Sunday, November 4, 2007

மா.பொ.சி. குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை போட்டி

மா.பொ.சி. குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை போட்டி

சென்னை, நவ. 3: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் தமிழ்த் தொண்டு குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மாணவர்களின் இலக்கிய ஈடுபாட்டையும், ஆய்வு நோக்கையும் ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதமாக 40 ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் பரிசாக 5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும், பரிசு பெற்ற மாணவர் படிக்கும் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

தமிழகத்தின் 16 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரை 50 பக்கங்களிலிருந்து 60 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கோள் நூல்பட்டியலை இறுதியில் குறிப்பிடப்பட வேண்டும். மேடைப்பேச்சு, இதழியல், நூலாக்கம், இயக்கப்பணி ஆகிய துறைகளில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய ம.பொ.சி. குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதி மொழி, கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப் பேராசிரியரின் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரை வந்து சேரக் கடைசி நாள்: 2007 டிசம்பர் 31. கட்டுரைகள் அனுப்பவும், மேலும் தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முனைவர் பா. வளன் அரசு, தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002, தொலைபேசி: 0462-2579967.

No comments: