Tuesday, September 9, 2008

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

கமுதி, செப். 8: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு, கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ். சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிவலிங்கம் வரவேற்றார்.

2007-2008-ம் ஆண்டில், கமுதி வட்டார அளவில் பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் சாதனை புரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான எம். ஜெரினா பேகம் (கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி), சுந்தரவடிவேல் (நீராவி தேவாங்கர் மேனிலைப் பள்ளி), அனிதா (கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், வட்டார நிர்வாகிகள் எஸ். நாகேந்திரன், ஏ.கே. சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், ஞானசங்கர், பொன்ராஜ், வள்ளியம்மாள், இளமுருகன், மாரிப்பாண்டி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வட்டாரச் செயலர் எஸ். முத்து நன்றி கூறினார்.