Tuesday, July 7, 2009

முதுகுளத்தூரில் ரஹ்மானியா நிறுவனங்கள்

முதுகுளத்தூரில் ரஹ்மானியா நிறுவனங்கள்

முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது.

ரஹ்மானியா எத்தீம் கானா

1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரஹ்மானியா எத்தீம் கானா என்னும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 25 வெளியூர் மாணவர்கள் தங்கி ஓதிப்படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, பள்ளிக் கட்டணம் அனைத்தும் டிரஸ்ட் சார்பாக வழங்கப்படுகின்றன.

ரஹ்மானியா மத்ரஸா

பெண்களுக்காக தனியாக நிஸ்வான் மத்ரஸா நடத்தி சிறுமிகளுக்கு குர்ஆனும், தீனியாத்தும் போதிக்கப்படுவதுடன் 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தில் கற்றுத் தேறிய மாணவி களுக்கு “ஆலிமா” ஷனது வழங்கப்படுகின்றது.

ரஹ்மானியா நூலகம்

பெண்களுக்காக தனியாக நூலகம் ஒன்று ஏற்படுத்தி ஒரு பெண் நூலகரை முழு நேரப் பணியில் அமர்த்தி ஆயிரக் கணக்கான இஸ்லாமிய, மற்றும் பொது நூல்களைக் கொண்டு பெண்கள் மட்டும் படிக்க வகை செய்துள்ளனர்.

ரஹ்மானியா ஐ.டி.ஐ

ரஹ்மானியா ஐ.டி.ஐ ஏற்படுத்தி அனைத்து சமுதாய மக்களும் தொழிற்கல்வி கற்க வகை செய்துள்ளனர். எலக்ட்ரீசியன், வயர்மேன், பிட்டர் ஆகிய 3 பிரிவுகள் போதிக்கப் படுகின்றன.

மிகக்குறைந்த கட்டணத்தில் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றது. மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த பலர் வெளிநாடுகளில் பணி செய்து சிறப்புடன் உள்ளனர்.

தேசிய விருது பெற்றவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான டாக்டர். ஹாஜி S. அப்துல் காதர் M.A,B.ED,D.LiT. அவர்கள் இந்த டிரஸ்டினுடைய மானேஜிங் டிரஸ்டியாக இருந்து சேவை செய்து வருகிறார்.