Wednesday, July 16, 2008

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.
உதவித் தொகை பெற விரும்புவோர்,

தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


முதுகுளத்தூர், ஜுலை.16-

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரிசி கடத்தல்

கடலாடி அருகே உள்ள பொதிகுளத்தில், நள்ளிரவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த ஒரு கும்பல் 240 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை பின் னால் நின்ற லாரியில் கடத்தி கொண்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டு போய் பார்த்தனர்.

இது பற்றி கிராம மக்கள் கேட்டதற்கு அரிசி கடத்தல் கும்பல் கூறிய பதில் அவர் களுக்கு சந்தேகத்தை ஏற்படுத் தியது. உடனே அவர்கள் ராம நாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேல னுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தர வின் பேரில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு நந்த குமார் மேற்பார்வையில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சிவஞா னமூர்த்தி, ஏட்டுகள் சக்திவேல் முருகன், முத்தையா, முத்துக் குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று அந்த கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த வேல்ச்சாமி மகன் ராஜா (வயது 28), குமாரசாமி மகன் லோகநாதன்(28), லாரி டிரைவர் சுரேஷ், கடலாடி அருகே உள்ள நரசிங்க கூட் டம் கிராமத்தை சேர்ந்த கோட் டைச்சாமி(52), அருப்புக் கோட்டை சோமசுந்தரம் மகன் பிரபாகரன்(46) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேஷன் அரிசியை பொள்ளாச்சிக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கட லாடி போலீசார் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு விருதுநகர் மண்டல அத்தியா வசிய உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் விரைந்து வந்து அரி சியை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் ஆகியவற்றை கடலாடியில் உள்ள சிவில் சப்ளை கிடங் கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து கைதான 5 பேரையும் மேல் விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்து சென்றார்.