Saturday, July 26, 2008

வாலிநோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வாலிநோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வாலி நோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயல்குடி பகுதியில் வாலிநோக்கம் அருகே உள்ளது கீழமுந்தல் கிராமம். இந்த கிராமத்திலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் ரிசர்வி பாரஸ்ட் ஏரியா இருக்கிறது. இப்பகுதி கடற்கரையை ஒட்டிய பகுதியாகும்.

கடற்கரையும்,மரங்கள் நிறைந்த வனப்பகுதியும் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இவருக்கு 2 ஏக்கர் நிலம் ரிசர்வ் பாரஸ்ட் அதிகாரிகளாலேயே பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அந்தப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு வெளியாட்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டுவருகிறது. ஒரு தனி நபருக்கு அரசின் நிலம் பட்டா போடப்பட்டு கேளிக்கை விடுதி கட்டப்பட்டு அதிகாரிகளின் ஆதரவோடு ஒதுக்கப்பட்ட பகுதியில் மிட் நைட் ஆட்டம்போடுவது ஏன் ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தகுந்த பதில் தர மாவட்ட கலெக்டரும் எஸ்.பி.யும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்தூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி களுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,பரமக்குடி(தனி),திருவாடானை,முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்,வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகள் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 18 வயது ஞீர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இதற்குகால அவகாசம் 8.8.08 முடிய வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Thursday, July 24, 2008

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு


முதுகுளத்தூர், ஜுலை.25-

மேலச்செல்வனூர் பகு தியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விட்டால் ஆகஸ்டு 15-ந் தேதி வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்து வோம் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ள னர்.

சாலை வசதி

கடலாடி ïனியன் மேலச் செல்வனூர் ஊராட்சி தலை வர் கோபால கிருஷ்ணன் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலாடி ஊராட்சி ஒன்றி யம் மேலச்செல்வனூர் ஊராட்சி யில் ஆலங்குளம், எம்.எஸ். புதுக்குடியிருப்பு, தேரங்குளம், கடையக்குளம், கண்டங்கனி, பாப்பாகுளம், பல்லனேந்தல், எஸ்.பாடுவனேந்தல் உள்பட 9 கிராமங்கள் உள்ளன.

மேலச்செல்வனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வரு கின்றனர். ஆலங்குளம், எம். எஸ்.புதுக்குடியிருப்பு சாலை மிக மோசமாக உள்ளது. இத னால் மாணவ-மாணவிக ளும், பொது மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கறுப்பு கொடி

இதுகுறித்து அமைச்சரிட மும், கலெக்டரிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே சாலையை புதுப்பித்து பஸ் இயக்க வேண்டும். பொது மக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி இந்த ஊராட்சியை சேர்ந்த அனைத்து வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றி போராட் டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

முதுகுளத்தூர் பகுதியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதால் மயில் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும், மயில்கள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் இடங்களின் அருகே நடமாடி வருகின்றன.

வயல்வெளி, கண்மாய், குளம் இவற்றில் உலாவும் மயில்கள் தோகையை விரித்து ஆடுவதால் அதன் அழகை இப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் அரக்க குணம் கொண்ட சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவது வேதனைக்குரியது. இதனை வனத்துறையினர் கண்டு கொள்வது இல்லை.


பறவைகள், விலங்கினங்களைக் காக்க தேசிய அளவில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பினர் இதுபோன்ற செயலகளை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0725-peacocks-also-join-in-rare-bird-list.html

முதுகுளத்தூர் அருகே கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் அருகே கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் அருகே பறவைகள் சரணாலயப் பகுதியாக விளங்கி வரும் சித்திரங்குடி உலக நாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதில் கிராம தலைவர் ராஜகோபால், ஊராட்சி தலைவர் கருப்பு துரை, கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர், முதுகுளத்தூர் தாசில்தார் ராமு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது.

தாசில்தார்க்கு பதவி உயர்வு

தாசில்தார்க்கு பதவி உயர்வு

முதுகுளத்தூர் நலிந்தோர் திட்ட தாசில்தார் சுதர்சன் புதுக்கோட்டை மாவட்ட இலவச கலர் டிவி வழங்கும் திட்ட துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பதவி உயர்வு பெற்றுள்ள சுதர்சனுக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது.

