அல்லது இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம் (9443503477), ரா.சந்திரசேகரன் (9442268400) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

ராமநாதபுரம், ஆக. 14: பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சிப் பள்ளியில் இலவசமாக குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடிவில் அவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் முதல்வர் க.மணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 45 நாட்கள் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாம் இம்மாதம் 18 ஆம் தேதி துவங்குகிறது.

வயது 14 முதல் 40 வரையும், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வீட்டு வயரிங், கடைசலர், கியாஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ்-1, பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், தொழிற்சாலைகளில் சான்றிதழ் இல்லாமல் வேலை செய்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் முதல்வர் சு.மணி தெரிவித்தார்.

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது



முதுகுளத்தூர், ஆக. 14: முதுகுளத்தூரில் புதன்கிழமை ரகளை செய்த இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.

காக்கூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் துகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரகளையில் ஈடுபட்டு. பொது மக்களுக்கு இடையூறு செய்தாராம். ரோந்து சுற்றிவந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன், தலைமைக் காவலர்கள் ஐந்துகாயம், செல்வராஜ் ஆகியோர் மணிகண்டனை கைது செய்தனர்.