Sunday, June 21, 2009

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள்.

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள்.

பொருளாதாரப் பின்னடைவுகள் என்பது கல்விக்கில்லை வளர்ச்சிப் பாதையில் செல்லும் துறைகள் தொடர்பான படிப்புகளை திறம்பட கற்றால், நிச்சயமாக எந்த நேரத்திலும் தொய்வில்லாமல் நிரந்தர வேலை வாய்ப்ப்புகளை பெறலாம். தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்திலிருக்கும் +2 மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உதவும் வகையில் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகளை இங்கே இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் நடத்திய் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் அளிக்கப்படுகிற்து.

1. பயோடெக்னாலஜி
மரபணுக்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய துறை. இந்த நுற்றாண்டைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் அதிக வளர்ச்சியடைந்து வரும் துறை இது. பல்வேறு தொற்றுநோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்த பயோடெக்னாலஜி துறை தான் முதுகெலும்பு. தற்போது மருத்துவத்துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவரும் மரபணு சிகிச்சைக்கு இத்தொழில்நுட்பமே ஆதாரம்.
உயிரியல் ஆய்வுப் பிரிவு மாணவர்களுக்கு ஏற்ற துறை இது.
எங்கு வேலை கிடைக்கும்:
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு தற்போது பலத்த வரவேற்பு காத்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் நிறுவனங்கள், தாவர ஆய்வகங்கள், எரிபொருள் நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

2. மருத்துவம்
சாகாவரம் பெற்ற துறை. மருத்துவர்களின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாது, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், பிசியோதெரபி என மாற்று மருத்துவத்துக்கும் தற்பொழுது முக்கியத்துவம் தரப்படுகிறது. மருத்துவம் என்றால் எம்.பி.பி.எஸ் தான் படிக்க வேண்டும் என்றில்லாமல் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பல் மருத்துவம், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், பிசியோதெரபி போன்ற துறைகளை தைரியமாக தாரளமாக படிக்கலாம்.

3. தகவல் தொழில் நுட்பம்
சர்வதேச அளவில் சரிவை சந்தித்திருப்பதாக கூறப்பட்டாலும், எப்போதும் பணியாளர் தேவை கொண்ட துறை இது. சரியான படிப்புகளை முறையாகக் கற்று திறன் பட தேர்ந்தவர்களுக்கு இத்துறையில் ஏப்பொதுமே வரவேற்ப்பு உண்டு. பொறியியல் படிப்புகளில் ஐ.டி பிரிவை அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுத்து படிக்கலாம். பி.எஸ்.சி படிப்புகளில் ஐ.டி பிரிவை அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுத்து படிக்கலாம். ஆனால், எந்த பிரிவை தேர்ந்தெடுத்தொமொ அந்த பிரிவில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் வளர்ச்சிகளை நீங்களும் கற்று தேர வேண்டும்.

4. நிர்வாகம்
எந்த ஒரு துறையாக இருந்தாலும் நிர்வாகம் மிக முக்கியம். எனவே தான் திறமையான நிர்வாகிகளுக்கு எந்த நிறுவனத்திலும் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. ஆனால் சாதாரணமாக இளங்கலை படிப்புடன் சேர்த்து நிர்வாகத்திற்கான டிப்ளமா முடித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என கனவு காண்பவர்கள், காலம் முழுக்க மேலே செல்ல முடியாது. தற்போதைய தொழில் துறையின் அசுர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் உங்கள் திறன் இருத்தல் வேண்டும். நிறுவனங்களும் நிர்வாகம் சார்ந்த பட்ட மேற்படிப்புகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றன, எனவே, முதலில் பி.பி.ஏ அல்லது பி.பி.எம் பிறகு எம்.பி.எ அல்லது எம்.பி.எம் முடித்து விட்டு, பின் நிர்வாகம் தொடர்பான மேற்படிப்புகளைத் தொடர வேண்டும்.

5. அக்கவுண்டிங்
மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திற்கு சற்றும் சளைத்ததில்லை அக்கவுண்டிங் படிப்பு. முடப்பட்ட நிறுவனங்களில் கூட அக்கவுண்டிங் பணியாளர்களுக்கு வேலை உண்டு. ஆனால் தற்போதுள்ள சூழலில் கணக்குப்பிள்ளை போல, அனுபவ ரீதியில் அக்கவுண்டிங் பிரிவுகளில் நீண்ட காலம் பணியாற்ற முடியாது. பி.காம் மட்டும் முடித்தால் +2 முடித்ததற்கு சமமான மதிப்பு தான் கிடைக்கும். எனவே ஃபினான்ஸ் மேனேஜ்மெண்ட் எனும் நிதியியல் நிர்வாகத்தில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.காம் படிக்கும் போதே, ஐ.சி.டபிள்யூ அல்லது சி.ஏ போன்ற படிப்புகளில் ஒன்றைப் படிக்க முடியும். இந்த படிப்புகளுடன், அக்கவுண்டிங்கில் பட்ட மேற்படிப்பை முடித்தால், நீங்கள் தான் நிறுவனத்தில் ராஜா.

6. மீடியா
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சிறிய நிகழ்வை கூட பெரிய அளவில் உலகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமை மிக்க துறை. முன்பு போலல்லாமல் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை, இணையம் என பல்வேறு முகம்களை ஊடகம் (மீடியா) கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் எழுதும் திறன், கிரகிக்கும் ஆற்றல் இருந்தால் போதும், படிப்பு முக்கியமல்ல என்ற நிலை மாறி மற்ற துறைகளைப் போல கடும் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஆர்வம், சமயோஜிதம் இவற்றோடு தகுந்த படிப்பும் முக்கியம். பி.எஸ்.சி விசுவல்கம்யூனிகேஷன் இப்போது மிகப் பிரபலம். இதழிய்லில் முதுகலைப் படிப்பு ஊடகத்துறையில் உங்கள் நிலையை உயர்த்தும். தனியார் மையங்கள் டிப்ளமா மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகளை அளிக்கின்றன.

7. அனிமேஷன்
தொலைக்காட்சி, இணையம், சினிமா, மொபைல் என நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் அணைத்து இடங்களிலும் அனிமேஷன் நம்மை பிரம்மிக்கச் செய்கிறது. சாதாரண விஷயங்களை பிரம்மாண்டமாக காண்பிக்க அனிமேஷன் கட்டாயம் தேவை என்பதால் மிக அதிகளவில் திற்மையான பணியாளர்கள் தேவை. 2டி, 3டி அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ், வீடியோ ஆடியோ எடிட்டிங் என பல்வேறு பிரிவுகளில் மல்டிமீடியா தொடர்பான படிப்புகளைப் பயிற்றுவிக்க ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கீகரிக்கபட்ட அல்லது நீண்ட காலமாக சேவை செய்யும் நிறுவனங்களில் திறன்பட பயிற்சி பெற்றால், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

8. ஃபேஷன்
இன்றைய் இளைஞர்களை கட்டிப்போடும் மந்திரச்சொல் ஃபேஷன். நாம் சாதாரணமாக நிணைத்துக்கொண்டிருக்கும் இத்துறை, வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யயுள்ளது. தற்போதுள்ள சூழலில் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் 3 கோடி ஃபேஷன் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை நிஃப்ட் நீண்ட காலமாக கற்றுத் தந்து வருகிறது. தற்போது மேலும் சில நிறுவனங்கள் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை கற்று தருகின்றன. பன்னாட்டு துணி நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், பலர் தனியாக ஃபேஷன் ஸ்டுடியோக்களை அமைத்து கோடி கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

9. சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்
உலகம் முழுவதும் சத்தமில்லாமல் அசுர வளர்ச்சி பெற்று வரும் துறை. அடுத்த ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் போது சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் 5 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த படிப்பை முடித்தவர்கள் குறைவு என்பதால், தற்போது நட்சத்திர ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்களில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சரியான கல்லூரிகளில் இத்துறை தொடர்பான பட்டப்படிப்பு முடித்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.

10. ஏவியேஷன் மற்றும் மெர்ச்சண்ட் நேவி
பைலட் ஆவது தான் லட்சியம் என சிறு வயதில் கூறுபவர்கள் கூட வளர்ந்த பின் வேறு துறைக்கு மாறி விடுகிறார்கள், விடாப்பிடியாக பைலட் ஆனவர்கள் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க வாய்ப்பளிக்கும் இந்த துறையில் ஈடுபட கடுமையான சில கட்டுப்பாடுகளுக்கு உடன்பட வேண்டும். +2 முடித்ததும், சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் மூலம் பயிற்சி பெற வேண்டும், பின்னர் பெங்களூர், டெல்லியில் உள்ள ஏவியேஷன் மையங்களில் உடற்தகுதிக்கான சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின் பல பரிசோதனைகளுக்கு பின் லைசென்ஸ் வழ்ங்கப்படும்.
விமான போக்குவரத்து பெருகி விட்டாலும் கப்பல் போக்குவரத்துக்கு தனியிடமுண்டு. மிக் அதிக அள்வில் சம்பளத்தையும், உலகம் சுற்றிவர வாய்ப்பை வழங்கும் மெர்ச்சண்ட் நேவி படிப்பை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மத்திய் அரசு நிறுவனமான நேஷனல் மாரிடைம் அகாடமியில் சேர்ந்து நாடிகல் சயின்ஸ் படிப்பை முடிக்கலாம். நாட்டின் பல பகுதிகளில் இதற்கான மத்திய அரசு மையங்கள் உள்ளன. தனியார் மையங்களும் உள்ளன.

குறிப்பு:
இந்த கட்டுரை மேலும் விபரங்களுடன், எங்கு வேலை கிடைக்கும்?, எங்கு படிக்கலாம்? என்ற விபரம் முதுகுளத்தூர் சி.எஸ்.சி யில் மாணவர் வழிகாட்டி (Students Career Guide) என்ற பெயரில் புத்தகமாக +2 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வழிகாட்ட படுகிற்து.

kader.cworld@gmail.com