Sunday, May 17, 2009

ரித்தீஷ் வெற்றி: தி.மு.க.வினர் கொண்டாட்டம்

ரித்தீஷ் வெற்றி: தி.மு.க.வினர் கொண்டாட்டம்

First Published : 17 May 2009 09:29:01 AM IST
Last Updated :


முதுகுளத்தூர், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரித்தீஷ் வெற்றி பெற்றதையொட்டி, முதுகுளத்தூர். கடலாடி, கமுதி, சாயல்குடி ஒன்றிய தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

ஒன்றியச் செயலர்கள் காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, கே.முனியசாமி, த.ராஜசேகர், வி.வி.சுப்பிரமணியன், நகர செயலர்கள் எம்.எம்.அம்பலம், திவான், தங்கமாணிக்கம், சோலை (எ) முனியசாமி, மாவட்ட ஊராட்சிகள் கவுன்சிலர் வே.சோலை, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஈஸ்வரி கருப்பையா, சாயல்குடி பேரூராட்சித் தலைவர் லிங்கம்மாள் பால்க்காளை, முதுகுளத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் ஜெ.கே.ரித்தீஷ் வெற்றி

ராமநாதபுரத்தில் ஜெ.கே.ரித்தீஷ் வெற்றி

First Published : 17 May 2009 09:15:46 AM IST
Last Updated :

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கே. ரித்திஷ், அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை விட 69,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக தவிர பாரதிய ஜனதா கட்சியிந் வேட்பாளர் எஸ். திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் அக்கட்சி மாவட்டச் செயலர் சிங்கை. ஜின்னா மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.

இதில், சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. வ. சத்தியமூர்த்தி-அதிமுக (225030) 2. ஜெ.கே. ரித்திஷ்-திமுக (294945), எஸ். திருநாவுக்கரசர்- பா.ஜ.க (1,28,322), பிரிசில்லா பாண்டியன்- பகுஜன் சமாஜ் (39,086),எஸ். சலிமுல்லாகான்- மனிதநேய மக்கள் கட்சி (21,439), எஸ். சிங்கை ஜின்னா- தேமுதிக (49,571), ஆர். முகம்மது ஆபித்அலி- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (1,496) இவர்களைத் தவிர சுயேச்சை வேட்பாளர்களான கே. காளிமுத்து (1,769), எஸ். சண்முகையா பாண்டியன் (1,119), எஸ். சுவார்ட்ஸ் துரை (961), கே. செல்லத்துரை (1,186), பாலமுருகன் (1,244), பி. பாஸ்கரன் (2,330), ஜி. முருகேந்திரன் (3,471), எம்.ஐ. ஜஹாங்கீர் (5,870).

15 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் 7,77,839. தள்ளுபடி செய்யப்பட்ட வாக்குகள் 496, செல்லாத வாக்குகள்-3.

வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, திமுக வேட்பாளர் ஜெ.கே. ரித்திஷ் முன்னிலையில் இருந்தார்.

இதில் அதிமுக 2-வது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி. 3-வது இடத்தையும், தேமுதிக 4-வது இடத்தையும் பெற்றன.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்கள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்கள்

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:

1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118), 1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513), 1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367), 1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276), 1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482), 1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916), 1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778), 1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601), 1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889), 1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945), 1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886), 1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607), 2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337), 2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தில் தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

ராமநாதபுரத்தில் தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்


ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்களை, மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி சனிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:

அறந்தாங்கி: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).

திருச்சுழி: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).

பரமக்குடி: வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).

திருவாடானை: வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).

ராமநாதபுரம்: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), எஸ். சலிமுல்லாகான், திமுக (6,712) சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).

முதுகுளத்தூர்: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).

தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:

வ. சத்தியமூர்த்தி, அதிமுக (2,24,820), ஜே.கே. ரித்தீஷ், திமுக (2,93,260), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (1,27,994), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (38,955), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (21,430), சிங்கை. ஜின்னா, தேமுதிக (49,557).

Thursday, May 14, 2009

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

சென்னை, மே 14- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், 4 மாணவர்கள் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

2 மாணவர்கள் 1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள்:

தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்

கரூர் சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன்

ஈரோடு பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் லிங்கேஷ்

ஊத்தங்கரை எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சிஞ்சு

1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள்:

ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகவனேஷ்

1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள்:

திருநெல்வேலி வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெஸிமா சுலைகா,

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி,

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன்,

ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீரா ரஷியா

வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்...

வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்...

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 84.4 சதவீதம் பேர் தேர்வாகி இருந்தனர். ஆனால் தற்போது இது லேசான சரிவை சந்தித்துள்ளது. இம்முறை 83 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் இம்முறையும் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 85.5 சதவீதமும், மாணவர்களில் 80.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

200க்கு 200 பெற்ற மாணவர்கள் :

இயற்பியல் - 245 மாணவர்கள் .
வேதியியல் - 467.
தாவரவியல் - 6
விலங்கியல் - 1.
உயிரியல் - 218
கணிதம் - 4060
கம்ப்யூட்டர் அறிவியல் - 276
வணிகவியல் - 285
வணிக கணிதம் - 198
கணக்கியல் - 621.

மொத்தம் 60 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர்: 3,83,762 பேர்.

மாணவர்களில் 80.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 85.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

Tuesday, May 12, 2009

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு

ராமநாதபுரம்,மே.12-

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்

பாராளுமன்ற தேர்தலை யொட்டி வேட்பாளர்களின் பிரசார பணிகளை கண்கா ணிக்க ஒவ்வொரு வேட்பாள ருடன் ஒரு துணை தாசில்தார், 2 போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராபர் உடன் செல்ல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராமநாத புரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத் தியமூர்த்தி நேற்று முன் தினம் ராமநாதபுரம் சக்கரக் கோட்டை பள்ளிவாசல் பகு தியில் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார்.
அப்போது தேர்தல் பிரசார பணிகளை ஒரு வீடியோ கிராபர் படம் எடுத்ததை கண்டு வேட்பாளர் சத்திய மூர்த்தி அவரை விசாரித்தார். அப்போது வீடியோ கிராபர் செல்வக்குமார், தான் ஒரு தனியார் வீடியோ கிராபர் என்று கூறியதை தொடர்ந்து வேட்பாளர் சத்திய மூர்த்தி தனது அனுமதி இல்லாமல் ஏன் வீடியோ எடுக்கிறாய்? என்று கேட்டு கேமிராவை பறித்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தேர்தல் அலுவலரான திருவாடானை துணை தாசில்தார் கதிரேசன், வேட் பாளரிடம் செல்வக் குமாரை தேர்தல் பணியில் ஈடுபட் டுள்ள வீடியோ கிராபர் என்று கூறினார். இதையடுத்து வேட்பாளர் சத்திய மூர்த்தி கேசட்டை எடுத்துக்கொண்டு வீடியோ கேமிராவை மட்டும் கொடுத்தாராம்.

இதுகுறித்து துணை தாசில் தார் கதிசேரன் அளித்த புகா ரின் பேரில் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் சத்திய மூர்த்தி மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, May 1, 2009

குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

http://www.muslimleaguetn.com/news.asp?id=830

குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் அமைந்துள்ள ஜாமிஆ பள்ளிவாசல் அருகில் தொழிலதிபர்கள் பி.எஸ். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் ஆகியோர் நிதி உதவியால் கட்டி முடிக்கப்பட்ட குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா 24-4-09 அன்று இஸ்லாமிக் சென்டர் மானேஜிங் டிரஸ்டி கே.வி. அப்துல் கரீம் தலைமையில் நடை பெற்றது.
தொழிலதிபர்கள் திரு நெல்வேலி டி.இ.,எஸ். பத்ஹுரப்பானி அதிராம் பட்டினம் அப்துல் ரஜாக், காயல்பட்டினம் எல்.கே. எஸ். செய்யது அஹமது, தென்காசி வி.டி.எஸ். ரஹ் மான் பாட்சா, எஸ்.எம். கமால் முகைதீன், பெரியகுளம் மேத்தா ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

பயணிகள் விடுதியை கீழக்கரை அல்லாமா அப்ச லுல் உலமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் திறந்து வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காஸிமி, காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு அப்துல் ரஹ்மான், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி காஸிம் ஆகியோர் பேசி னார்கள்.

விழாவில் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் அ. அப்துல் வஹாப், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர் உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை

அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை
தேசியலீக் தலைவர் பசீர் அகமது பேட்டி


மதுரை, மே.1-

அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை என்று தேசியலீக் தலைவர் பசீர் அகமது தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் உண்ணாவிரதம்

தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது சாகிப், மதுரையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் பாளையங்கோட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் போட்டியிட்டோம். அதேபோல இந்த பாராளுமன்ற தேர்தலிலும் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. மேலும் அவர்களது கூட்டணியில் முஸ்லிம்களுக்கு முறையாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் சிறுபான்மை மக்களின் எந்த கோரிக்கையும் அ.தி.மு.க.வினரின் தேர்தல் அறிக்கையில் இல்லை.

இதனால் எங்களது தேசிய லீக் உள்பட 9 முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர்களும், சிறுபான்மை மக்களும் அ.தி.மு.க.கூட்டணியை புறக்கணிக்க வேண்டும். நாங்கள் 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறோம். ஐ.நா.சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்பட உலக நாடுகள் வற்புறுத்தியும் கட்டுப்படாத இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழுணர்வோடு தள்ளாத வயதிலும் தமிழ் மக்களுக்காக முதல்-அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவுடன் போர் நிறுத்தம் அறிவித்தார்.

மதசார்பற்ற அரசு

கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் குறித்து பேசாத ஜெயலலிதா தேர்தலை முன்னிறுத்தி ஓட்டுக்காக தனி ஈழம் அமைப்பேன் என்று பொய்யை சொல்லி ஓட்டு கேட்கிறார். தமிழக மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கை தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கெடுத்த ராமதாஸ் தற்போது அவர்களை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான அத்வானி, நாங்கள் ஆட்சி அமைக்க அ.தி.மு.க.ஆதரவு தரும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவும் அவரது கருத்தை மறுக்கவில்லை. தமிழக மக்களின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என்று பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூறுகிறது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எந்த கூட்டணிக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். மதுரையில் மு.க.அழகிரி வெற்றி பெறுவதன் மூலம் தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகும். தமிழக முதல்-அமைச்சரின் வலது கரமான மு.க.அழகிரி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் ஜவகர் அலி, துணைத்தலைவர் நசுருதீன், தொண்டரணியின் மாநில செயலாளர் சர்புதீன் உள்பட பலர் இருந்தனர்.