Monday, March 30, 2009

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'


அரியலூர், மார்ச் 29: தமிழக அரசு ஊனமுற்றோருக்கென சலுகை கட்டணம் விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு பஸ்களில் ஊனமுற்றோர்கள் கட்டணச் சலுகை கேட்டால் நடத்துநரால் அவமதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்கக்கூட்டம் அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் இரா. குணசேகரன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ந. சுகுமார், சங்க பொருளர் க. கனகசபை, மாவட்ட துணைத் தலைவர் மு. ஷேக்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கப்பணத்தில் கையாடல் செய்த மாவட்ட துணைச் செயலர் ஆ. ஜெயபாலை நீக்குவது, ஊனமுற்றோர்க்கு மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ரூ 10 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலராக அரியலூரைச் சேர்ந்த ரா.அன்பழகன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயலர் மா.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கா.சுரேஷ் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் தொகுதியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் இன்று தீவிர பிரசாரம்

ராமநாதபுரம் தொகுதியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் இன்று தீவிர பிரசாரம்
பெரியபட்டிணத்தில் சிங்கை பஷீர் தலைமையில் வரவேற்பு


பனைக்குளம், மார்ச்.30-

ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை தொண்டர்கள் பெரிய அளவில் செய்துள்ளனர்.

பிரசாரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்று ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அவருக்கட்சியின் நிறுவனதலைவர் விஜயகாந்த் ராமநாதபுரம் தொகுதியில் இன்று பிசாரம் செய்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தே.மு.தி.க. கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். பெரியபட்டிணத்தில் பிரபல தொழில் அதிபரும்,பொதுசேவையாளருமான மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கை பசீர் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் செய்யது இபுராகீம், மாவட்ட இளைஞர்அணி துணை செயலாளர் துரை, திருப்புல்லாணி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பெரிபட்டினம் சாகுல் உள்பட கட்சியினர் கவனித்து வருகின்றனர். இதேபோல் நதிப்பாலம், பனைக்குளம், புதுவலசை, சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் போன்ற பகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அவரை வரவேற்க சாயல்குடி எல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி, மாநில மீனவரணி துணைசெயலாளர் முருகநாதன் தலைமையில் ராமநாதபுரம் நகர் செயலாளர் முத்தீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் தர்மராஜ், மண்டபம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்விமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி ராஜா முகம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் ஓவியர் சரவணன் உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு
கடலாடி மார்ச்.30


ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா_வை அறிவித்துள்ளனர்.




வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதால் அதற்கு தலைவரான விஜயகாந்த் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.வேட்பாளர்களின் மூன்றாவது பெயர் பட்டியல் வெளியிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக சிங்கை ஜின்னாவை(38) அறிவித்துள்ளனர்.இவர் சொந்த ஊரான சாயல்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஏ.பட்டதாரியான இவர் விஜயகாந்த் தேமுதிக ஆரம்பித்தபோது தொண்டராக சேர்ந்தார்.




பின்னர் மாவட்ட பொருளாளராகவும்,தற்போது மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவருக்கு மனைவி சபீனா,மகள் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.