Monday, August 18, 2008

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்


சென்னை, ஆக.18-

வெளிநாடு வாழ் இந்தியர் தினவிழா முதன் முதலாக சென்னையில் 2009 ஜனவரியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் விழா

ஒரு வெளிநாட்டினராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

7-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின விழாவை முதன் முதலாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த விழா 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு விழாவை முறைப்படி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இணையதளம்

9-ந் தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கலந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிறந்த பங்காற்றிய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கி கவுரவிக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைச்சகத்துடன், தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறது.

கண்காட்சிகளும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடத்தப்பட உள்ளன. விழாவில் பங்கேற்கும் உயர்நிலை குழுவினரை திருப்பதி, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பிரத்யேகமாக இணையதளம் ஒன்று(ஷ்ஷ்ஷ்.ஜீதீதீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ) வரும் 21-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. விழா குறித்த அனைத்து தகவல்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432782&disdate=8/18/2008&advt=2

No comments: