Saturday, August 9, 2008

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர், ஆக.9-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட முத்து விசயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. அவரது மகன் மார்ட்டின் (வயது 25). திருமணமாகாத இவர் சண்டிகாரில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் காரராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தனது தாயாருக்கு உடல்நிலைசரி இல்லை என்று மேல் அதிகாரியிடம் விடுமுறைக்கான கடிதம் கொடுத்து ஊருக்கு செல்வதாக கூறினார்.

நேற்று சண்டிகாரில் இருந்து அந்தோணிக்கு ஒரு தந்தி வந்தது. அதில் உங்கள் மகனை உடனே பணிக்கு அனுப்புங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது தான் மார்ட்டின் சண்டிகாரில் இல்லாத விசயம் அந்தோணிக்கு தெரியவந்தது.

ஆனால் மார்ட்டின் இதுநாள்வரை ஊருக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி கீழத்தூவல் போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில், மாயமான தனது மகன் மார்ட்டினை கண்டு பிடித்து தரும்படி கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டின் என்ன ஆனார்ப எங்கு சென்றார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி
அந்தந்த ïனியன் அலுவலகங்களில் நடக்கிறது


ராமநாதபுரம்,ஆக.9-

சுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி அந் தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வருகிறது.

வங்கி கடன்

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள சுய உதவி குழுக்க ளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கவும், பயிற் சிகள் வழங்கவும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்தி கொடுக்க வும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட கண்காட்சி கள் நடத்தவும் பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமநாத புரம் மாவட்டத் தில் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்க குழுக் களை தரம் பிரிக்கும் பணி அந்தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வரு கிறது.

ïனியன் வாரியாக

வருகிற 12-ந்தேதி மண்டபத் திலும், 13-ந்தேதி கடலாடியி லும், 14-ந்தேதி நயினார் கோவிலும், 20-ந்தேதி முது கு ளத்தூரிலும், 21-ந்தேதி பரமக் குடியிலும், 22-ந்தேதி திருப்புல் லாணியிலும், 26-ந்தேதி ஆர். எஸ்.மங்கலத்திலும், 27-ந் தேதி போகலூரிலும் நடை பெறு கிறது. இதுவரையிலும் தரம் பிரிக்கப்படாத அனைத்து சுய உதவி குழுக்களும் சம்பந்தப் பட்ட நாளில் அந்தந்த ïனி யன் அலுவலகங்களில் நடை பெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித் தார்.

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் ஆக 9.

தமிழக அரசு 01.07.08 முதல் ஒரு உருளை(சிலிண்டர்)எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விற்பனை விலையில் ஒரு உருளைக்கு ரூ.30/_மானியமாக வழங்க அரசானைண பிரப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 08ம் மாதத்தில் ஒரு உருளை பெறும் பெறும் பயனாளிகளுக்கு ரூ.8,57,340/_மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 08ம் மாதத்திற்கும் ஒரு உருளை பெறும் பயனாளிகள் ரூ.30/_மானியம் பெற்றுக்கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் ஆக 9.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2008 மாதத்திற்க்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.8.08 அன்று

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக்கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் தெரிவிக்கிறார்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி விழாவில் இலவச மிதிவண்டி வழங்கல்

321 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கினார்

ராமநாதபுரம் ஆக 9.,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலை வகுப்பு பயிலும் 321 மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகளை குடிசை மாற்று மற்றும் இடவசதிக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனஅ வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அமைச்சர் பேசும்போது

தெரிவித்ததாவது: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் இலவச பேருந்து அனுமதி அட்டை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.தற்போது மிதி வண்டிகள் இலவசமாக மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக மாணவர்களின் நலன் கருதி அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னேற்றத்திட்டங்களுள் ஒன்றாக இத்திட்டம் அமைந்துள்ளது.

மாணவர்களை மென்மேலும் ஊக்குவிக்க கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1000மாணவர்களுக்கு மடி கணினிகளை அரசு வழங்கியுள்ளது.மேலும் எல்காட் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் கணினி கருவிகள் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு அறிவித்துள்ளது என்றார்.

விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல் முன்னிலையுரையாற்றினார்.அபிராமம் பேரூராட்சி தலைவர் கணேசன்,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.எம்.முகமது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்.