Monday, August 18, 2008

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


முதுகுளத்தூர், ஆக. 17: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், அபிராமம் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நர்சரி பள்ளி ஆகியவற்றில் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ. ஷாஜகான் தலைமையில், கல்விக்குழுத் தலைவர் எஸ். திவான் முன்னிலையில், தாளாளர்கள் எஸ். கமால்நாசர், சீனி முகம்மது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.

தலைமை ஆசிரியர்கள் ஓ.ஏ. முகம்மது சுலைமான், காதர்சா, விக்டோரியா உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நர்சரி பள்ளி, கண்ணா நர்சரி பள்ளி, ஊ.ஒ.பள்ளி, அரசுத் தொழிற்பயிற்சி நிலையம், சோணை-மீனாள் கல்லூரி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பாக்கியநாதன் தலைமையில், தாளாளர் எஸ். அப்துல்காதர் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ். பசீர் அகம்மது தலைமையில், தாளாளர் ஏ. முகம்மது இத்ரீஸ் கொடி ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர், ஆசிரியைகள் பலரும் பேசினர். சாரணர் மாணவர்கள் 8 பேருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

அபிராமம் வி.என்.எஸ்.உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, பேட்டை நடுநிலைப் பள்ளி, நத்தம் துவக்கப் பள்ளி, ஊ.ஒ.பள்ளி ஆகியவற்றில் கொடி ஏற்றப்பட்டது.

வலையபூக்குளம் கே.வி.சாலா நடுநிலைப் பள்ளி, நீராவி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, மண்டலமாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பம்மனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி, பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ராமசாமிபட்டி உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஊராட்சித் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சி. சோலையப்பன், பிரமுகர்கள் ஏ. பாம்புலு, சி. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இடைச்சூரணி ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துமுருகன் தலைமையில், ஊராட்சித் தலைவர் காளிமுத்துவும், பாப்பணம் ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில், ஊராட்சித் தலைவர் மாரியும் கொடி ஏற்றினர்.

No comments: