Monday, March 30, 2009

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'


அரியலூர், மார்ச் 29: தமிழக அரசு ஊனமுற்றோருக்கென சலுகை கட்டணம் விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு பஸ்களில் ஊனமுற்றோர்கள் கட்டணச் சலுகை கேட்டால் நடத்துநரால் அவமதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்கக்கூட்டம் அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் இரா. குணசேகரன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ந. சுகுமார், சங்க பொருளர் க. கனகசபை, மாவட்ட துணைத் தலைவர் மு. ஷேக்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கப்பணத்தில் கையாடல் செய்த மாவட்ட துணைச் செயலர் ஆ. ஜெயபாலை நீக்குவது, ஊனமுற்றோர்க்கு மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ரூ 10 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலராக அரியலூரைச் சேர்ந்த ரா.அன்பழகன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயலர் மா.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கா.சுரேஷ் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் தொகுதியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் இன்று தீவிர பிரசாரம்

ராமநாதபுரம் தொகுதியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் இன்று தீவிர பிரசாரம்
பெரியபட்டிணத்தில் சிங்கை பஷீர் தலைமையில் வரவேற்பு


பனைக்குளம், மார்ச்.30-

ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை தொண்டர்கள் பெரிய அளவில் செய்துள்ளனர்.

பிரசாரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்று ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அவருக்கட்சியின் நிறுவனதலைவர் விஜயகாந்த் ராமநாதபுரம் தொகுதியில் இன்று பிசாரம் செய்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தே.மு.தி.க. கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். பெரியபட்டிணத்தில் பிரபல தொழில் அதிபரும்,பொதுசேவையாளருமான மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கை பசீர் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் செய்யது இபுராகீம், மாவட்ட இளைஞர்அணி துணை செயலாளர் துரை, திருப்புல்லாணி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பெரிபட்டினம் சாகுல் உள்பட கட்சியினர் கவனித்து வருகின்றனர். இதேபோல் நதிப்பாலம், பனைக்குளம், புதுவலசை, சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் போன்ற பகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அவரை வரவேற்க சாயல்குடி எல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி, மாநில மீனவரணி துணைசெயலாளர் முருகநாதன் தலைமையில் ராமநாதபுரம் நகர் செயலாளர் முத்தீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் தர்மராஜ், மண்டபம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்விமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி ராஜா முகம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் ஓவியர் சரவணன் உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு
கடலாடி மார்ச்.30


ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா_வை அறிவித்துள்ளனர்.




வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதால் அதற்கு தலைவரான விஜயகாந்த் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.வேட்பாளர்களின் மூன்றாவது பெயர் பட்டியல் வெளியிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக சிங்கை ஜின்னாவை(38) அறிவித்துள்ளனர்.இவர் சொந்த ஊரான சாயல்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஏ.பட்டதாரியான இவர் விஜயகாந்த் தேமுதிக ஆரம்பித்தபோது தொண்டராக சேர்ந்தார்.




பின்னர் மாவட்ட பொருளாளராகவும்,தற்போது மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவருக்கு மனைவி சபீனா,மகள் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.

Friday, March 27, 2009

கடற்கரை நிறைந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கரையேறப்போவது யார்?

கடற்கரை நிறைந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கரையேறப்போவது யார்?

ராமநாதபுரம் மார்ச்.26


தமிழ்நாட்டிலேயே ஞிண்ட கடற்கரையை கொண்ட தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி துவக்கத்தில் அருப்புக்கோட்டை லோக்சபா தொகுதி என்று அழைக்கப்பட்டது. இந்த தொகுதி 1957ம் வருடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் போட்டியிட்ட பெருமையுடையது இந்த தொகுதி.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வ.ராஜேஸ்வரன் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரைத்தவிர வேறு யாரும் 2வது முறை கூட இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 30 ஆயிரத்து 489.இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 14,பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 475. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு ராமநாதபுரம்,பரமக்குடி தனி), மானாமதுரை, அருப்புக்கோட்டை,கடலாடி,முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இந்த நாடாளுமன்ற தொகுதியில் இருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு ராமநாதபுரம்,பரமக்குடி(தனி),முதுகுளத்தூர்,திருவாடனை,அறந்தாங்கி,திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் திருச்சுழி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி.அந்த தொகுதியை தவிர மீதமுள்ள 5 தொகுதியிலும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.ராமநாதபுரத்தில் அசன் அலி(காங்),திருவாடனையில் ராமசாமி(காங்),முதுகுளத்தூரில் முருகவேல்(திமுக), அறந்தாங்கியில் உதயம் சண்முகம்(திமுக) ஆகியோர் உள்ளனர்.

