Sunday, May 17, 2009

ராமநாதபுரத்தில் ஜெ.கே.ரித்தீஷ் வெற்றி

ராமநாதபுரத்தில் ஜெ.கே.ரித்தீஷ் வெற்றி

First Published : 17 May 2009 09:15:46 AM IST
Last Updated :

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கே. ரித்திஷ், அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தியை விட 69,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக தவிர பாரதிய ஜனதா கட்சியிந் வேட்பாளர் எஸ். திருநாவுக்கரசர், தேமுதிக சார்பில் அக்கட்சி மாவட்டச் செயலர் சிங்கை. ஜின்னா மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.

இதில், சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. வ. சத்தியமூர்த்தி-அதிமுக (225030) 2. ஜெ.கே. ரித்திஷ்-திமுக (294945), எஸ். திருநாவுக்கரசர்- பா.ஜ.க (1,28,322), பிரிசில்லா பாண்டியன்- பகுஜன் சமாஜ் (39,086),எஸ். சலிமுல்லாகான்- மனிதநேய மக்கள் கட்சி (21,439), எஸ். சிங்கை ஜின்னா- தேமுதிக (49,571), ஆர். முகம்மது ஆபித்அலி- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (1,496) இவர்களைத் தவிர சுயேச்சை வேட்பாளர்களான கே. காளிமுத்து (1,769), எஸ். சண்முகையா பாண்டியன் (1,119), எஸ். சுவார்ட்ஸ் துரை (961), கே. செல்லத்துரை (1,186), பாலமுருகன் (1,244), பி. பாஸ்கரன் (2,330), ஜி. முருகேந்திரன் (3,471), எம்.ஐ. ஜஹாங்கீர் (5,870).

15 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் 7,77,839. தள்ளுபடி செய்யப்பட்ட வாக்குகள் 496, செல்லாத வாக்குகள்-3.

வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, திமுக வேட்பாளர் ஜெ.கே. ரித்திஷ் முன்னிலையில் இருந்தார்.

இதில் அதிமுக 2-வது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி. 3-வது இடத்தையும், தேமுதிக 4-வது இடத்தையும் பெற்றன.

No comments: