Wednesday, October 21, 2009

உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்

உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=197


ப‌த்திரிக்கையின் திருப்பிய‌ ப‌க்க‌ங்க‌ளும்,தெலைக்காட்சி சேன‌ல்க‌ளும் ந‌ம்மையும் அறியாம‌ல் ஒரு செய்தியை ந‌ம‌க்கு கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன. ந‌வ‌யுக‌ உல‌கில் ம‌ர‌ண‌ம் என்ப‌து நாம் குடிக்கும் காலை "டீ" க்கு ஒப்பாக்கிக்கொண்டிருக்கிற‌து என்று.

ஒரு இட‌த்தில் விப‌த்து நிக‌ழ்ந்து ஒரு ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டால் கூட‌ அது ப‌ற்றி பெரிதாக பேசிய‌ கால‌ம் போய் சில‌ நொடிப்பொழுதில் ப‌ல்லாயிர‌க்க‌ணக்கானோர் கை, கால்க‌ளை இழுந்து, உயிருக்கு போராடி உயிரைவிடுகிற‌ காட்சிக‌ள் சில‌ வினாடிக‌ளில் ந‌ம் தொலைக்காட்சி திரைக‌ளில் தின‌ம்தின‌ம் க‌ரைந்து போகின்ற‌து ந‌ம் சிந்த‌னை கூட அவ‌ற்றை தொடுவ‌தில்லை..
ச‌மீப‌கால‌மாக‌ தொட‌ர்ந்து வ‌ருகிற‌ ம‌ர‌ண‌ச்செய்திகள் யாவும்
ஆலிம்க‌ள்,ச‌ன்மார்க்கஊழிய‌ர்க‌ள், ச‌மூக ஆர்வ‌ல‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌தாகவே இருப்பது ந‌ம்மை மிக‌ப்பெரிய க‌வ‌லையில் ஆழ்த்துகிற‌து.

ம‌ர‌ண‌ம் என்பது விதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாக‌ இருந்தாலும் அது ம‌னித‌ வாழ்வில் எப்ப‌டி ஆட்கொள்கிறது என்ப‌து ப‌ற்றி குர்ஆன் பல‌ வித‌ங்க‌ளில் எடுத்துரை பாங்கு அலாதியான‌து ப‌ல்வேறு ச‌மூக‌த்த‌ருடைய‌ முடிவுக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்பது பற்றி அறிவிக்கும் குர்ஆன், ந‌மக்கெல்லாம் மிகவும் ப‌ரிச்சிய‌மான‌, குர் ஆனில் அதிக‌மாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌பி மூஸா அலைஹிஸ்ஸ‌லாம் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் அவ‌ர்க‌ளின் எதிரியான ஃபிர்அவுனின் ச‌மூக‌த்திற்க்கு முடிவுரை எழுதிய‌ நிக‌ழ்வை இறைவ‌ன் இப்ப‌டி வ‌ர்ணிக்கிறான்.
அவ‌ர்க‌ளின் ம‌ர‌ணித்திற்க்காக‌ வான‌மும் அழவில்லை பூமியும் அழ‌வில்லை (துஹான்: 29) என்று கூறி முடிக்கிறான்.

ந‌ம் புழ‌க்க‌பாஷையில் " உல‌க‌மே அழுதுச்சி அவர் இற‌ந்த‌ப்ப‌" கேள்விப்ப‌ட்டிருப்போம். ஆனால் அது என்ன‌ வான‌ம் அழுவ‌து பூமி அழுவ‌து??? அப்ப‌டி அழுவுமோ!!! அது எப்ப‌டி அழுவும்? ஏன் அழுவும்? ஏத‌ற்க்காக‌ அழுவும்...

(இன்ஷாஅல்லாஹ் ம‌ல‌ரும்)

உங்க‌ள் ச‌முதாய ஊழிய‌ன்
" ஹ‌ஸ‌னீ “
avoorismail@gmail.com

Tuesday, October 6, 2009

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

ஏர்வாடி தர்காவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளதால் அப்பகுதியினர் வேதனை அடைந்துள்ளனர். கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி தர்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தலத்தை சிறப்பிக்கும் பொருட்டு இதை சுற்றுலா தலமாக மாற்ற அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால்இப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை அமைப்புகள் மற்றும் ஊராட்சி மூலமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும். அரசின் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும் யாத்ரீகர்களின் நலன் கருதி இத்திருவிழாவுக்காக தர்கா நிர்வாகம் கனிசமான தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிறது. சுகாதாரபணிக்கு ஊராட்சி நிர்வாகம் 50 சதவீத செலவை ஏற்கிறது. இதுவே சுற்றுலா தலமாக இருக்கும் பட்சத்தில் இங்கு வருபவர்களுக்கு இன்னும் கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், மாவட்டத்தின் வருவாய் அதிகரிக்கும். இது குறித்து ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் சுற்றுலா துறையினருக்கு பலமுறைவலியுறுத்தியும் பிரயோஜனம் இல்லை. தொடரும் புறக்கணிப்பால அப்பகுதியினர் மட்டுமின்றி வரக்கூடிய யாத்ரீகர்களும் வேதனையடைந்துள்ளனர். தொடர்ந்து கிடப்பில் இருக்கும் அரசின் சுற்றுலா தல அறிவிப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை

ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியில் ப‌ணிபுரிந்து ஓய்வுபெற்ற‌ அப‌ர‌ஞ்சி ஆசிரியை அவ‌ர்க‌ள் ஷார்ஜா வ‌ருகை புரிந்துள்ளார்க‌ள்.

இவ‌ர்க‌ள‌து புத‌ல்வ‌ர்க‌ள் இள‌ங்கோ ம‌ற்றும் குமார் ஆகியோர் அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ருகின்றன‌ர்.

அமீர‌க‌ தொட‌ர்புக்கு : 06 5610729

-~----------~----~----~----~------~----~------~--~---
assalaamu alaikum,

dear brother,
happy see teacher mrs.abaranji "photo.it is a very long time to see her.she is my first std teacher in muslim school(may be 1957to 1958.).mr.chellam vathiyaar also my science teacher.please convey my best regards to her.she may remember me as RAJA
vassalam

msmuthumohamed
9444174904