Wednesday, August 6, 2008

நாளை முதல் முதுகுளத்தூர் தவிர 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாளை முதல் 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம், ஆக. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. நாளை (6ம் தேதி) கடலாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 10ம் தேதியன்று பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12ம் தேதியன்று பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 13ம் தேதி திருப்புல்லாணி பஞ்.யூனியன் பள்ளியில் நடக்கிறது.

வருகிற 14ம் தேதி ராமநாதபுரம் ஆர்சி சர்ச் வளாகத்திலும், 16ம் தேதி பரமக்குடி ஆயிரவைசிய பள்ளியிலும், 17ல் தேவிப்பட்டினம் முஸ்லிம் சட்ட கட்டடத்திலும் நடக்கவுள்ளது.

வருகிற 18ம் தேதியன்று திருஉத்திரகோசமங்கை யாதவ சங்க கட்டடத்திலும், செவ்வூர் பஞ். யூனியன் பள்ளியில் நடக்கிறது. 19ம் தேதி பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி ராமநாதபுரத்தில் பஞ். யூனியன் பள்ளியிலும், 22ம் தேதி மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி தங்கச்சிமடம் பஞ். யூனியன் பள்ளி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

வருகிற 25ம் தேதியன்று போகலூர் பஞ். யூனியன் பள்ளியிலும், 28ம் தேதி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ம் தேதி ஆண்டாவூரணி ஆர்சி சர்ச் வளாகத்திலும், 31ம் தேதி கமுதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பேரையூர் பஞ். யூனியன் பள்ளி, பரமக்குடி நகராட்சி பள்ளியிலும் நடக்கவுள்ளது.

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூர் ஆக. 6: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் முதுகுளத்தூரில் நடந் தது. அரசு மருத்துவமனை யில் நடந்த முகாமிற்கு, முதுகுளத்தூர் இன்ஸ் பெக்டர் பால முருகன் தலைமை வகித்தார். டாக் டர் அஜிஸ் துவக்கி வைத் தார். பேரூராட்சி துணை தலைவர் ஷாஜஹான், ஜமாத் தலைவர் யாசிகை, லோகநாதன் முன்னிலை வகித்தனர். 72 பேர் ரத்ததானம் செய்தனர். ஆசிரியர் துரைப்பாண் டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்


கடலாடி, ஆக. 6: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளிக் கு போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வர்த்தக சங்கத் தினர் கடந்த 31ம் தேதி கடை யடைப்பு போராட் டம் நடத்தினர்.

இதையடுத்து, வர்த்தகர்கள் மற்றும் கட லாடி அரசு மருத்துவ மனை டாக்டர்கள் பிரச்¬ னகள் குறித்த சமா தான கூட்டம் தாலுகா அலு வலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் கதிரேசன், மண்டல துணை வட்டாட்சியர் ரவிராஜ், வர்த்தக சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் செல்வராஜ், டாக்டர்கள் கணேச மூர்த்தி, முத்தரசன் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், சாயல்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் கடலாடி பகுதிவாசிகளுக்கு இருக் கைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத் தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கடலாடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க வேண் டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெளியூரில் இருந்து வரு வதால் மருத்துவ மனை யில் தங்கி சிகிச்சை அளிக்க முடியாது என டாக்டர்கள் மறுத்து விட் டனர். இதுகுறித்து பின் னர் ஒரு தேதியில் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் பேசலாம் என தாசில்தார் கதிரேசன் தெரிவித்தார்.

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவசாயி வீடு சூறை

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவசாயி வீடு சூறை

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவ சாயி வீட்டை சூறையாடி யவரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவ ரது மகன் பால்ச்சாமி(வயது 52). அதே ஊரைச்சேர்ந்தவர் வேலு மகன் ராமையா (65). இவர் தனக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டார் மூலம் வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

இந்நிலையில் இவரிடம் பால்ச்சாமி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும்படி கேட் டுக்கொண்டதன் பேரில் அவ ரது வயலுக்கு மோட்டார் மூலம் ராமையா தண்ணீர் பாய்ச்சினார். ஆனால் இதற் கான வாடகை பணத்தை பால்ச்சாமி கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்த டித்து வந்ததாக கூறப்படு கிறது.

வீடு சூÛ
இதனால் ஆத்திரமடைந்த ராமையா அவரது வீட்டிற்கு சென்று பால்ச்சாமியிடம் தகராறு செய்தார். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடிய ராமையா, அரிவாளை எடுத் துக்கொண்டு பால்ச்சாமியை துரத்தினாராம்.

இதுகுறித்து அவர் முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் பாலமுருகன், சப்- இன்ஸ் பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராமையாவை கைது செய்த னர்.