Saturday, July 26, 2008

வாலிநோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வாலிநோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வாலி நோக்கம் அருகே வனத்துறை பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயல்குடி பகுதியில் வாலிநோக்கம் அருகே உள்ளது கீழமுந்தல் கிராமம். இந்த கிராமத்திலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் ரிசர்வி பாரஸ்ட் ஏரியா இருக்கிறது. இப்பகுதி கடற்கரையை ஒட்டிய பகுதியாகும்.

கடற்கரையும்,மரங்கள் நிறைந்த வனப்பகுதியும் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இவருக்கு 2 ஏக்கர் நிலம் ரிசர்வ் பாரஸ்ட் அதிகாரிகளாலேயே பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அந்தப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு வெளியாட்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டுவருகிறது. ஒரு தனி நபருக்கு அரசின் நிலம் பட்டா போடப்பட்டு கேளிக்கை விடுதி கட்டப்பட்டு அதிகாரிகளின் ஆதரவோடு ஒதுக்கப்பட்ட பகுதியில் மிட் நைட் ஆட்டம்போடுவது ஏன் ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தகுந்த பதில் தர மாவட்ட கலெக்டரும் எஸ்.பி.யும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்தூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி களுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,பரமக்குடி(தனி),திருவாடானை,முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்,வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகள் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 18 வயது ஞீர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இதற்குகால அவகாசம் 8.8.08 முடிய வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.