முதுகுளத்தூரில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூரில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூர் போலீஸ் நண்பர்கள் குழு, அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ரத்ததானமுகாமை நடத்தின. 25 பேர் ரத்ததானம் செய்தனர்.

எஸ்.ஐ. லோகநாதன், டாக்டர் பாலச்சந்திரன், போலீஸ் நண்பர்கள் குழு நிர்வாகி கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் இக்பால், வின்செண்ட் ரோவர், லயன்ஸ் சங்க செயலாளர் சூசைதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் சிராஜுல் உம்மத் இல்லத் திருமணம்



அஸ்ஸலாமு அலைக்கும்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம்
சிராஜுல் உம்மத்
அல்ஹாஜ் மௌலவி எஸ். பஷீர் சேட் ஆலிம் மன்பஈ

அவர்களது சகோதரர் குல்பர்கா டெக்கான் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக இயக்குநர்
ஜனாப் எஸ். அஷ்ரப் அலி
அவர்களது புதல்வி

ஏ. உம்மு ஹபிபா மணமகளுக்கும்

குல்பர்கா எம்.ஏ. ஏ. முஹம்மது அஷ்ரப் அலி பைஜி அவர்கள் மகன்
எம். முஹம்மது சிபஹத்துல்லாஹ்
மணமகனுக்கும்

இன்ஷா அல்லாஹ் திருமணம்

ஹிஜிரி 1429 ஷஃபான் மாதம் பிறை 11 ( 13 ஆகஸ்ட் 2008 ) புதன்கிழமை காலை
11 மணிக்கு
ஈசநத்தம் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.

இம்மணவிழாவில் ஜமா அத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்

Wednesday, July 23, 2008

துபாய் நூலகமும், முதுகுளத்தூர் நூலகமும்

துபாய் நூலகமும், முதுகுளத்தூர் நூலகமும்


துபாயில் ஓய்வு நேரங்களில் பொது நூலகத்துக்குச் செல்வது வழக்கம். இன்று துபாயின் ரசிதியா பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குச் சென்ற போது நூலக அலுவலர்கள் மராமத்துப் பணிகள் நடைபெறுவதால் நூலகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது. மேலும் அதற்காக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்தருள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது எங்களது ஊரான முதுகுளத்தூர் நூலகம் தான். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் ஊரில் இருந்த போது நூலகம் எப்பொழுது திறக்கப்படும் எனபது இறைவனுக்கே வெளிச்சம். சில நேரங்களில் நாங்களே சாவியை திறந்த அனுபவமும் உண்டு.

வாசகர்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாத நூலகர்.

தற்பொழுது எப்படியோ ? எனினும் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாதது பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட நிர்வாகம் முதுகுளத்தூர் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, July 20, 2008

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.

தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது


ராமநாதபுரம், ஜுலை.20-

ராமநாதபுரம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு ரூ.2 லட்சத்தை நன்கொடையாளர்கள் கலெக்டரிடம் வழங்கி னர்.

சங்க கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கூட்டம் கலெக்டர் கிர் லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை தலை வர் மகளிர் திட்ட அலுவலர் டிïர்சியஸ், அமைப்பாளர் மாவட்ட பிற்பட்ட நல அலு வலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவு ரவ செயலாளர் முகமது ஜலீல், இணை செயலாளர்கள் டாக் டர் பாத்திமா சின்னதுரை, தொழில் அதிபர் குர்ரத் ஜமீலா, உறுப்பினர்கள் கீழக் கரை மரியம் ஹபீப், ராமநா தபுரம் டாகடர் சபீக்கா சாதிக், கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூது ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் கிர் லோஷ்குமார் பேசியதாவது:- சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு உதவும் பொருட்டு மாவட் டங்களில் தனி சங்கம் ஏற்ப டுத்த அரசு உத்தரவிட்டுள் ளது. நன்கொடை யாளர் கள் மூலம் பெறப்படும் நன் கொடையால் நிதி ஆதாரத் தினை இந்த சங்கம் ஏற்படுத் தும். சங்கத்திற்காக திரட்டப் படும் நிதி ஆதாரத்திற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் விதவை களுக்கு மாதாந்திர உதவி தொகை அளித்தல், கைவினை பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல், சிறுதொழில் தொடங்க உதவி, மருத்துவ உதவிகள் போன்றவை மேற் கொள்ளப்படும்.