இந்த தொகுதியில் அ.இ.பா.பி. கட்சி 5 முறையும்,காங்கிரஸ் 4 முறையும்,அஇஅதிமுக 3 முறையும்,திமுக 2 முறையும்,த.மா.கா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி,முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் சுந்தரபாண்டியன், செ.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஜி.முனியசாமி,அன்வர்ராஜா,மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் உள்பட 67 பேர் சீட் கேட்டு தலைமை கழகத்தில் பணம் கட்டியுள்ளனர். கூட்டணி முடிவானவுடன் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

பா.ஜ.க.சார்பில் அந்த கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் போட்டியிடப்போவதாக அறிவித்து ஓசையின்றி பிரச்சாரத்தையும் துவக்கி விட்டார்.

திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன்,ரகுமான் கான்,சுப.த.சம்பத், பவானி ராஜேந்திரன்,ஜே.கே.ரித்தீஸ் ஆகியோர் சீட் கேட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமானால் ஜே.எம்.ஆருண்,மயூரா ஜெயக்குமார்,சுப.உடையப்பன்,சோ.பா.ரெங்கநாதன் ஆகியோர் உட்பட பலர் சீட் கேட்டு வருகின்றனர்.

எல்லா சாதியை சேர்ந்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 1952 மற்றும் 62ல் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.57ம் வருடம் அம்பலம் சாதியை சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராகவும்,67ல் ஒரு இஸ்லாமியரும்,72,84,89 மற்றும் 91,98,99ல் மறவர் சமூகத்தை சேர்ந்தவரும்,77ல் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவரும்,80,2004ல் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவரும்,96ல் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் தொகுதி மக்கள் சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு, அரசியல் சூழ்நிலைக்கேற்ப ஆழ்ந்து சிந்தித்து தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பவர்கள்.'

தமிழகத்தில் உள்ள பிற்பட்ட தொகுதிகளில் ராமநாதபுரம் தொகுதியும் ஒன்று.வற்றாத ஜீவநதிகளோ,வளம் கொழிக்கும் வயல்_வெளிகளோ இல்லாத பகுதி,தொழிற்சாலைகளோ வேலைவாய்ப்புகளோ அற்ற பகுதி.ஆனால் ''திரைகடலோடியும் திரவியம் தேடு''என்ற முதுமொழிக்கேற்ப வெளிநாடுகளுக்கு சென்று பொருளீட்டி வருகின்றனர்.மண்வளம் இல்லாவிட்டாலும் மன வளம் உள்ள தொகுதி இது.தமிழ்நாட்டில் உள்ள அரசியல் விழிப்புணர்வு கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று.நாட்டு நலன்கருதி இத்தொகுதி மக்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தமிழகம் முழுவதற்குமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


சாதிவாரி வாக்காளர்கள்

முக்குலத்தோர்_2,79,874
தாழ்த்தப்பட்டோர்_254,882
மூஸ்லீம்கள்_1,85,302
யாதவர்கள்_1,45,909
முத்தரையர்கள்_79,873
நாயக்கர்கள்_19,943
நாடார்கள்_29,765
கிறிஸ்தவர்கள்_28,008
சௌராஷ்ட்ரா_17,487
வேளாளர்கள்_உடையார்_20,845
செட்டியார்_26,791
ரெட்டியார்கள்_12,368
பிள்ளைமார்_29,382

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி

1952 முதல் 2004ம் ஆண்டு வரை நடந்த ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:

ஆண்டு பெயர் கட்சி

1952 ராமசாமி செட்டியார் பார்வர்டு பிளாக்
1962 முத்துராமலிங்கத்தேவர் பார்வர்டு பிளாக்
1964 காசிநாததுரை காங்கிரஸ்
1967 ஷெரீப் பார்வர்டு பிளாக்
1971 மூக்கையாதேவர் பார்வர்டு பிளாக்
1977 அன்பழகன் அதிமுக
1980 சத்தியேந்திரன் திமுக
1984 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1989 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1991 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1996 உடையப்பன் த.மா.கா
1998 சத்தியமூர்த்தி அதிமுக
1999 மலைச்சாமி அதிமுக
2004 பவானி ராஜேந்திரன் திமுக

Tuesday, March 24, 2009

முதுகுளத்தூரில் மனித நேயக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் மனித நேயக் கட்சி ஆலோசனைக் கூட்டம்


முதுகுளத்தூர், மார்ச் 23: முதுகுளத்தூரில் ராமநாதபுரம் (மேற்கு) மாவட்ட மனித நேயக் கட்சியின் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் கலிமுல்லாக்கான் தலைமையும் மாவட்ட நிர்வாகிகள் சல்மான், சகுபர் சாதிக், ஜபருல்லாக்கான் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

ஒன்றியச் செயலர் வாவா ராவுத்தர் வரவேற்றார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சாதிக், முஹிதுல்லா, கலிமுல்லா, சம்சுதீன் சேட், காசீம் முகம்மது உள்ளிட்டோர் பேசினர். மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேருமபோது ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மனித நேயக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதற்கு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயலர் அமீருல் ஹக் நன்றி கூறினார்.

Thursday, March 19, 2009

மெட்ரிக்குலேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1042 பேர் தேர்வு எழுதினர்

மெட்ரிக்குலேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1042 பேர் தேர்வு எழுதினர்


ராமநாதபுரம்,மார்ச்.19-

மெட்ரிக்குலேஷன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் நேற்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 42 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினர்.

மெட்ரிக். தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த2-ந் தேதி முதல் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 87 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 763 மாணவ-மாணவி கள் தேர்வு எழுதிவருகின்றனர்.

தமிழகத்தில் மெட்ரிக்கு லேஷன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. அடுத்தமாதம் ஏப்ரல் 8-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் முதல் நாளான நேற்று தமிழ்முதல் தாள் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் மெட்ரி குலேசன் தேர்வை 29 பள்ளி களை சேர்ந்த 496 மாணவர்களும், 460 மாணவி களுமாக மொத்தம் 956 பேர் தேர்வு எழுதினர். பரமக்குடி கல்வி மாவட் டத்தில் மெட்ரிக் குலேஷன் தேர்வை 7 பள்ளிகளை சேர்ந்த 41 ஆண்களும், 45 மாணவிகளுமாக 86 பேர் தேர்வு எழுதினர்.

59 தேர்வு மையங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயி ரத்து 545 மாணவர்களும், 4 ஆயிரத்து 887 மாணவிகளும் மொத்தம் 9 ஆயிரத்து 432 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதேபோல் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 63பள்ளி களில் 3 ஆயிரத்து 977 மாணவர்களும், 3 ஆயிரத்து 927 மாணவிகளுமாக மொத் தம் 7 ஆயி ரத்து 904 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற் காக ராமநாதபுரம் கல்வி மாட்டத்தில் 33 மையங் களும்,பரமக்குடி கல்வி மாவட் டத்தில் 26 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Friday, March 13, 2009

மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடம்

மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடம்


ராமநாதபுரம், மார்ச்.13-

ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடத்திற்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர்களாக பணிபுரிய ஆண்கள்- பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களை அமைப்பது, வழிநடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். முதலில் ஓராண்டு காலத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டு பின்னர் பணி திறன் வயது, சேவை போன்றவற்றின் அடிப்படையில் மேலும் ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட டிப்ளமோ முடித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பை சேர்ந்த 1-4-84க்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த 1-4-81க்கு பிறகு பிறந்த ஆண்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்று அனைத்து வகுப்பை சேர்ந்த 1-4-81க்கு பிறந்த பெண்கள் இந்த பணிக்கு தகுதி உடையவர்கள். மேலும் இளைஞர் மகளிர் மன்ற உறுப்பினார்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வருகிற 31-ந்தேதிக்குள்

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு உதவித் தொகை மற்றும் பயணப்படியாக மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், தந்தை/ கணவரின் பெயர் முழு முகவரி, பிறந்த தேதி, வயது, இனம், கல்வித்தகுதி, பாஸ்போர்ட் புகைப்படத்துடன், சான்றிதழ் நகல்களுடன் மற்றும் பிற விவரங்களுடன் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, 1/372 பாரதி நகர், ராமநாதபுரம்-3 என்ற முகவரிக்கு விண்ணபிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருகிற 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 10, 2009

ராமநாதபுரத்தில் அழகிரி போட்டியிட முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. விருப்ப மனு

ராமநாதபுரத்தில் அழகிரி போட்டியிட முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. விருப்ப மனு

www.muduvaivision.com


மார்ச் 9 ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தென் மண்டல தி.மு.க. அமைப்பாளர் மு.க.அழகிரி போட்டியிட விருப்பமனு, தலைமைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தரப்பட்டது.

முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.முருகவேல் கமுதியில் இது குறித்து கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அழகிரி போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். எனவே ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அவர் போட்டியிட முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. சார்பில் விருப்ப மனுவை தலைமைக் கழகத்தில் நான் (எம்.எல்.ஏ.) கொடுத்துள்ளேன் என்றார்.

முதுகுளத்தூர் தாலுகாவில் கோடை மழை

முதுகுளத்தூர் தாலுகாவில் கோடை மழை


www.muduvaivision.com


முதுகுளத்தூர் தாலுகாவில் திங்கள்கிழமை பகலில் திடீர் கோடை மழை பெய்தது. கோடை காலம் துவக்கமாக கடந்த சில நாட்களாக இத்தாலுகாக்களில் கடும் வெப்பம் நிலவியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் நல்ல மழை பெய்தது. கமுதி தாலுகாவில் லேசான மழை இருந்தது. கோடை மழையால் வெப்பத்தின் கடுமை குறைந்துள்ளது.