Thursday, February 19, 2009

முதுகுளத்தூர் சி.எஸ்.சி. நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

முதுகுளத்தூர் சி.எஸ்.சி. நிறுவனத்தில் கணினி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ் நாடு அரசின் தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் முதுகுளத்தூரில் இலவச கணிப்பொறி பயிற்சி நமது ஜமாஅத்தையும், நமது ஊரையும் சேர்ந்த பிளஸ்2 முடித்த 75 முஸ்லிம் மாணவ, மாணவியர்களுக்கு முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் பயிற்சி வழங்கி தமிழ் நாடு அரசின் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று 18-02-2009 புதன் மாலை 5.30 மணியளவில் முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனத்தில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி.எஸ்.அஹமது பசீர் ஆலிம் தலைமையில், முதுவை கவிஞர் ஹாஜி.உமர் ஜஃபர் ஆலிம் அவர்கள் கிராஅத் ஒத துவங்கியது.

ஹாஜி.எஸ்.அஹமது பசீர் ஆலிம் அவர்கள் தலைமையுரையில் நமது பெண்கள் உயர்கல்வியில் எவ்வளவு உயர்ந்த படிப்பாக இருந்தாலும் அவசியம் படிக்க வேண்டும் ஆனால் நமது கலாச்சாரம், நாம் முஸ்லிம் என்ற தனி தன்மையை எந்த இடத்திலும் நாம் விட்டு விட கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

முதுவை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் துரைபாண்டி, இஸ்லாம் பெண்கள் கல்விக்கு தரும் முக்கியத்தையும், திருமணம் முடித்த பின்னரும் உயர்கல்வியில் ஆர்வமுடன் கம்ப்யூட்டர் கல்வி பயின்றதை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்கள்.

முதுவை கவிஞர் ஹாஜி.உமர் ஜஃபர் ஆலிம் அவர்கள் கம்ப்யூட்டர் பரவலாக எல்லா இடத்திலும் கட்டாய பயன்பாட்டில் உள்ளது அதற்கு அரசு உதவியுடன் நமது பகுதியில் தரமான கம்ப்யூட்டர் கல்வியை ஹூமாயூன் வழங்கிய போதிலும், இத்துடன் முற்றுபுள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து திறமையை கம்ப்யூட்டர் பயன்பாட்டில் வளர்த்து கொள்ள வலியுறுத்தி பேசினார்கள்.

தேசிய நல்லாசிரியர் டாக்டர் ஹாஜி எஸ்.அப்துல் காதர் அவர்கள் அணைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாரட்டி பேசியதவது.
" நமது சமுதாயத்தில் பெண்கள் 1972 வரை 8ஆம் வகுப்புக்கு மேல் படிப்பது குறைவு, நமது பள்ளியில் 10ஆம் வகுப்பு வந்த பின் 10ஆம் வகுப்பு வரையிலும், அதை தரம் உயர்த்தி 12ஆம் வகுப்பு ஆக்கிய பின் நமது சமுதாய பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி பெறவும், இது போன்ற அரசு உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி பெறவும் தகுதி பெற்ற நீங்கள், உங்கள் குழந்தைகளை அதிக அளவில் உயர் கல்வி பெற செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சான்றிதழ் பெற்ற தாங்கள் வசதி பட்டால், கம்ப்யூட்டர் வாங்கி பயன்படுத்தி குழந்தைகளின் அறிவாற்றலை உயர்வடைய செய்ய வேண்டும்" என்றார்கள்.

முதுகுளத்தூர் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் கல்வி நிறுவன நிர்வாகி ஏ.காதர் முகையதீன் நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

No comments: