Wednesday, August 12, 2009

நீங்களும் போலீஸ் ஆகலாம்....!

நீங்களும் போலீஸ் ஆகலாம்....!



போலீஸ்'என்ற சொல் கிரேக்கச் சொல்லா கிய பொலிட்டியா (Politeia) மற்றும் இத்தாலியச் சொல்லாகிய பொலிட்டா (Politia) என்பதிலிருந்து தோன்றியது.

"பொலிட்டா என்றால் ""முறைப்படுத்தும் அமைப்பு'' பொலிஸ் (Polis) என்னும் சொல்லுக்கு நகரம் (City) என்றும் பொருள் உண்டு).

அதாவது நகரத்தில் உள்ள மக்களை காப்பவர்கள் என்றும் அர்த்தம்.

1844-இல் முதன்முதலில் போலீஸ் நிலையம் நியூயார்க்கில் நிறுவப்பட்டது.இந்தியாவில் நவீன காவல்துறை அமைப் புக்கு வித்திட்டவர் சர் சார்லஸ் நேப்பியர்.

1861-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல் சட்டமே இந்தியா முழுமைக்கும் ஒரேமாதிரியான சட்ட ஒழுங்கை முறைப் படுத்தும் வலிமையான காவல்துறையை ஏற்படுத்த உதவியது.

மாநில காவல்துறையினரின் முக்கிய பொறுப்புகள்:

1. ரோந்துப்பணி
2. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்டறிதல்
3. சாலைப் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல்
4. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பது
5. மதுபானங்களின் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது
6. இளங்குற்றவாளிகளை கையாளுவது என பல்வேறு பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.

மத்திய அரசு தொடர்பான நிறுவனங்களில் உள்ள பணியாளர்களின் தவறான நடத்தை களைக் கண்டறியவும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்கி முக்கிய மிகப் பெரிய விசாரணைகளை நடத்தவும் மத்திய புலனாய்வுத்துறை (CBI) உள்ளது.

1962-ல் நடைபெற்ற சீனப்படையெடுப்பை அடுத்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP) உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஏற்படுத்தப்பட்டது.

மத்திய ரிசர்வ் காவல்படை (RPF) இந்தியா வின் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்க 1939-இல் உருவாக்கப்பட்டது.

அஸ்ஸாம் துப்பாக்கிப் படை (Assam Rifles) இந்தோ-திபெத்திய எல்லைகள், இந்தோ பர்மா எல்லைபுறங்கள் மற்றும் வடகிழக்கு மாகாணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. இது 164 ஆண்டுகள் பழமையான (கி.பி. 1835) காவல்படை ஆகும்.

தேசிய பாதுகாப்புக் காவல்படை (National Security Guards) என்பது தீவிரவாதிகள், கடத் தல் சம்பவங்கள், சதிகாரர்களை சமாளிப் பது, விமானக் கடத்தல், பணயக் கைதிகளை மீட்பது போன்றவைகளுக்கான உருவாக்கப் பட்ட அமைப்பாகும்.

மத்தியத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) மத் திய அரசுக்குச் சொந்தமான பெரிய தொழிற் சாலைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் பொருட்டு 1969-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

உள்நாட்டு காவலர்படை (Home Guard) தன்னார்வத் தொண்டர்களை மட்டுமே கொண்ட அமைப்பு. இது 1946-இல் உருவாக்கப்பட்டது.



தமிழ்நாடு வரைபடம்

மொத்த மக்கள்தொகை : 7893923








நீங்களும் போலீஸ் ஆகலாம்....!

தமிழகக் காவல்துறை


தமிழகத்தில் 1792-இல் முறையான போலீஸ் அமைப்பை ஆங்கிலேயர் உருவாக்கினர். தமிழக காவல்துறையின் நிர்வாக அமைப்பு இரண்டு பிரிவுகளாக உள்ளது.


அவை 1. ஆட்சி பணித்துறை (The Civil Wing)
2. காவல் பணித்துறை (Professional Wing) ஆகும்.


ஆட்சிப் பணித்துறை (The Civil Wing)ல் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஆட்சிப் பணியாளர் (அதாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொறுப்பில் இயங்குகிறது.


காவல்பணித்துறை (The Professional Wing) காவல்துறையின் நேரடி தொடர்புடைய, காவல்துறை தலைமை இயக்குநர் தலைமை யில் செயல்படுகிறது. இவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.


ஒட்டுமொத்த, தமிழ்நாடு காவல்துறை ஒரு தலைமை இயக்குநர் (DGP) கீழ் இயங்கு கிறது.இவர் தமிழகக் காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப் படுத்தும் மூளையாக இவர் செயல்படுவார்.


தமிழ்நாடு மாநிலம், 12 சரகங்களாகப் (Ranges) பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சரகமும் ஒரு துணைத் தலைவர் (DIG) கீழே இயங்குகிறது.


ஒவ்வொரு சரகமும் காவல்துறை மாவட்டங் களாகப் (Police District) பிரிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காவல்துறை மாவட்டமும் ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP) கீழே செயல்படுகிறது.


காவல்துறை மாவட்டம் உட்கோட்டங் களாகப் (சப்-டிவிஷன்) பிரிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு உட்கோட்டத்தையும் உட் கோட்ட அதிகாரி (சப்-டிவிஷனல் ஆஃபீசர் -எஸ்.டி.ஓ.) கவனித்துக் கொள்கிறார்.


உட்கோட்ட அதிகாரி இந்திய காவல் பணியைச் (IPS) சேர்ந்தவராக இருந்தால், உதவி கண்காணிப்பாளர் (அசிஸ்டெண்ட் சூபரின்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்ஏ.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார்.


தமிழ்நாடு காவல் பணியைச் சேர்ந்தவராக இருந்தால், துணைக் கண்காணிப்பாளர் (டெபுடி சூபரின்டெண்டெண்ட் டி.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார்.


உட்கோட்டம் வட்டங்களாகப் (சர்க்கிள்) பிரிக்கப்பட்டுள்ளது.காவல் நிலையம், புறக்காவல் நிலையம் (அவுட் போஸ்ட்) என்று ஒவ்வொரு வட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


காவல் நிலையம் காவல்துறை (இன்ஸ்பெக் டர் ஆஃப் போலீஸ்), சார்பு-ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்) கீழும், புறக் காவல் நிலையம், தலைமைக் காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) கீழும் செயல்படு கின்றன.


முதல் நிலை (கிரேட்/போலீஸ் கான்ஸ்டபிள்), இரண்டாம் நிலை என்று காவலர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.



தமிழகக் காவல்துறை அமைப்பு


தலைமை முதல் கடைசி பணியாளர் வரை


1. தமிழக அரசு
2. உள்ளாட்சித்துறை
3. தமிழகக் காவல்துறை
4. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)
5. காவல்துறை தலைவர் (IGP)
6. காவல்துறை துணைத்
தலைவர் (DIG)
7. காவல் கண்காணிப்பாளர் (SP)
8. உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP)
9. துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP)
10. காவல் ஆய்வாளர் (Inspector)
11. காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector)
12. உதவி காவல் துணை ஆய்வாளர் (Assistant Sub-Inspector)
13. தலைமைக் காவலர் (Head Constable)
14. காவலர்கள் (Constables)


காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)

தமிழகக் காவல்துறையின் தலைமை நிர்வாகி யாகச் செயல்படுபவர். அரசுக்கு காவல்துறை தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க உதவி புரிவார்.
காவல்துறை தலைவர் (IGP)
இவர் காவல் மண்டலத்தின் தலைவராக இருப்பார். சட்டம், ஒழுங்கு, குற்றங்கள், காவலர் பயிற்சி, நவீனமயமாக்கல், காவலர் நலன் போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்.

காவல்துறை துணைத் தலைவர் (DIG)

காவல் சரகத்தின் தலைவராக செயல்படுகிறார். காவல் சரகங்களின் நிர்வாகப் பொறுப்பையும் புலனாய்வு, இரகசியப் போலீசார் காவலர் பயிற்சி போன்ற பல பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறார்.

காவல்துறை கண்காணிப்பாளர் (SP)

மாவட்டத்தின் அமைதிக்கும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை காவல்துறை கண்காணிப்பாளர் கவனிக்கிறார்.

உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாள ரின் பணிகளில் உதவி செய்வதற்காக உதவி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார்.

துணை காவல் கண்காணிப்பாளர் (DSP)

வட்டங்களின் காவல்துறை நிர்வாகப் பொறுப்பை துணை காவல் கண்காணிப் பாளர்கள் ஏற்று செயல்படுத்துவார்கள்.

காவல் ஆய்வாளர்கள்

காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் செயலை காவல் ஆய்வாளர்கள் செய்கின்றனர்.

காவல் துணை ஆய்வாளர்கள்

ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஆவார்.

உதவி காவல் துணை ஆய்வாளர்

புறக்காவல் நிலையங்களின் தலைமை பொறுப்பை உதவி காவல் துணை ஆய்வாளர் ஏற்றுக் கொள்வார்.

தலைமைக் காவலர்

காவல்நிலையத்தின் உயர் அதிகாரியான, காவல்துணை ஆய்வாளருக்கு உதவிகரமாக இருப்பார்.

காவலர்கள்

தமிழகக் காவல்துறையின் கடைசிப்படி நிலையில் உள்ள பதவி காவலர் பதவியாகும்.




காவல்துறை பதவிகளும், சின்னங்களும்:

1. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP - Director General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோகசின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.

2. கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP - Additional Director General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் -வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.

3. காவல்துறை தலைவர் (IGP - Inspector General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.

4. காவல்துறை துணைத் தலைவர் (DIG - Deputy Inspector of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.

5. காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police)

ஆண்டு பணிக்கு மேல் தேர்வு நிலை தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம் அதனடியில் இரண்டு நட்சத்திரங்கள். அதன் கீழ் IPS அல்லது TPS எழுத்து பொறிக்கப் பட்டிருக்கும்

6. இணைக் காவல்துறை கண்காணிப்பாளர் (Joint Superintendent of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அல்லது டி.பி.எஸ். அசோக சின்னம் அதனடியில் ஒரு நட்சத்திரம்.

7. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police)

தோள்பட்டையில் ஐ.பி.எஸ். அசோக சின்னம் (அல்லது) டி.எஸ்.பி. மூன்று நட்சத்திரங்கள். மேலே குறிப்பிட்ட எல்லா அதிகாரிகளும் கருநீல ஊதா கயிறு (Dark Blue Whistle Card) இடது தோளில் அணிவார்கள்.

8. வட்ட ஆய்வாளர் (Inspector of Police)

டி.பி. கருநீலம் , சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 3 நட்சத்திரங்கள்

9. உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police - SI)

டி.பி. கருநீலம், சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 2 நட்சத்திரங்கள் அனைவரும் காக்கி நிற ஊதா கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கரும் பச்சை நிற ஊதா கயிறு அணிவார்கள். சார்பு ஆய்வாளரிலிருந்து காவல்துறை இயக்குநர் வரை உள்ள அதிகாரிகள் தங்கள் பதவிக்கேற்ப அசோகச் சின்னமுடைய தவிட்டு (அல்லது) பழுப்பு நிறத்தால் (Brown) இடைக் கச்சைகளும் (Belt), அதே
நிறமுடைய காலணிகளும் (Shoes) அணிகிறார்கள். தலைஅணி தொப்பி (Pea Cap) அல்லது பெரோ (Beret) ஆகும்.

10. தலைமைக் காவலர் (Head Constable)

மேற்கையில் மூன்று பட்டை

11. முதல்நிலைக் காவலர் (Police Constable Grade- 1)

மேற்கையில் இரண்டு பட்டை

12. இரண்டாம் நிலை காவலர் (Police Constable Grade- II)

காவலர் பட்டை அணிவதில்லை.தொப்பி: நீலநிற செர்ஜ் தொப்பி, தலைமைக் காவலர் தொப்பியில் வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப்பட்டிருக்கும். காவலர்கள் தவிட்டு நிற தோல் இடைகச்சையும், முதல்நிலை காவலரும், தலைமைக் காவலரும், பிக்கில் உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றனர். காலணி எல்லோருக்கும் கருப்பு நிறமாகும்.




காவல்துறை சரகங்கள் (Police Range)

காஞ்சிபுரம்,
சேலம்,
செங்கல்பட்டு,
வேலூர்,
விழுப்புரம்,
கோயம்புத்தூர்,
திருச்சி,
தஞ்சாவூர்,
மதுரை,
திருநெல்வேலி,
திண்டுக்கல் மற்றும்
இராமநாதபுரம்.

காவல்துறை ஆணையகங்கள் (Police Commissionarate)

சென்னை,
சென்னை புறநகர்,
மதுரை,
சேலம்,
கோயபுத்தூர்,
திருச்சி,
திருநெல்வேலி

போலீஸ் மாவட்டங்கள்

தமிழ்நாடு 31 போலீஸ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
சென்னை,
அரியலூர்,
திருப்பூர்,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
கடலூர்,
விழுப்புரம்,
திருவண்ணாமலை,
வேலூர்,
சேலம்,
நாமக்கல்,
தர்மபுரி,
கோவை,
ஈரோடு,
நீலகிரி,
திருச்சி,
கரூர்,
பெரம்பலூர்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
மதுரை,
தேனி,
இராமநாதபுரம்,
விருது நகர்,
சிவகங்கை,
திருநெல்வேலி,
தூத்துக்குடி,
கன்னியாகுமரி,
திண்டுக்கல் ஆகியன.




தமிழ்நாடு காவல்துறை -முக்கிய பிரிவுகள்

1. சட்டம் & ஒழுங்கு (Law & Order)

2 குற்றப்புலனாய்வு (Crime Branch)

3. குற்றப்பிரிவு நுண்ணறிவு பிரிவு (CID, Intelligence)

4. போக்குவரத்துப் பிரிவு (Traffic)

5. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition)

6. குடியுரிமை பாதுகாப்பு பிரிவு (Protect of Civil Rights)

7. இருப்புப் பாதை காவல் பிரிவு (Railway Police)

8. சிறப்பு காவல்படை (Armed Police)

9. குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வுத் துறை (Civil Supplies, CID)

10. சிறப்பு புலனாய்வுத்துறை (SBCID)

11. கடற்கரை பாதுகாப்பு (Coastal Security Group)

12. பயிற்சி பிரிவு (Training)

13. உள்நாட்டு பாதுகாப்புப் படை (Civil Defence and Home Guards)

14. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)





தமிழக காவல்துறையின் சிறப்பு பிரிவுகள்:

கமாண்டோ போலீஸ் படை (CommandoForce)

இதன் முக்கியப் பணி தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவது. இதில் உயர் அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 300 நபர்கள் இப்படையில் உள்ளனர். இதற்கான கமாண்டோ பள்ளி சென்னையில் செயல்பட்டு வருகிறது.

கோவில் பாதுகாப்பு படை (TempleProtection Force)

1000 இரண்டாம் நிலை காவலர்களும், 3000 முன்னாள் இராணுவத்தினரும் இப்படையில் பணியாற்றி வருகின்றனர். கோவில்களையும், அவற்றின் சொத்துக்களையும் பாதுகாப்பதற் காக இப்படை உருவாக்கப்பட்டு செயல்புரிந்து வருகிறது.

விரைவுப்பணி காவல் அமைப்பு (SwiftAction Force)

மத வன்முறைகள், வகுப்புக் கலவரங்கள் நடைபெறும் சமயங்களில் விரைந்து சென்று அவற்றைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கத் திற்காக இக்காவல் அமைப்பு அமைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள், காவலர்கள் என இப்படையில் உள்ளனர்.

ரயில்வே காவலர் படை (Railway Police)

ரயில் நிலையத் திருட்டுக்கள், குற்றங்கள் தடுப்பு, பயணிகளுக்குப் பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள் பாதுகாக்கின்றது. தமிழக அரசின் ரயில்வே காவலர்படை ரயில் நிலையங்கள், பயணிகள் பாதுகாப்பு அளிக்கும் அமைப்பாகும்.

பெண் காவலர் படை (Women Police)

இளம் பெண்கள், குழந்தைகளை மீட்க உதவுதல், வரதட்சனை கொடுமைகளைத் தடுத்தல், ஆண் காவலர்களுக்கு உதவியாக இருப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். தற்சமயம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

கடலோர பாதுகாப்புக் குழு (Coastal Security Group)

கடலோரங்களிலிருந்து எரிபொருள் பிற நாடுகளுக்கு கடத்தப்படுவது, மருந்துப் பொருட் கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது, வெடிபொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவது, உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது போன்ற விவகாரங்களைக் கடலோரப் பாதுகாப்புக் குழு ஏற்று செயல்படுகிறது. எண்ணூரிலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள 1000 கிலோமீட்டர் தூரமுள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியை
இப்பிரிவினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

குடிமை பாதுகாப்புப் பிரிவு (Civil Defence)

சென்னை, கல்பாக்கம் ஆகிய இரு நகரங் களும் குடிமைப் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப் பாட்டின் கீழ் வரும் நகரங்களாகும். நெருக்கடி காலங்களில் எதிரிகளின் படையெடுப்புக் காலங்களில் உயிர்களை, சொத்துக்களைப் பாதுகாக்கவும் தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தொடரவும் இப்பிரிவினர் பாடுபடுகின்றனர்.

உள்நாட்டு பாதுகாப்புப் படை (HomeGuards)

சாலைப் போக்குவரத்து, இரவு காவல், கோவில் விழாக்களுக்குப் பாதுகாப்பு, புள்ளிவிவரங்கள் சேகரிப்பு, அவசரக் காலங்களில் உதவி செய்தல், கொடி நாளுக்கு நிதி திரட்டுவது, பெரிய தலைவர்களின் பாதுகாப்பு இவற்றிற்கு உள்நாட்டு பாதுகாப்புப் படையின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. தன்னார்வத் தொண்டர்களையே முழுக்க கொண்ட இப்படை 10,566 நபர்கள் (இதில் 550 பெண்கள்) கொண்ட படை
பிரிவாக உள்ளது.

விபச்சாரத் தடுப்புப் படை (Anti-ViceSquad)

விபச்சாரத் தடுப்புச் சட்டத்தை அமுலாக் கும் பொறுப்பை இப்படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மதுவிலக்கு அமல் பிரிவு (ProhibitionEnforcement wing)

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் இப்பிரிவினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக தமிழகத்திற்கு மதுபானங் களைத் தடுக்கும் பணியையும் இது செய்கிறது.

சிலைத் திருட்டுப் பிரிவு (Idol Wing)

முக்கியமான சிலைத் திருட்டு வழக்கு களில்இப்பிரிவினர் மாவட்டக் காவலர்களுக்கு உதவி செய்கின்றனர். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள், கள்ளச் சந்தை வியாபாரிகள், தரகர்கள், கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அவற்றைத் தடுக்கின்றனர்.

பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)

பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமûவாகி விடுவது, பண மோசடி போன்ற பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இப்பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.

போதை மருந்துகள் கடத்தல் தடுப்புநுண்ணறிவுத் துறை (Narcotic Intelligence Bureau)

போதைப் பொருட்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் துறை இது. 123 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறது.

சிறப்பு அதிரடிப்படையினர் (Special Task Force)

தீவிரமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழும்போது சிறப்பு அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies CID)

கள்ளக் கடத்தல்காரர்களைச் சமாளிப்பது, உணவில் கலப்படம் செய்வோரைக் கண்டறி வது தமிழக எல்லைப் புறங்களில் சட்ட விரோதமாக அத்தியாவசியப் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதை தடுத்தல் போன்ற பணிகளை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.

வீடியோ தடுப்புப் பிரிவு (Video- Piracy Cell)

திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் பணியை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.

கொள்ளைத் தடுப்புப் பிரிவு (Anti- DacoityCell)

கொள்ளை, வழிப்பறி, பணத்திற்காகக் கொலைகளைச் செய்வது போன்ற குற்றங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது.

தீண்டாமை ஒழிப்புக் காவலர் (Protection of Civil Rights)

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின்மீது இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் காவல் பிரிவு உருவாக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றம் புரிவோருக்கு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் உண்டு.வணிகக் குற்ற விசாரணை பிரிவு (Commercial Crimes Investigation Wing CID)கூட்டுறவுத் துறையின் பதிவாளரால் குறிப்பிடப்படும் வழக்குகளை இப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர்.தமிழ்நாடு சிறப்பு
காவல்படை (Tamilnadu Special Police Batallions)சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், வகுப்புக் கலவரங்களைத் தடுக்கவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் காவல்துறைக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பணிபுரிகிறது.புலனாய்வுப் பிரிவு (Intelligence Wing) இப்பிரிவு புலனாய்வு செய்திகளைப் பெறுதல், அவற்றை ஆராய்தல் பின்பு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தல்
போன்ற பணிகளைச் செய்து வருகின்றது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைக் குழுமம்(Tamilnadu Uniformed Services Recruitment Board)காவலர் தேர்வை எந்தவித குறைபாடுகளும் குற்றங்களுமின்றி, நடத்துவதற்காகவே 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த தேர்வாணைக் குழுமத்தை நிறுவியது. காவல்துறையின் இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்களைத் தேர்வு செய்தல், காவல் துறை உதவி ஆய்வாளர் களைத் தேர்வு செய்வது போன்ற
பணிகளையும், தீயணைப்புத் துறைக்கு தீயணைப்பு வீரர்களை யும் சிறைத்துறைக்கு இரண்டாம் நிலை விடுதிக் காப்பாளர் (ஆண்/பெண்)களைத் தேர்வு செய்யும் பணியையும் இவ்வாரியம் செய்து வருகிறது.பாதுகாப்புப் பிரிவு ரகசியக் காவலர் (Security Branch CID)முக்கியக் காவலர்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான பணிகளை இப்பிரிவினர் கவனித்துக் கொள்வர். கொலை மிரட்டலுக்கு
அடிக்கடி இலக்காகும் தலைவர்களுக்கும், முக்கிய மனிதர்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கின்றனர்.சிறப்புப் பிரிவு ரகசிய காவலர் (Special Branch CID)மதக் கலவரங்கள், வகுப்புக் கலவரங்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அனுப்பும் பொருட்டு இப்பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரிவினர் நாட்டின் நிலைமைகளை உன்னிப்பாக ஆய்வு செய்து மாவட்டக் காவல்
கண்காணிப்பாளர் களுக்கும், நகரக் காவல் ஆணையாளருக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வர்


தமிழ்நாட்டில் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள் பற்றிய விபரம்:






S.No
CRIME HEAD
2008
2007
2006
2005
2004


1
Murder

1630

1521

1273

1365

1389

2
Murder for Gain

105

102

89

74

73

3
Dacoity

100

88

95

73

72

4
Robbery

662

495

450

437

464

5
Burglary

3849

3717

3300

3738

4147

6
Theft

15019

13217

13651

15851

17530


TOTAL

21365

19140

18858

21538

23675

MAJOR CRIME TRENDS - TAMIL NADU



INCIDENCE OF CRIME AGAINST WOMEN CASES
FROM 2006 TO 2008 IN TAMIL NADU



S.NO

HEADS

2008
2007

2006


1
RAPE

573

523

457

2
DOWRY DEATH

207

208

187

3
MOLESTATION

1705

1558

1179

4
SEXUAL HARASSMENT

974

875

852

5
CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES

1648

1976

1248

6
KIDNAPPING AND ABDUCTION OF WOMEN AND GIRLS

1155

1097

718

7
DOWRY PROHIBITION ACT

262

368

81


TOTAL

6524
6605

4722



காவல் துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector) க்கான தகுதிகள்:

QUALIFICATIONS / NORMS / MARKS FOR RECRUITMENT OF
MEN SUB-INSPECTORS OF POLICE



Sl. No.

REVISED - As per G.O.Ms.No.953, Home(Pol.III) Department Dated 07-10-2002


1.
Age
20 - 28

2.
Age Relaxation
SC/ST-33 - Ex-Servicemen - Within 3 Years from the date of discharge subject to a maximum of 45 years

3.
Height Minimum
168 cms.

4.
Height Relaxation
SC/ST 165 cms.

5.
Chest Normal 81 cms. with an expansion of 5 cms.
81 - 86 cms.

6.
Educational Qualification
Any Degree

7.
Physical Efficiency Test

Endurance Test - Running 1500 Mtrs. in 7 Minutes. Successful candidates have to undergo PET as follows:-
(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)


-

1* = 2 marks
2* = 5 marks

Running 100 mtrs. (or) 400 mtrs.
100 mtrs.
15.00 sec.
13.50 sec.

400 mtrs.
80.00 sec.
70.00 sec.

Long Jump (or) High Jump
Long Jump
3.80 mtrs.
4.50 mtrs.

High Jump
1.20 mtrs.
1.40 mtrs.

Rope Climbing
Rope Climbing
5.0 mtrs.
6.0 mtrs.

8.
Written Test
Minimum Qualifying marks - 35 marks

Test
Maximum Marks

General Knowledge Test
45

Psychology Test
25


-
Extra Qualification:
National Service Scheme/
National Cadet. Crops/
Sports/Games
5


-
Total
75

9.
Viva-Voice
Viva-voice - 10 Marks

10.
Sports Quota
Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10% the gap be filled up by the dependents of the serving Police Perosnnel.

11.
Quota for dependents of serving police personnel, ministerial staff etc.
10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards / dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.

12.
Written Examination
Minimum 35 marks


Note :
1. If Departmental candidates from the category of the Police Constables and Head Constables are not available to fill up the 20% quota against direct recruitment for the post of Sub-Inpsector of Police, then candidates from open market be selected and the vacancies filled up accordingly.
2. The total percentage under Serial Nos. 10 & 11 should not exceed 20%.


QUALIFICATIONS/ NORMS/ MARKS FOR RECRUITMENT OF
MEN PCs/ FIREMEN/ JAIL WARDERS



Sl.No.

REVISED - As per G.O.Ms.No.953, Home (Pol.III) Department Dated 07.10.2002


1.
Age
18 - 24

2.
Age Relaxation
SC/ST - 29 - Ex-Servicemen - Within 3 years from the date of discharge subject to a maximum of 45 years

3.
Height Minimum
168 cms.

4.
Height Relaxation
SC/ST 165 cms.

5.
Chest Normal 81 cms. with an expansion of 5 cms.
81 - 86 cms.

6.
Educational Qualification
X Standard or SSLC old pattern

7.
Physical Efficiency Test

Endurance Test - Running 1500 mtrs. in 7 minutes. Successful candidate have to undergo PET as follows:-

(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)



1* = 2 marks
2* = 5 marks

Running (100 mtrs. or 400 mtrs.)
100 mtrs.
15.00 sec.
13.50 sec.

400 mtrs.
80.00 sec.
70.00 sec.

Long Jump (or) High Jump
Long Jump
3.80 mtrs.
4.50 mtrs.

High Jump
1.20 mtrs.
1.40 mtrs.

Rope Climbing
Rope Climbing
5.0 mtrs.
6.0 mtrs.

8.
Written Test
Minimum qualifying marks - 40 marks

Test
Maximum Marks

General Knowledge Test
50

Psychology Test
30


-

Extra Qualification:
National Service Scheme /
National Cadet Corps /
Sports/Games.
5


-
Total
85

9.
Viva-Voice
Viva-Voice dispensed with

10.
Sports Quota
Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10%, the gap be filled up by the dependents of serving Police Personnel. This norm is also applicable to the dependent of serving Prison Personnel in the case of selection of Jail Warders.

11.

i) Quota for dependents of serving police personnel, ministerial staff etc.
ii) Quota for dependents of serving prison personnel, ministerial staff etc.
i) 10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.
ii) 10% quota under direct recruitment of Jail Warders for dependents of the serving prison personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated prison personnel and 10% out of 10% for the dependents of ministerial staff of prison dependent. (G.O.Ms.No.362, Home (Prison.II) Department dated 25.04.2003).

12.
Written Examination
Minimum 40 marks.


Note:
1. The total percentage under Serial Nos. 11 & 12 should not exceed 20%.
2. Ex-servicemen served as Drivers, Auto-mechanic, Auto-electricians and Armourers are exempted from undergoing Physical Measurement Test and Physical Efficiency Test for the post of Gr.II. Police Constables/ Jail Warders.
Rajaghiri Gazzali
















Rajaghiri Gazzali