ரூ.2 லட்சம்

18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண்கள் இந்த சங் கத்தில் உறுப்பினராக சேர லாம். பேட்ரன் உறுப்பினர் களுக்கு ரூ.5 ஆயிரம், ஆயுட் கால உறுப்பினர்களுக்கு ரூ.ஆயிரம், சாதாரண உறுப் பினர் களுக்கு ரூ.500 என்ற அளவில் கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் பேட்ரன் உறுப்பினர்களாகவும், 4 பேர் ஆயுட்கால உறுப்பினர் களா கவும் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசி னார். கூட்டத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஷாஜ கான், கீழக்கரை தெற்குதெரு ஜமாத் லாகீதுகான், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவூது ஆகி யோர் கலந்து கொண்டு பேசி னர். சீதக்காதி அறக்கட்டளை சார்பில் தொழில் அதிபர் குர் ரத் ஜமீலா, சேது என்ஜினீய ரிங் கல்லூரி தாளாளர் முக மது ஜலீல் ஆகியோர் முஸ் லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு தலா ரூ.1 லட்சத்துக் கான காசோலையை கலெக் டர் கிர்லோஷ்குமாரிடம் வழங்கினர்.

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா
பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக் தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செல்லியம்மன் கோவில்

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குவது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலின் 32வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங் கியது. இதைத்தொடர்ந்து 300க்கும் அதிக மான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த னர்.

10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி அம் மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

பூக்குழி

விழாவின் முக்கிய நாளான நேற்று பக் தர்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து பூ தட்டுடன் ஊர்வலமாக புறப்பட்டு செல்லி யம்மன் கோவிலை வந்தடைந்தனர். ஏராள மான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தது டன் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டி ருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன் பின்னர் முளைப்பாரியை ஆண், பெண் பக்தர்கள் தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர். விழாவையொட்டி இன்ஸ்பெக்டர் பால முரு கன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Thursday, July 17, 2008

தமிழக கிரிக்கெட் அணி தேர்வுக்கு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் பரிந்துரை

தமிழக கிரிக்கெட் அணி தேர்வுக்கு முதுகுளத்தூர் மாணவர் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்ட 17 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ஒன் மாணவர் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக அணிக்காக திருச்சியில் நடைபெறும் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர் கவாஸ்கரை தலையாசிரியர் ஏ. முஹம்மது சுலைமான், உதவித்தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி, ஆசிரியர்கள் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

மேலும் இம்மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்

முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்



முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துரை ஊழியர் சங்க அமைப்புக்கூட்டம் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. கிராமபபுரத்தில் வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளர்க்கு குறைந்த பட்ச கூலி ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும், அனைத்து துப்புரவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்ட பொறுப்பாளராக அய்யாத்துரை, தாலுகா செயலாளராக சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவராக கோவிந்தசாமி, விவசாய சங்க தாலுகா செயலாளராக பி.கே. முருகேசன், தலைவராக செபஸ்தியான், செயலாளராக செந்தில், பொருளாளராக பாண்டி, துணைத்தலைவராக பாண்டியன், துணைச் செயலாளராக சி.சிறுவன் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.

முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.


முதுகுளத்தூரில் உள்ள பெரியார் நகர், கந்தசாமிபுரம் இப்பகுதிகளில் உள்ள பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்திருந்தன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பாலம் கட்ட நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.

அதேபோல் முதுகுளத்தூரில் உள்ள கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, July 16, 2008

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.
உதவித் தொகை பெற விரும்புவோர்,

தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


முதுகுளத்தூர், ஜுலை.16-

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரிசி கடத்தல்

கடலாடி அருகே உள்ள பொதிகுளத்தில், நள்ளிரவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த ஒரு கும்பல் 240 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை பின் னால் நின்ற லாரியில் கடத்தி கொண்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டு போய் பார்த்தனர்.

இது பற்றி கிராம மக்கள் கேட்டதற்கு அரிசி கடத்தல் கும்பல் கூறிய பதில் அவர் களுக்கு சந்தேகத்தை ஏற்படுத் தியது. உடனே அவர்கள் ராம நாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேல னுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தர வின் பேரில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு நந்த குமார் மேற்பார்வையில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சிவஞா னமூர்த்தி, ஏட்டுகள் சக்திவேல் முருகன், முத்தையா, முத்துக் குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று அந்த கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த வேல்ச்சாமி மகன் ராஜா (வயது 28), குமாரசாமி மகன் லோகநாதன்(28), லாரி டிரைவர் சுரேஷ், கடலாடி அருகே உள்ள நரசிங்க கூட் டம் கிராமத்தை சேர்ந்த கோட் டைச்சாமி(52), அருப்புக் கோட்டை சோமசுந்தரம் மகன் பிரபாகரன்(46) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேஷன் அரிசியை பொள்ளாச்சிக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கட லாடி போலீசார் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு விருதுநகர் மண்டல அத்தியா வசிய உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் விரைந்து வந்து அரி சியை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் ஆகியவற்றை கடலாடியில் உள்ள சிவில் சப்ளை கிடங் கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து கைதான 5 பேரையும் மேல் விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்து சென்றார்.

Tuesday, July 8, 2008

துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகள் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் அவலம்

துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகள் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் அவலம்


முதுகுளத்தூர், ஜுலை.8-

போதிய துப்புரவு பணி யாளர்கள் இல்லாததால் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின் றனர்.

அரசு ஆஸ்பத்திரி

முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தின மும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலங்களில் இங்கு பணிபுரிந்த டாக்டர்கள் பணிகளை சிறப் பாக மேற்கொண்டதால் ஏழை மக்கள் மத்தியில் இந்த மருத்துவமனை நன்மதிப்பை பெற்றது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட் டது. 6 டாக்டர்கள் பணி புரிய வேண்டிய இந்த ஆஸ் பத்திரியில் தற்போது 3 டாக் டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலை யத்தை போல் காலை 8.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு 10 மணிக்கு தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். இத னால் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வரு கின்றனர்.

துர்நாற்றம்

மேலும் இங்கு துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை யாக உள்ளதால் நோயாளி கள் தங்கியுள்ள வார்டுகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு தங்கியுள்ள நோயாளிகள் இரவு நேரங்க ளில் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலையில் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு வரும் அவல நிலை தொடர் கிறது.

டாக்டர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்ï னிஸ்டு தாலுகா செயலாளர் சண்முகவேல் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் அதே நிலை நீடிப் பதாக கம்ïனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அவதி

நோயாளிகளின் நம்பிக் கையை பெற்ற முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தற் போது ஆரம்ப சுகாதார நிலைய அளவிற்கு தள்ளப்பட் டுள்ளதாக நோயாளிகள் தெரி விக்கின்றனர். மேலும் அங்கு தங்கியுள்ள ஒரு சில நோயா ளிகளும் போதிய மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டு வரு கின்றனர்.

Friday, July 4, 2008

முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.

முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.

நமது நகரில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா 28-06-2008 அன்று மாலை 6 மணியளவில் தேரிருவேலி முக்குரோடு வேன் ஸ்டாண்ட் திடலில் நடைபெற உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் M.வாவா ராவுத்தர் கூறுகையில்....நமது நகர மக்கள் அவசர காலங்களில் மற்றும் பிரசவ நேரங்களில் வாகனங்கள் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு நேரங்களில் காலதாமதாகவே ஆஸ்பத்திக்கு செல்லும் நிலையுள்ளது. இதனால் சொல்லமுடியாத பலதுயங்கரளுக்கு ஆளாகின்றனர்.அதுபோல் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பிரிஜர் பாக்ஸ் அவசியமானதகும். இவைகளுக்கெல்லாம் நாம் பரமக்குடி போன்ற பக்கத்து ஊர்களையே நம்பியுள்ளோம்.

எனவே தமுமுகவின் சார்பில் வசூலித்து குறைந்த கட்டணத்தில் அனைவரும் பலன் பெரும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் பாக்ஸ் அர்ப்பணிக்க உள்ளோம்.28-06-08 அன்று மாலை 6 மணியளவில் மூன்று MLAக்களின் வாழ்த்துரையுடன்,மூன்று ஜமாத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் வக்பு வாரியத்தலைவர்,எங்கள் இயக்கச் செயலாளர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கிறார்.

ஏழைகளுக்கு மிகவும் சலுகை கட்டணத்திலும், அவசர விபத்து மற்றும் முக்கிய நேரங்களில் சேவை செய்யவும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்று தகவலை கூறினார்.

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.

இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.