Thursday, September 11, 2008

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?
கலெக்டர் கிர்லோஷ்குமார் விளக்கம்


ராமநாதபுரம்,செப்.12-

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறு வது எப்படி? என்று கலெக்டர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித் துள்ளார்.

திருமண உதவி தொகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் ஒரு அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் நோக்கமே ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கல்வி நிலையை உயர்த்துதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பொற மணப்பெண் 10ம் வகுப்பு படித்திருக்க வேண் டும்.

18 முதல் 30 வயதுக்குள்ளும், பெற்றோரது ஆண்டு வருமா னம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகா மலும் இருக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் உதவி தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங் களை திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பும், அல் லது திருமணத்துக்கு முதல் நாள் வரையும் விண்ணப்பங் களை அளிக்கலாம்.

சான்றுகள்

விண்ணப்பத்தின் போது மணமகன், மணமகள் இரு வருக்கும் முதல் திருமணம் என்பதற்கான சான்று, மண மகளின் கல்வி தகுதி, மாற்று சான்றிதழ், சாதி, இருப்பிட, வருமான சான்றுகள், மண மகனின் வயது அல்லது கல்வி சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இவற்றுடன் பெற்றோர் மற் றும் மணமக்கள் புகைப் படம் ஆகியவற்றை சேர்த்து அந் தந்த வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் திருமணத் துக்கு முன்பு சமர்ப்பிக்க வேண் டும்.

குடும்ப தலைவர் இல்லை யெனில் விண்ணப்பத்துடன் கணவனின் இறப்பு சான்று அல்லது கணவனால் கைவி டப்பட்டதற்கான சான்று அளிக்கும் பட்சத்தில் தாயார் பெயரில் காசோலை, வரை வோலை வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் வெளி நாட்டில் வேலைபார்த்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப் படும். எனவே தகுதியுள்ள ஏழை பெண்கள் உரிய நேரத் தில் அனைத்து சான்றிதழ்க ளுடன் விண்ணப்பித்து பய னடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.