Tuesday, October 6, 2009

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

ஏர்வாடி தர்காவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளதால் அப்பகுதியினர் வேதனை அடைந்துள்ளனர். கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி தர்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தலத்தை சிறப்பிக்கும் பொருட்டு இதை சுற்றுலா தலமாக மாற்ற அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால்இப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை அமைப்புகள் மற்றும் ஊராட்சி மூலமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும். அரசின் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும் யாத்ரீகர்களின் நலன் கருதி இத்திருவிழாவுக்காக தர்கா நிர்வாகம் கனிசமான தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிறது. சுகாதாரபணிக்கு ஊராட்சி நிர்வாகம் 50 சதவீத செலவை ஏற்கிறது. இதுவே சுற்றுலா தலமாக இருக்கும் பட்சத்தில் இங்கு வருபவர்களுக்கு இன்னும் கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், மாவட்டத்தின் வருவாய் அதிகரிக்கும். இது குறித்து ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் சுற்றுலா துறையினருக்கு பலமுறைவலியுறுத்தியும் பிரயோஜனம் இல்லை. தொடரும் புறக்கணிப்பால அப்பகுதியினர் மட்டுமின்றி வரக்கூடிய யாத்ரீகர்களும் வேதனையடைந்துள்ளனர். தொடர்ந்து கிடப்பில் இருக்கும் அரசின் சுற்றுலா தல அறிவிப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

No comments: