Thursday, August 28, 2008

இளைஞர் நற்பணிமன்ற விழா

இளைஞர் நற்பணிமன்ற விழா



கடலாடி, ஆக. 28: கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றமும், நேரு யுவகேந்திராவும் இணைந்து சுதந்திர தினவிழா, தேசிய விழிப்புணர்வு விழா, சாதி,மத நல்லிணக்க விழா, இளையோர் எழுச்சி விழா, நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற 12-ம் ஆண்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவர் எல். விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ம. பாலசுப்பிரமணியன், கடலாடி மறவர் சமூக உறவின்முறை தலைவர் எம். மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி. நாகராஜன் வரவேற்றார்.

விழாவில் கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த. ராஜசேகர், "தேசிய வலிமை' மாத இதழ் ஆசிரியர் வே. சுவாமிநாதன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் என்.கே. முனியசாமி பாண்டியன், நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்கச் செயலர் வத்தலகுண்டு கவிஞர் செ. செந்தில், தாலுகா மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் வி. மயில்வாகனன், நேதாஜி தேசிய இயக்கச் செயலர் பொறியாளர் சு.க. கமல் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

கவிஞர் முகாரா "தொடக்கம்' எனும் தலைப்பில் கவிதை வாசித்தார். சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எம். சசிரேகா (10-ம் வகுப்பு), கே. அரியநாச்சி (பிளஸ் 2) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பத்திர எழுத்தர் க. முத்துராமலிங்கம், முன்னாள் ராணுவவீரர் எம். மீனாட்சி சுந்தரம், ஊராட்சி முன்னாள் தலைவர் சி.அ.ச. அய்யம்பெருமாள் நாடார், நகர் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். ராமலிங்கம், காமராஜர் நர்சரி பள்ளித் தாளாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ப. பாலமுருகன் நன்றி கூறினார்.

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு



கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.