Saturday, August 16, 2008

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி



மதுரை, ஆக. 15: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சித் தொடர்பு மையம் சார்பில் "கலாசாரமும் பாரம்பரியமும்' எனும் தலைப்பில் குறும்பட போட்டி நடைபெற உள்ளது.

பாரம்பரியக் கலைகள், கலாசாரங்கள், நிர்வாக முறைகள், பழங்குடிகளின் நாகரிகங்கள், தொழில் நுட்பங்கள், விழாக்கள், வரலாறு மற்றும் தொல் சமூக நிகழ்வுகள் தொடர்பாக குறும்படங்கள் அமைந்திருப்பது அவசியம்.

உலக மொழிகளில் தயாரிக்கப்பட்டிருப்பினும் துணைத் தலைப்புகள் அல்லது உரையாடல்களின் எழுத்து வடிவம் ஆங்கிலத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறும்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இயக்குநரின் சுய சிந்தனையில் உருவாகியிருத்தல் அவசியம். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பில் உறுதுணையாய் இருந்த நிறுவனங்கள் இப்போட்டியில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களாவர். விசிடி, டிவிடி அல்லது விஎச்எஸ் வடிவத்தில் குறும்படங்களை அனுப்பலாம். படத்தின் மூலப் பிரதியை அனுப்புதல் கூடாது. விண்ணப்பங்கள் மற்றும் விளக்க அறிக்கையை ஜ்ஜ்ஜ்.க்ட்ஹய்.ர்ழ்ஞ்/க்ச்ச் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வியாளர்கள், இதழாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 15.

மேலும் விவரங்களுக்கு தானம் அறக்கட்டளை, வளர்ச்சித் தொடர்பு மையம், 7-இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை-625 016 (தொலைபேசி எண் 0452- 4353983) எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816000945&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

No comments: