Wednesday, October 31, 2007

முதுகுளத்தூர்-பரமகுடியில் ஜாதிக் கலவரம் வெடித்தது- ஆங்காங்கே மோதலில் பலர் காயம், பெரும் பதற்றம்

முதுகுளத்தூர்-பரமகுடியில் ஜாதிக் கலவரம் வெடித்தது- ஆங்காங்கே மோதலில் பலர் காயம், பெரும் பதற்றம்
புதன்கிழமை, அக்டோபர் 31, 2007


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரு ஜாதியினரிடையே மோதல் மூண்டது. கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் பலர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் தென் மாவட்டங்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பதட்டமான பகுதிகளில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

ஆனால் அதையும் மீறி பரமக்குடி, முதுகுளத்தூர், சத்திரக்குடி ஆகிய ஊர்களில் ஜாதிக் கலவரங்கள் ஏற்பட்டன.

தேவர் ஜெயந்தியைக் கொண்டாடியவர்களுக்கும், இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கல்வீச்சு, அடிதடி உள்ளிட்ட கலவரங்கள் ஆங்காங்கு நடந்தன.

இந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து இந்த ஊர்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/10/31/tn-communities-clash-passengers-injured.html

No comments: