Thursday, August 16, 2007

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்


சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.

பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.

தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, August 15, 2007

No comments: